Actress Nadhiya, Family, Husband, Daughter, Health, Dob, Original Name, Salary, Wiki, Biography, Real Name, Latest News, Award, Movies, Photos, Images
Actress Nadhiya, Family, Husband, Daughter, Health, Dob, Original Name, Salary, Wiki, Biography, Real Name, Latest News, Award, Movies, Photos, Images
தமிழ்சினிமாவில் நடிகர்கள் :
Actress Nadhiya life unknown: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு கால கட்டத்தில் பல நடிகைகள் அவ்வப்போது நுழைவதும் குறுகிய காலகட்டத்தில் உச்ச பிரபலம் அடைந்து பின்பு காணாமல் போவதும் வழக்கமான ஒன்று தான்..
அப்படியிருந்தாலும் மக்கள் மனதை கவர்ந்து என்றும் மக்கள் Favorite ஆக வலம் வரும் நடிகர் நடிகைகளும் நிறைய பேர் உள்ளனர்…
அந்தவகையில் பலருக்கு பிடித்த நடிகை தான் நதியா அவங்களை பற்றி நமக்கு தெரியாத பல சூப்பரான தகவல்களை நாம இங்கு பாக்கலாம்.
நிஜ பெயர் & ஆரம்பம் :
சரீன்னா மொய்ட்டு ( zareena moidu ) என்பது தான் நதியா அவர்களின் நிஜ பெயர், சினிமாவுக்காக தனது பெயரை நதியா என மாத்தினாங்க.
இவங்க அக்டோபர் மாதம் 1996 இல் மும்பையில் பிறந்திருக்காங்க. இவங்களுடைய தற்போதைய வயது 55.

நதியா ஆக்ட்டிவ் ஆக இருந்த வருடங்கள் 1985 – 1989 & 1994 & 2004 மற்றும் 2022 இல் தமிழ் மற்றும் தெலுங்கு என ஐந்து திரைப்படங்களை கைவசம் வெச்சிருக்காங்க.
நதியாவின் திரைவாழ்க்கை:
நிறைய பேர் நதியா தமிழில் தான் முதலில் நடித்தார் என்று நினைப்பது உண்டு, ஆனால் அவங்க நடித்த முதல் ஐந்து படங்களும் மலையாளம் படம்தான்.
நோக்கேத்த தூரத்து கண்ணும் நாட்டு ( nokketha doorathu kannum nattu ) , கூடும் தேடி ( koodum thedi ) போன்ற சில மலையாளம் திரை படங்களில் நடித்தார்.
5 மலையாளப்படங்கள் :
1.Nokketha doorathu kannum nattu
2.Koodum thedi
3.Vannu kandu keezhadakki
4.Onningu vannengil
5.Kandu kandarinju
இந்த ஐந்து படங்களும் 1985 இல் வெளிவந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மலையாள சினிமாவில் ஓரளவு பிரபலமும் அடைந்தார் நதியா.
முதல் விருது:
இதில் என்ன சுவாரசியம் என்றால் இவர் (Actress Nadhiya) நடித்த முதல் படமான நோக்கேத்த தூரத்து கண்ணும் நாட்டு ( nokketha doorathu kannum nattu ) – காக பிலிம்ஃபார் விருதும் ( Filmfare award ) வென்றார்.
சரி, இப்போது நதியாவின் தமிழ் திரைப்பயணத்தை பார்ப்போம். ‘பூவே பூச்சூடவா’ படம் மூலமாக தமிழில் என்ட்ரி கொடுத்த இவங்க அந்த படத்தில் சுந்தரி ரோலில் நடித்து தமிழ் மக்கள் மனதில் இடம் பிடிச்சாங்க.

Actress Nadhiya, Family, Husband, Daughter, Health, Dob, Original Name, Salary, Wiki, Biography, Real Name, Latest News, Award, Movies, Photos, Images
தமிழில் இவங்க நடித்த இந்த படத்திக்காகவும் பிலிம்ஃபார் விருது ( Filmfare award ) பட்டியலுக்கு நோமின்டெட் ஆனது சிறப்பு. ‘பூவே பூச்சூடவா’ படம் வெற்றி பெற்று நன்றாக ஓடியதும் அடுத்தடுத்த படவாய்ப்புகள் வந்து குவிந்தன.
இதன்பின் ‘ பூக்களை பறிக்காதீர்கள் ‘ என்ற படத்தில் நடித்தார். இப்படம் 1986-ல் வெளியானது, ராதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் மந்திர புன்னகை, உயிரே உனக்காக , உனக்காகவே வாழ்கிறேன் போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்தார். ( 1986 – 1994)
1987 படங்களின் பட்டியல் :
- சின்ன தம்பி பெரிய தம்பி
- பாடு நிலவே
- பூமழை பொழியுது
- பவள மல்லிகை
- மங்கை ஒரு கங்கை
- இனிய உறவு பூத்தத்து
- அன்புள்ள அப்பா
- ரேகா
- பூவே இளம் பூவே
1987 இல் அந்த ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட ஒன்பது படங்கள் நடித்து பல சகநடிகைகளை வாய் பிளக்க வைத்தார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும் ஆனார்.

1988-1990-ல் நடித்த திரைப்படங்கள்:
- ராஜாதி ராஜா
- இரண்டில் ஒன்று
- பஜார் ரௌடி
- விண்ட டோன்களு
- என் வீடு என் கணவர்
90’s ல் கடைசி படம்:
1994 – ல் வந்த ‘ சின்ன மேடம் ‘ என்ற படம் தான் நதியா அந்த காலகட்டத்தில் கடைசியாக நடித்த படம். அதன்பின் அவர் படங்களில் தலைகாட்டுவதை நிறுத்திவிட்டார்.
பிறகு 2004 இல் வந்த M குமரன் S/O மஹாலக்ஷ்மி படம் மூலம் ரீ என்ட்ரி குடுத்த இவங்க தாமிரபரணி , பட்டாளம் , மற்றும் சண்டை போன்ற படங்களில் தொடர்ந்து நடித்தார்.
இந்த 2022 ல் புத்தம் புது காலை விடியாத என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இது அமேசான் ப்ரிம் வீடியோ தயாரித்தது.
கணவர் மற்றும் குடும்பம்:
நதியாவின் கணவர் பெயர் ஷிரிஷ் ( Shirish godbole ) இவர்களின் திருமணமானது 1988 இல் நடந்தது. தற்போது சனம் மற்றும் ஜன என்று இரண்டு மகள்களும் உள்ளனர்.

திருமணத்திற்கு பின் தனது மகள்கள் மற்றும் கணவருடன் யுனைடெட் ஸ்டேட்ஸ் இல் வாழ ஆரம்பித்துவிட்டார். அங்கு சில வருஷம் வாழ்ந்த அவங்க தற்போது மும்பையில் தான் வாழ்ந்து வருகிறார்.
டிவி அனுபவங்கள்:
நதியாவின் முதல் டிவி அனுபவம் என்றால் அது 2010 இல் வந்த ஜாக்பாட் நிகழ்ச்சிதான். இதை தொடர்ந்து இரண்டு மலையாளம் நிகழ்ச்சிகளில் நடுவராக வந்தார்.
1. Veruthe alla bharya
2. Comedy stars season 2
இந்த இரண்டு மலையாளம் நிகழ்ச்சிக்கு பின் தமிழின் ஹிட் சீரியல் ஆன ரோஜாவில் கெஸ்ட் ரோலில் நடித்தார்.
கொரோன தொற்று:
சமீபத்தில் நதியாவுக்கு ( nadhiya health condition ) கொரோன தொற்று வந்து சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசப்பட்டது. குறிப்பாக இரண்டு தடுப்பூசிகளையும் போட்ட பிறகும் கொரோன வந்துவிட்டதே என பேசப்பட்டது.
நதியாவுக்கு தொற்று வந்ததால் அவங்களின் அம்மா அப்பாவுக்கும் வீட்டில் வேலை செய்பவர்களுக்கும் பாதிக்க பட்டதால் மிகவும் வருத்தத்திற்கு உள்ளானார். அதன் பின் சில நாட்களில் பழைய நிலைக்கு திரும்பினார்.
Discipline தான் முக்கியம்:
நதியா வீட்டில் Discipline தான் முக்கியமான ஒன்றாக, அவரது சிறு வயதிலேயே சொல்லிக் கொடுத்து வளர்த்தாங்கலாம். அதை சினிமாவிலும் கடைபிடித்து அவருக்கு பெரிதும் கைகொடுத்து உள்ளது.
சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்த நதியா Me too பற்றி ஓப்பனாக பேசி இருந்தார். அதில் நான் அந்த காலத்தில் படப்பிடிப்புக்கு செல்லும் போதெல்லாம் எனது அப்பா கூடவே வருவார் அதனாலேயே நான் Safe ஆக உணர்வேன்.
தற்போது நிறைய நடிகைகள் தாமாக முன் வந்து Me Too பற்றி பேசுவது ஒரு நல்ல முடிவுதான். ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஓவர் advantage எடுத்துக்க கூடாது தவறாக நடந்துக்க கூடாது என்று கூறியுள்ளார்.
நடிகர்கள் பற்றி நதியாவின் ஒரு சொல் கருத்து:
சிவாஜி – கட்டளை
ராதா – ஸ்டைல்
மோகன் – மெலடி
ரஜினி – சமநிலை
அமலா – நளினம்
ராதிகா – பவர்
ஜெயம் ரவி – ஸ்வீட் ஹார்ட்
நதியா முன்னணி நடிகையாக வலம்வந்த சமையத்தில் நதியா கொண்டை , நதியா கம்மல், நதியா சேலை
என பல பல பொருட்கள் சந்தையில் மக்கள் விரும்பி வாங்கி வந்தனர். அந்த வகையில் தற்போது நதியாவை பார்த்து மக்கள் என்ன கத்துக்க வேண்டும் என நினைகிறீர்கள் என்று கேட்டால் அதற்க்கு அவங்களின் பதில் பிட்னெஸ் ( Fitness ).

தமிழா இல்ல தெலுங்கா :
தமிழ் அல்லது தெலுங்கு திரைப்படத்தில் எதை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டால், அவர்களில் பதில் ‘ எனக்கு தமிழ் அளவுக்கு தெலுங்கு அவ்வளவாக ஈஸியா பேச வராது இருந்தாலும் தெலுங்கில் எனக்கு மிக அதிக Fans அதனால் தமிழோ இல்லை தெலுங்கோ கதையின் முக்கியத்துவம் மற்றும் எனக்கு சொல்லப்படும் ரோலை பார்த்து தான் தேர்வு செய்வேன்’ என்று சொன்னார்.
Inspiration women:
nadhiya life unknown:
இவர்களின் மிகவும் கவர்ந்த பெண் என்றால் பலர் உள்ளனராம், அதில் முக்கியமான நபர் இவங்க அம்மா தானாம் வேலையும் செய்துகொண்டு குழந்தைகளாகிய எங்களை நன்றாக வளர்த்தார்.
நடனம் சொல்லி கொடுத்தார், குழந்தையாக இருக்கும் போதும் சரி இப்போதும் சரி அவ்வளவு கவனமாக பார்த்து கொள்வார். அதனால் என்னுடை inspiration women அம்மா தான் என்று கூறுகிறார்.
போராட்ட காலம் ( struggling time ) :
இவங்க வாழ்க்கையில் தனது Struggling பத்தி என்ன சொல்றாங்கன்னா, கடவுளுடைய அருளால் நான் பெரிதாக எந்த struggling ம் சந்திக்கவில்லை நாம் வாழக்கையை எப்படி பார்க்கிறோமோ அப்படித்தான் வாழக்கை தெரியும்.
ஈஸியாக பார்த்தால் ஈஸி நாம் கஷ்டமென பார்த்தால் கண்டிப்பாக வாழ்க்கை கடினம் தான்.
ஆனால், நடிக்கும் போது அடுத்தவங்க என்ன நினைக்கிறார்கள் நாம்ம அடுத்தவங்களை எப்படி நடத்திறோம்னு எல்லாமே பார்ப்பாங்க .
அத மனதில் வைத்தி லைட் மேன் , மேக்கப் மேன் , production டீம் ன்னு எல்லோரையும் handle பண்றது என்னக்கு சிரமமாக இருந்தது என்று தெரிவித்தார்.
பிடித்த தமிழ் நடிகை :
இவங்களை கவர்ந்த தற்போதைய தமிழ் நடிகை என்றால் அது நயன்தாரா தானாம். அவருடைய நடிப்பு
உடை அணியும் விதம் ( dressing style ) கதை தேர்வு செய்து நடிக்கும் விதம் என பலதும் நயன்தாராவிடம் இவங்களுக்கு பிடிக்குமாம்.
90’s VS 2022 நடிகர் நடிகைகள்:
அப்போதைய சினிமா மற்றும் இப்பொது உள்ள சினிமாவையும் பற்றி நதியா என்ன சொல்றாங்கன்னா, அப்போ ஒரு நடிகர் அல்லது நடிகை என்ன சாப்பிடறாங்க எப்போ தூங்குறாங்க என்ன கார் யூஸ் பண்றங்கனு எல்லாமே மறைமுகமாய் இருந்ததது.
ஆனால், தற்போது சோசியல் மீடியா காலம் என்பதால் மக்கள் அவை அனைத்தையும் ஈஸியாக அறிந்து கொள்கின்றனர். அதே சமயம் ஒருவரின் தனிப்பட்ட அதிக நேரத்தை சோசியல் மீடியா எடுத்து கொள்கிறது என்பதை நாம் மறுக்கமுடியாது என்றும் சொன்னார்.
” சினிமாவை நான் 9-5 வேலையில் ஒன்றாக தான் பார்க்கிறேன் ” – Nadhiya
பிடித்த ஸ்டைல் நடிகர்கள்:
1. ரஜினி
2. கமல்
3. ஜெயம் ரவி
4. விஜய்
5. சூர்யா
6. விஜய் சேதுபதி

இப்பொது உள்ள அணைத்து நடிகர்களுக்கும் ஒவ்வொரு தனி ஸ்டைல் உள்ளது. அதில் மேலே நாம் பார்த்தவை நதியா அவர்களின் ஸ்டைல் favorite நடிகர்கள் என்று கூறலாம்.
அதிலும் விஜய் சேதுபதி மற்ற நடிகர்கள் போல் தோற்றம் இல்லை, சாதாரணமான நபர் போல தான் இருப்பார். இருந்தாலும் அவர் ஸ்டைல் ரொம்ப பிடிக்குமாம்.
பெருமையான தருணம்:
இவங்க வாழ்க்கையில் நிறைய பெருமையான தருணம் உள்ளதாம், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இவங்க முன்னணி நடிகையா இருந்த டைம் -ல் பெரிய ரிப்போர்ட்டர் இவங்களை அழைத்து இவங்களுக்கு தெரியாத பல சுவாரஸ்யமான விசியங்களை பகிர்ந்தாராம்.
அது தனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தந்தது என்று நதியா கூறுகிறார்.
நான் செய்த தவறு :
நானும் எனது வாழ்க்கையில் அதிகமாக தவறுகளை செய்து இருக்கிறேன். குறிப்பாக பேசும் போது
சில வார்த்தைகள் நம்மை அறியாமல் வந்துவிடும், நகைச்சுவைக்காக பேசும்போது கூட ஒரு லிமிட் உள்ளது.
அதை நாம் மீறினால் அதுவும் நாம் செய்யும் தவறு தான். மற்றவர்களை காயப்படுத்திவிடும். நானும் அது மாதிரி செய்து இருக்கிறேன். ஆனால் வேன்றுமென்றில்லை என்னை அறியாமல் செய்து உள்ளேன் என குறிப்பிடுகிறார்.
கேலி கிண்டல் :
சிலர் வீட்டில் அல்லது வெளியில் பேசும்போது ‘அம்மா அம்மா ‘ என்று பெருமையாக பேசுவார்கள் ஆனால் படத்தில் நம்ம அம்மா ரோலில் நடித்தால் ‘ அம்மா ‘ ரோலில் நடிக்கிறீங்களா மார்க்கெட் போனதுபோல ஜாடை மாடையாக பேசுவார்கள் என்கிறார்.
பெண்ணின் எக்ஸ்ட்ரா பவர் :
ஒரு ஆண் ஒரு வேலையை செய்வதை விட ஒரு பெண் அதே வேலையை அதிக முயற்ச்சியில் ( effort ) செய்வாள். அதற்காக ஆண்கள் effort போடவில்லை என்பது அர்த்தமில்லை பெண்கள் இன்னும் அதிகமாக effort போடுகிறார்கள் என்று தான் கூறுகிறேன்.
பலரும் அறியாத உண்மை: nadhiya life unknown
இவர் ‘ பூவே பூச்சூடவா ‘ படத்தில் நடிக்கும் போது இவருக்கு சுத்தமாக தமிழ் பேசவே தெரியாதாம் ( nadhiya life unknown ) அப்படி இருந்து அந்த படத்தில் தமிழ் பெண்ணாகவே வாழ்ந்து உள்ளார் என்பது தான் உண்மை.