Cinema

Urvashi Movies, Age, Family, Husband, Daughter, Kavitha Ranjini, First husband, second husband, Height, Salary, Wiki, Biography, Real Name, comedy, Photos, Images

Urvashi Family, Movies, Age, Husband, Daughter, Kavitha Ranjini, First husband, second husband, Height, Salary, Wiki, Biography, Real Name, comedy, Photos, Images

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல மொழி படங்களில் தன் திறமைகளை காட்டி தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் ஊர்வசி.

அவரை பற்றி பல்வேறு தகவல்களை இந்த கட்டூரையில் பார்ப்போம். 

பிறந்தது வளர்ந்தது :

கவிதா ரஞ்சினி என்பதுதான் ஊர்வசியின் உண்மையான பெயர். சினிமாவுக்காக தன்னுடைய பெயரை ஊர்வசி என்று மாற்றி இருக்கிறார்.

இவர் 25 ம் தேதி ஜனவரி மாதம் 1969 ம் ஆண்டு கேரளாவில் பிறந்து இருக்கிறார். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் கேரளாவில் உள்ள திருவனந்தபுரமில் பிறந்தார்.

திரை ஆரம்பம்:

இவரின் திரைப்பயணமானது 8 வயதில் தொடங்கியது, 1977 ல் வெளியான விட்ருன்ன மொட்டுகள் ( Vidarunna Mottukal  ) என்ற மலையாளம் படம் மூலம் சினிமாவிக்குள் நுழைந்தார்.

urvashi in old movie

அதன்பின்,  சிகாரங்கள் ( Sikharangal ) என்ற படத்தில் நடித்தார். அவர் குழந்தை நட்சத்திரமாக தான் இந்த படங்களில் கால் பதித்தார்.

Child Artist :

ஊர்வசி சிறு வயதில் நடித்த முதல் நான்கு படங்களை கீழே குறிப்பிட்டு உள்ளோம்.

1. விட்ருன்ன மொட்டுக்கள் –  Vidarunna Mottukal

2. சிகாரங்கள் –  Sikharangal

3. கதிர்மண்டபம் –  Kathir mandapam

4. சயூஜ்யம் –  Sayoojyam

தமிழில் முதல் படம்:

இவருடைய தமிழ் சினிமா பயணத்தில் முதல் படம் ‘முந்தானை முடிச்சு’ என்ற படம் தான்.

முதல் படமே பாக்யராஜ்  உடன் நடித்தார், பாக்யராஜே எழுத்து இயக்கம் என முந்தானை முடிச்சி படத்தை செதுக்கி இருந்தார்.

1983 ல் வெளியான இந்த படம் குடும்ப ரசிகர்கள் கொண்டாடும் மிக பெரிய வெற்றியை தந்தது.

அடுத்த அடுத்த படவாய்ப்பு:

பின்பு, அதே வருடம் அபூர்வ சகோதரிகள் படத்தில் கமிட்  ஆகி கார்த்திக் உடன் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தினார்.

இதன்பின்  அடுக்கடுக்காய் படங்கள் வீடு தேடி வந்தன. கிட்டத்தட்ட 1984 ல் மட்டும் பத்துக்கும் மேட்பட்ட படங்களில் நடித்தார்.

Actress urvashi family - unknnown facts - biography
comedy actress

Urvashi Family, Movies, Age, Husband, Daughter, Kavitha Ranjini, First husband, second husband, Height, Salary, Wiki, Biography, Real Name, comedy, Photos, Images

1984 ம் – 15 படமும்:

அந்த கால கட்டத்தில் ஒரே வருடத்தில் பதினைந்து படங்களில் நடித்து, தன்னை தானே பிரபலமாய் நிலை நாடினார்.

அந்த 15 படங்களில் சிலவற்றை கீழே குறிப்பிட்டு உள்ளோம்.

  • கொம்பேறி மூக்கன்
  • நெருப்புக்குள் ஈரம்
  • தாவணி கனவுகள்
  • அன்பே ஓடி வா
  • ஒ மானே மானே
  • எழுதாத சட்டங்கள்
  • ஷாந்தி முகுர்த்தம்
  • அம்பிகை நேரில் வந்தாள்
  • வேங்கையின் மைந்தன்
  • வை பண்டல்
  • ஊருக்கு உபதேசம்
  • நேரம் நல்ல நேரம்
  • மாமன் மச்சான்

இந்த படங்களில் தான் 1984 ல் ஊர்வசிபிசியாக  நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிசியான வாழ்க்கை :

1984 ஐ தொடர்ந்து 1985 ல் 7 படங்கள் மற்றும்  1986 ல் மூன்று படங்கள் என திரை வாழ்க்கையில் கொடிகட்டி பறந்தார்.

காமெடி தாங்க கஷ்டம்:

நிறைய பேரு  சினிமாவில் எமோஷனலான சீன்கள் தான் கஷ்டம் -னு நினைப்பாங்க, ஆனா காமெடி சீன் பண்றதுதாங்க  கஷ்டம்.

ஆடியன்ஸ் சிரிக்காம போன காமெடி பண்ணத்துக்கான பயன் இல்லாம போயிரும்.  ஏதோ பண்ணனும்னு பண்ணா சிரிக்க மாட்டாங்க.

அதிலயும் குறிப்ப  அவங்களுக்கு பிடிச்சவங்க காமெடி பண்ணத்தான் சிரிப்பாங்க மக்கள். காமெடியை நம்ம பழக்கமே இல்லாத நபரிடம் சென்று ஒர்க் ஆகுதான்னு பார்க்க முடியாது என்ன சொல்கிறார்.

நடிகர் சந்தானம்:

இவங்களும் நம்ம சந்தானமும் சேர்ந்து “வாமனன்” படத்தில் செய்த காமெடி காட்சிகள் மிகவும் பிரபலமானவை.

Actress urvashi with comedy actor santhanam
Urvashi with santhanam

அந்த காலகட்டத்தில் “நான் காரில் வெளியே சென்று  அங்குள்ள இடத்தில் நின்னுகொண்டு இருக்கும் போது சிலர் ஓடோடி வந்து என்னிடம் சந்தானம் விரலை நல்ல வெட்டிட்டீங்களா அப்படித்தான் வேணும் அவருக்கு ” என நகைச்சுவையாக சொன்னார்கள் என்று குறிப்பிடுகிறார்.

கமல் பற்றி ஊர்வசி:

கமல் சார் அரசியல் பயணம் அல்லது பிக் பாஸ் ஆகட்டும் அவர் ஒரு விசியத்தில் இறங்குகிறார் என்றால் அதை பற்றி ஓரளவு ஆவது தெரிந்துகிட்டு தான் இறங்குவார்.

வழி  தெரியாம இதுக்குள்ள வந்து  இனி இங்க இருந்து கத்துக்கலாம் என்ற நபர் கிடையாது கமல்.

முக்கியமாக தனி கருத்து உள்ளவர் அவர். எனக்கு அரசியல் பற்றி  பெரிதாக தெரியாது. ஆனால் கமல் சாரை நான் இந்த வகையில் தான் பார்க்கிறேன்.

பிக் பாஸ்:

கமல் அவர்கள் பிக் பாஸ் தொகுத்து வழங்குகிறார் என்று கேள்விப்பட்டதும் பின்பு பார்த்ததும் அருமையாக கையாண்டார் அந்த நிகழ்ச்சியையும். அதில் அவ்வளவு பிரச்சனை வரும் அதையெல்லாம் கையாண்டு அந்த நிகழ்ச்சியை கொண்டு செல்வது எளிதல்ல.

பிரச்னையை எதிர்கொள்வது:

வாழ்க்கையில் பிரச்சனை இயல்புதான் அதை எப்படி எதிர் கொள்வது, நான் எவ்வாறு கையாளுவேன் என்றால் எதிர்மறை எண்ணங்களை வர விடாமல் பார்த்துப்பேன்.

எனக்கு பிடித்தவர்களுடன் இருந்த தருணம் அல்லது வாழ்க்கையின் சிறந்த நிமிடங்களை நினைத்து கொள்வேன் எதிர்மறை ( negative )  எண்ணங்கள் நம்மை விட்டு பறந்துவிடும் என்கிறார்.

பிடிக்காத விஷயம்:

இவருக்கு பிடிக்காத விஷயம் ” தன்னை யாராவது திட்டினால் பிடிக்காதாம் ”  அது ஷூட்டிங்கோ அல்லது வீடோ  திட்டவே கூடாதாம்.

விவாகரத்து:

ஊர்வசி அவர்கள் நடிகர் மனோஜ் ஜெயன்-ஐ  2000 ம் ஆண்டு திருமணம் செய்தார். இதுக்கடுத்து நன்றாக சில ஆண்டுகள் இவர்களது கல்யாண வாழ்க்கை நகர்ந்தது ( actress urvashi family ).

பின்பு, இவர்களுக்குள் சில மனக்கசப்பு வர 2008 ல் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர் ( actress urvashi family situation ). இதை இவர்களது ரசிகர்கள் அந்த காலகட்டத்தில் ஏற்று கொள்ளமுடியாத வகையில் இருந்தது.

Actress urvashi family  - first husband
manoj jayan
மறுத்திருமணம்:

நடிகர் மனோஜ் ஜெயனுடன் விவாகரத்து ( divorce  )  ஆன பிறகு 4 வருஷங்கள் தனியாக இருந்த இவர், பின் சிவபிரசாத் என்ற நபரை கல்யாணம்  செய்தார்.

இவர்களுடைய திருமணம் 2013 ல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது ஊர்வசிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் ( actress urvashi family ).

urvashi family

second husband - Shivaprasad
Actress urvashi family

சூரரைப் போற்று அனுபவம்:

இந்த படத்தில் ( Soorarai Pottru ) நடித்த ஒவ்வொருத்தரும் மிக அருமையாக நடித்திருந்தனர்.

பட அனுபவம் பற்றி இவர் ( Urvashi ) சொல்லும்போது “சூர்யா மிக அருமையாக நடித்திருந்தார் அதிலும் குறிப்பாக அப்பா இறந்த பிறகு வீட்டுக்கு வந்து  சில வசனங்களை பேசி அழுவார் ரொம்ப நல்ல நடித்திருந்தார்”

அவரின் ரியாக்ஷன் ஆக்ட்டிங்  பார்த்து நமக்கும் அந்த அளவுக்கு நடிக்க தூண்டும். அப்படிதான் அந்த காட்சிகள் எடுத்தார்கள் ( அப்பா மறைந்தபின் சூர்யா வீட்டுக்கு வந்து அழும் காட்சிகள்  ).

பொதுவாகவே நான் ரொம்ப  எமோஷன் ஆன எனக்கு touching ஆனகாட்சிகளில் நடிக்கும் போது கிளிசரின்  பயன்படுத்த மாட்டேன்.

அப்படித்தான் அந்த காட்சிகளிலும் கிளிசரின் யூஸ் செய்யாமல் நடித்தேன். என் மனதை தொட்ட காட்சி அது என  குறிப்பிடுகிறார்.

நடிகர் சிவகுமார் :

சிவக்குமார் அவர்கள் தனது ரெண்டு மகன்களையும் நன்றாக வளர்த்துள்ளார். சூரரைப்போற்று படத்திற்கு முன்பே ‘மகளிர் மட்டும் ‘ படத்தில் அவரை ( Surya ) நான் பாத்திருக்கேன்.

அனைவரையும் மரியாதையை குடுத்து நடத்துவார். அந்த படத்தில் ஒரே நாளில் மூன்று நான்கு இடங்கள் சென்று படப்பிடிப்புகள் நடக்கும்.

அப்போது ரயிலில் பயணிக்கும் போது ரயிலை பிடிக்க என்னோட luggage- ஐ தூக்கி கொண்டு அவர் ஓடுவர்.

மிகவும் அடக்கமான நபர் என்றால் மிகையாகாது.

சுதா கொங்கரா :

ரொம்ப திறமையானவங்க அவங்க ஒவ்வொரு ஷூட் எடுக்கும்  போது பார்ப்பேன் முழு ஈடுபாடோடு இருப்பார் ஒரு கமாண்ட் பவர் இருக்கும் கவனம் வேலையில் இருப்பதால் சரியாக சாப்பிட கூட மாட்டார்.

அவர் ( Sudha Kongura ) நல்ல நல்ல படங்கள் எடுப்பார் என்று நம்பினேன், சூராரைப்போற்று பார்த்த பிறகு இன்னும் நம்பிக்கை அதிகம் ஆனது.

தேடி வந்த விருதுகள்:

ஒரு சிறந்த நடிகை விருதுகளை தேடி செல்ல வேண்டாம் அவர்கள் செய்யும் வேலை மற்றும் போடும் உழைப்புக்கு விருதுகள்  ( Awards ) அவர்களை தேடி வரும்.

best actress in indian cinema
best actress urvashi

அந்த வகையில் ஊர்வசி அவர்களை ஏராளமான விருதுகள் வந்தடைந்துள்ளன. அவற்றின் தொகுப்பை கீழே பார்க்கலாம்.

தமிழ்நாடு மாநிலம்  திரைப்பட விருதுகள்

  • மகளிர் மட்டும் படத்திக்காக ‘Tamil Nadu State Film Award’
  • கலைவாணர் விருது

மகளிர் மட்டும் படத்துக்காக 1994 ம் ஆண்டு தமிழ் நாடு பிலிம் அவார்ட் கிடைத்தது.

பின் அடுத்த வருஷமே தமிழ்நாடு மாநில திரைப்பட கவுரவ கலைவாணர் விருதும் இவரை தேடி வந்தது.

தேசிய விருது:

2006 ம் ஆண்டு வெளியான ‘ Achuvinte Amma ‘ என்ற மலையாளம் படத்துக்காக இவருக்கு தேசிய விருது ( National Award ) கிடைத்தது.

கேரளா விருதுகள்:

1. தலையானமந்த்ரம் ( Thalayanamanthram )

2. மழவில் காவடி ( Mazhavil kavadi, )

3. வர்தமனக்கலம் ( Varthamanakalam )

4. முக சித்திரம் ( Mukha Chithram )

5. பாரதம் ( Bharatham  )

6. கடுஞ்சூல் கல்யாணம் ( Kadinjool Kalyanam )

7. கக்கத்தொள்ளாயிரம் ( Kakkathollayiram )

8. மதுசந்திரலேகா ( Madhu chandralekha )

9. கலக்கம் or  கழகம்  ( Kazhakam )

இந்த ஒன்பது படங்களுக்காக ஊர்வஷி “சிறந்த நடிகை விருது”  கிடைத்தது.

மேலே கொடுக்கப்பட்ட விருதுகள் ஊர்வஷி பெற்ற வருடங்கள் 1989, 1990,  1991, 1995, மற்றும் 2006.

பிலிம்ஃபார் ( Filmfare Award ) :

2010 ம் ஆண்டு வந்த Mummy & Me  என்ற மலையாளம் படத்துக்காக Filmfare விருது வென்றார். இதை தொடர்ந்து 2018 ல்

மகளிர் மட்டும் படத்துக்காக நோமின்டெட் செய்யப்பட்டார்.

ஆனா, விருது பெற வில்லை.  இதை தவிர்த்து பழைய படங்களான “மைகேல் மதன காமராஜன்” மற்றும் 1990 ல் வந்த “மகளிர் மட்டும்” படத்துக்காக இவர் நோமின்டெட் ஆனது  குறிப்பிடத்தக்கது.

இதர விருதுகள்:

1. Asianet Film Awards

2. Vanitha Film Awards

2018 ம் ஆண்டு “சிறந்த நடிகை” விருது Aravindante Athidhikal என்கிற படத்திக்காக பெற்றார்.

இதுக்கு  அடுத்த வருடமே  “எண்டே உம்மண்ட்டே பேரு” – “Ente Ummante Peru” இந்த படத்துக்காக  சிறந்த நடிகைக்கான விருது வென்றார்.

2019 ல் பெஸ்ட் நடிகை special jury award இவருக்கு கிடைத்தது. இதைத்தாண்டி விஜய் விருதுகளிலும் இவர் நோமின்டெட் ஆனது ( actress urvashi family ) குறிப்பிட தக்கது.

ஆனந்த விகடன் விருது சிறந்த காமெடியன் ( best  comedian ) இவருக்கு கிடைத்தது, 2017 ல் தான் இந்த அவார்ட் பெற்றார்.

ஊர்வசியின் ஒப்புதல்கள்:

இவங்க சில கம்பனியுடன் ஒப்புதலைகளை செய்து work  செய்து இருக்கிறார். அவற்றின் தொகுப்பை கீழே பார்க்கலாம்.

1. Nac Jewellers

2. Emke Silks

3. Atlas Jewellery

4. Radhas

சினிமா ராணி :

மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் என மொத்தமாக 700 படங்களுக்கு மேல் இவர் நடுத்துள்ளார் இல்லை இல்லை கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து உள்ளார் என்றும் சொல்லாம்.

ஓல்ட் இஸ் கோல்ட் – மற்ற 80’ஸ் 90’ஸ் நடிகைகளின் கட்டூரையை  இங்கே கிளிக் செய்து படித்து மகிழுங்கள்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube