Cinema

Actress Radha, Biodata, Family, Husband, Daughter, Hotels, Height, Salary, Wiki, Biography, Real Name, Award, Movies, Photos, Images

Actress Radha, Biodata, Family, Husband, Daughter, Hotels, Height, Salary, Wiki, Biography, Real Name, Award, Movies, Photos, Images

1980-ல் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்களில் மிக முக்கியமான நடிகை தான் ராதா. இவரை பற்றி நாம் அறியாத பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த கட்டூரையில் பார்ப்போம்.

ஆரம்பவாழ்க்கை:

உதயா சந்திரிகா என்பது தான் இவருடைய உண்மையான பெயர். திரை வாழ்க்கைக்காக தனது பெயரை ராதா என்று மாற்றி உள்ளார்.

ஜூன் மாதம் 3 ம் தேதி 1965 இல் கேரளாவின் கல்லாரா என்ற இடத்தில் இவர் பிறந்துள்ளார். தற்போதைய வயது 56 ஆகும்.

சினிமாவில் ஆரம்பம்:

1981 ல் வெளிவந்த ” அலைகள் ஓய்வதில்லை “ என்கிற படம் தான் ராதா நடித்த முதல் திரைப்படம். இதில் மேரி ( Mary )  என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்தார்.

actress radha movies
radha’s old movie

படம் சூப்பர் ஹிட் அடித்து ராதாவை மகிழ்ச்சி மழையில் ஆழ்த்தியது.  இதை தொடர்ந்து அதே வருடத்தில் டிக் டிக் டிக் ( Tik Tik Tik ) படத்தில் ராதா என்ற ரோலில் நடித்தார்.

படவாய்ப்புகள் படையெடுத்தன:

முதல் இரண்டு படங்கள் வெற்றி அடைய 1982 ல் படவாய்ப்புகள் படையெடுக்க தொடங்கியது. கிட்டத்தட்ட பதினான்கு ( 14 ) படங்கள் கமிட் ஆகி நடித்தார். 

அதில் பெரும்பான்மை  படங்கள் வெற்றி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த 14 படங்கள் :

1. காதலித்து பார்

2.  அதிசயபிறவிகள்

3.  துணை

4.  ஆயிரம் முத்தங்கள்

5.  பக்கத்துக்கு வீடு ரோஜா

6.   ஆனந்த ராகம்

7.    நேரம் வந்தது

8.   வாலிபமே வா வா

9.  கண்ணே ராதா

10. காற்றுக்கென்ன வேலி 

11.  இல்லன் ஜோடிகள் 

12.  கோபுரங்கள் சாய்வதில்லை

13.  காதல் ஓவியம்

14.  எங்கேயோ கேட்ட குரல்

இத்தனை படங்களில் நடித்து தனக்குயென தனி மார்க்கெட்டையே அந்த காலகட்டத்தில் உருவாக்கினார். இவ்வளவு  படம் நடித்ததால் லட்சக்கணக்கில் அந்த சமயத்திலேயே சம்பாதித்தார்.

then VS now look of actress radha movies - family - photos
then VS now

ரஜினியை முதல்முறை பார்த்த அனுபவம்:

ராதா  அவர்கள் ரஜினியை முதல்முறை “ஆடு புலி ஆட்டம் ” படத்தில் தான் பார்த்தாராம். அந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வில்லனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

அப்போது இவங்க பள்ளியில் படித்துவந்த வயது தானாம், அந்தசமயத்தில் பைக் இல் யாராவது ஆண்மகன் சென்றாலே அட்ராக்ட்டிவ் ஆயிருவேன். அப்படி இருக்கும்போது ” ஆடு புலி ஆட்டம் ” படத்தில் அவர் ( ரஜினி ) பைக்கில் ஸ்டைலாக ஓடிக்கொண்டே சிகரெட்டை பிடித்து மற்றும் சேவிங்-லாம்  செய்து வருவார்.

அதை பார்த்து செம இம்ப்ரெஸ் ஆனேன் என ராதா குறிப்பிடுகிறார். 

Actress Radha, Biodata, Family, Husband, Daughter, Hotels, Height, Salary, Wiki, Biography, Real Name, Award, Movies, Photos, Images

முதல் விருது:

1985 ல் இவர் நடித்த ‘ முதல் மரியாதை ‘ என்ற திரைப்படத்திக்காக  பிலிம்ஃபர் ( Filmfare Award ) விருதையும் வென்றார். இது இவருக்கு வாழ்வில் மிக மகிழ்ச்சியை கொடுத்தது.

ராதா எத்தனை மொழி படங்களில் நடித்தார்:

1.  மலையாளம் சினிமா

2.  கன்னட சினிமா

3. தெலுங்கு சினிமா

4.  தமிழ் சினிமா 

இந்த நான்கு மொழி சினிமா இண்டஸ்ட்ரியில் இவர் பணிபுரிந்துள்ளார். தமிழ்,  தெலுங்கு, கன்னட மற்றும் மலையாளம் என இவர் நடித்த மொத்த திரைப்படங்கள் 130 ஐ தாண்டி இருக்கும்.

பெருமை தேடி தந்தவை:

இவங்க நூறுக்கும் மேற்பட்ட படத்தில் நடித்திருந்தாலும் இவங்களுக்கு பெருமை சேர்த்த சில படங்களின் பெயரை ( தமிழ்ப்படங்கள் ) பாப்போம். 

  • அலைகள் ஓய்வதில்லை
  • ஆனந்த ராகம்
  • முதல் மரியாதை
  • அபூர்வ சஹோதரிகள்
  • பாயும் புலி
  • எங்க சின்ன ராசா
  • சட்டம்  ஒரு விளையாட்டு
  • மனைவி ஒரு மாணிக்கம்
  • சிகரம்
  • சாந்தி எனது சாந்தி

அழகிய குடும்பம் :
radha's husband - businessman - hotelier
radha’s husband

ராஜசேகரன் என்கிற நபரை ராதா 1991, செப்டெம்பர் மாதம் 10 தேதி கல்யாணம் செய்தார். ராஜசேகரன் நக்ஷத்திர ஹோட்டல் அதிபர்.  இந்த தம்பதிகளுக்கு தற்போது ரெண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

மூத்த மகள் பெயர் கார்த்திகா நாயர் , இளைய மகள் பெயர் துளசி நாயர் மற்றும் மகனின் பெயர் விக்னேஷ் நாயர்.

பெற்ற பெரும் விருதுகள் :

1.  FilmFare விருது

2.  கலைமாமணி

3. சினிமா எக்ஸ்பிரஸ்

மேலே குறிப்பிட்டுள்ள மூன்று விருதுகளை தனது ஆக்கியுள்ளார்.

பிடித்த பாடல்:

இவருக்கு மிகவும் பிடித்த பாடலில் ஒன்று தான் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் வரும் காதல் ஓவியம்  என்ற பாடல்.

அந்த பாடலில் இவர் வைட் ( white ) உடையணிந்து வருவார் ( christian wedding dress ) இந்த மாதிரி உடையை அவர் அணிவது அதுதான் முதல்முறையாம். அந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சி தந்ததாக குறிப்பிடுகிறார்.

தவறவிட்ட விருது:

முதல் மரியாதையை படத்தில் நடித்ததுக்காக ( actress radha movies ) தேசிய விருது ராதாவுக்கு கிடைக்க வேண்டியதாக இருந்ததாம், ஆனால் ராதிகா இவங்களுக்கு டப்பிங்  ( Dubbing ) பேசியதால் தேசிய விருதை இழக்க நேரிட்டது.

விருதுகளுக்காக  ஏங்காத குணம்:

அலைகள் ஓய்வதிலைக்கு பிறகு இவங்களுக்கு வந்த பல கதாபாத்திரங்கள் கவர்ச்சி ரோல் தானாம் ( glamour role ) அதனாலேயே ஒவ்வொரு வருடமும் விருது விழா என்று வந்தால் அதில் தனக்கு விருது கிடைக்குமா என்றெல்லாம் பார்க்க மாடங்களாம்.

குறிப்பாக “காதல் பரிசு” என்ற படத்தில் ராதா உலகநாயகன் கமல் உடன் இணைந்து நடித்து இருந்தார். இவரின் ( actress radha ) அக்காவும் இந்த படத்தில் நடித்திருந்தார்.

அப்போது ஒருவர் இந்த படத்திக்காக உங்களுக்கு விருது கிடைக்க போகிறது என்று இவர் காதில் போட்டுள்ளார். ஆனால் விருது அந்த வருடம் சுகாசினிக்கு தான் கிடைத்தது.

” என்னை விட சுகாசினி நல்ல படம் மற்றும் கதாபாத்திரங்களில் நடித்ததால் அந்த விருதுக்கு உரியவர் ஆனார் ”  – ராதா…

சிவாஜியுடன் நடித்த அனுபவம்:

‘ பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும் ‘ என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல தான்

அவரோட நடித்ததால் நல்ல வலிமையான ரோல் கிடைத்ததால் அப்படத்தில் ( முதல் மரியாதை ) நன்றாக நடிக்க முடிந்தது.

radha about shivaji

பட தோல்வி:

படத்தோல்விகளை இவர் எவ்வாறு எதிர்கொண்டார் என்றால்,  ஒரு படம் வெற்றியை தருதோ அல்லது தோல்வியை தருதோ நான் அதை பற்றி நெனைக்க மாட்டான். அதுக்கான நேரமும் அப்போது எனக்கு இல்லை.

அடுத்தது படங்களில் கமிட் ஆகி பிசி ஆகவே  இருந்ததால், அதை பற்றி சிந்தித்து பார்க்க மாட்டேன் என்று குறிப்பிடுகிறார்.

இளையராஜா :

ஒரு படத்திற்கு ஹீரோ எவ்வளவு  முக்கியமோ இயக்குனர் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு இசையமைப்பாளரும் முக்கியம் அந்த வகையில் அந்த காலகட்டத்தில் இளையராஜா தான் பெரிய பெரிய படங்களுக்கு இசையமைப்பார்.

அந்தவகையில் அதிக படங்களில் இளையராஜாவின் இசையில் நடித்து உள்ளேன் இது தனக்கு மிக பெருமையான விசியம் என கூறுகிறார்.

சிகரம் – SPB :

SP பாலசுபராமணியம் அவரோட நடித்த அனுபவம் மறக்கமுடியாது. SPB அவர்கள் கூச்சமுடைய நபராக நான் பார்த்தேன். செட்டில் அவரின் நடிப்பை பார்த்து திரைப்படம் எப்போது வரும் என்று காத்திருந்து பார்த்தேன் மிகவும் பிடித்தது.

நானும் அக்காவும் பேசினோம் இன்னும் சில படங்களில் இவருடன் (  SPB ) ஒர்க் செய்ய வேண்டுமென, அவரின் பாட்டுதான் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என எங்கு பார்த்தாலும். அதனால் ஒரு ரசிகையாக தான் அவரை சிகரம் படப்பிடிப்பில் பார்த்தேன் என்று சொல்கிறார்.

கூடவே அவர் கூட இன்னும் பழகி இருக்கலாமே , பேசியிருக்குலமே என்றும் தோணுகிறது என ராதா குறிப்பிடுகிறார்.

அதிகம் பேசமாட்டான் :

ஷூட்டிங்கில் நான் அதிகம் பேசவே மாட்டேன் யார்கிட்டயும் அதற்கு முக்கிய முதல் காரணம் மொழி தான். தமிழ் அந்த நேரத்தில் நன்றாக தெரியாததால் அவ்வாறு நடந்து கொள்வேன்.

எங்கேயோ கேட்ட குரல்:

ரஜினி சாரை பார்த்தாலே மனப்பாடம் செய்த எல்லா வசனமும் மறந்து போகும், ” எங்கேயோ  கேட்ட குரல் “

படத்தில் நடிக்கும் போது வசனத்தை நன்றாக மனப்பாடம் செய்வேன் ( actress radha movies ). இருந்தாலும் வசனம் பேச பேச ரஜினி சாரை பார்த்ததும் சொதப்பிருவேன்.

அந்தமாதிரி ரெண்டு மூன்று Take  எடுத்தும் ரஜினி சார் ஒன்றுமே சொல்லவில்லை டைரக்டர்  – ம்  பரவால்ல பரவாயில்லை என என்னை மதித்து தேற்றினார்கள் என்று சொல்கிறார்.

எளிமையின் உச்சம்:

சூப்பர் ஸ்டார் உடன் நடிக்கும் போது நான் ( ராதா ) பார்த்து இருக்கேன், உச்ச நடிகர் என்ற பந்தா கொஞ்சம் கூட இருக்காது. டைரக்டர் என்ன சொல்கிறார் என்பதை கேட்டு அதை கொடுப்பார்.

அவரும் செட்டில் அதிகம் மற்றவருடன் பேசி கொண்டு இருக்க மாட்டார். வேலையில் அதீத கவனம் கொண்டவர். அவரிடம் இருந்து நானும் இந்த பழக்கத்தை கற்றுக்கொண்டேன்.

AVM உடன் பணிபுரிந்த அனுபவம்:

SP முத்துராமன்  தயாரித்த பல படங்களில்   நான் நடித்து உள்ளேன். மிகவும் அன்பாக மரியாதையாக நடத்துவர்.  கடவுளின் அருளால் நிறைய படங்கள் ஏவிஎம் தயாரிப்பில் நடிக்க முடிந்ததுன்னு நினைக்குறேன்.

மகள் கார்த்திகா :
daughter karthika
daughter karthika
actress radha daughters

ஒரு பேட்டியில் ” உங்கள் மகள் ஏன் தற்போது தமிழில் நடிப்பதில்லை என்று கேட்டதுக்கு “

 அவள் ‘ கோ ‘ படம் மூலம் அறிமுகமானாள் அதுக்கு பிறகு ‘ வா டீல் ‘  மற்றும் ‘ பொறம்போக்கு என்கிற பொதுவுடமை ‘ போன்ற படங்களில் நடித்தார்.

அதற்கு பிறகு தமிழில் நடிக்கவில்லை ஆனால் நெறய கதைகள் அவளை தேடி வந்தது ஆனால், கார்த்திகா தேர்வு செய்து தான் நடிப்பார்.

தமிழில் நடிக்காட்டியும் தெலுங்கு மற்றும் மலையாளம் சினிமாக்களில் சில படங்களில் நடித்தார் கிட்டத்தட்ட 11 படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் நடித்த படங்களின் எண்ணிக்கை குறைவு அவ்ளோதான் என்று சொல்கிறார் ராதா அவர்கள். அவர் ( கார்த்திகா ) நடித்த படங்களின் தொகுப்பை கீழே காணலாம்.

*ஜோஷ் – தெலுங்கு படம்

*கோ –  தமிழ் படம்

*மகரம்மஞ்சு – மலையாளப்படம்

*தாம்மு  –  தெலுங்கு படம்

*வா டீல் – தமிழ்ப் படம்

*Proprietors Kammath and  Kammath  –  மலையாளப்படம்

*அன்னக்கொடி – தமிழ்மொழி

*பிரிந்தவன –  கன்னடம்

*Brother of Bommali  –  தெலுங்கு

*பொறம்போக்கு என்கிற பொதுவுடைமை – தமிழ

மகள் துளசி :

துளசியை  பொறுத்தவரையிலும் அவங்க மொத்தமாகவே தமிழில் இரண்டு திரைப்படங்கள் தான் பண்ணி இருக்காங்க. அந்த இரண்டு படங்களின் பெயர் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

1.  கடல் – Kadal

2.  யான் – Yaan

இதில் ‘ கடல் ‘ படத்தில் நடித்ததுக்காக விஜய் விருது மற்றும் SIIMA விருது இரண்டிலும் நாமினேட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

daughter thulasi - Actress radha movies
daughter thulasi

இப்போது ஏன் திரையில் வருவதில்லை:

தற்போது இருக்கும் அவங்களுடைய பிசினெஸை பார்த்து, குடும்பத்தையும் பார்த்து , திரைப்படத்திலும் நடிப்பது என்பது எனக்கு இந்த வயதில் கடினம் அதனால் தான் தற்போது நடிப்பதில்லை என்று வெளிப்படையாக கூறி உள்ளார்.

அம்மா மற்றும் அப்பா பற்றி ராதா:

அவர் (  Radha ) கூறுகையில் ‘நான் அம்மாவை கதர் புடவையில் தான் பார்ப்பேன் அதிகம்’, எனது அப்பா ஒரு ஆண் மகனையும் பெண்ணையும் ஒரே மாதிரி தான் பார்ப்பார் சமமாக இப்போது அதை Feminism என்று சொல்கிறார்கள்.

ஆனால் அப்போதே என் அப்பா அந்த வகையில் தான் வாழ்ந்தார். அதனால் தான் அம்மாவை அரசியலில் அனுமதித்தார். அவங்களும் சம மரித்ததையுடன் திகழ்ந்தார் என்று குறிப்பிடுகிறார்.

நடிக்க முடியலையேனு வருத்தம்:

ராத அவர்கள் ரஜினி கமல் என பல  முன்னணி நடிகர்களுடன் நடித்து ( Actress radha movies ) இருக்கிறார், அப்படி இருக்கும் போது அவருக்கு இந்த நடிகருடன் நடிக்க முடியலையே என்று தோணும் நடிகர் எம் ஜி ஆர்  ( MGR ) தானாம்.

பெஸ்ட் கணவர்:
  • என்னோடையது ( ராதா ) Arranged marriage தான், காதல் திருமணத்தில் தனக்கு பெரிய நம்பிக்கை இல்லை.
  • எனது கணவர் எனக்கு நல்ல கணவராகவும் , குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாகவும் உள்ளார்.
  • பார்க்கவும் அழகாக இருப்பார் குறிப்பாக நல்ல மனிதர். இதுக்கு மேல என்ன வேணும் என புன்னகைக்கிறார்.

கணவரின் Favorite :

பக்கா சிம்பிள் ஆனா கேரளா ஸ்டைல் உணுவுகளை விரும்பி சாப்பிடுவார்.

2 thoughts on “Actress Radha, Biodata, Family, Husband, Daughter, Hotels, Height, Salary, Wiki, Biography, Real Name, Award, Movies, Photos, Images

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube