பிரபல விஜய் டிவி தொகுப்பாளருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது!
Vijay tv anchor vijay: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர் தான் மிர்ச்சி விஜய்.
இவர் முதல் முதலில் RJ-வாக தன்னுடைய Media பயணத்தை தொடங்கி பிறகு VJ-வாகவும் விஜய் டிவி, கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் என பல்வேறு டிவி நிறுவனங்களில் பணியாற்றினார்.
ஒரு சில தமிழ் படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இவர் மோனிகா என்ற பெண்ணை காதலித்து 2019-ல் திருமணம் செய்தார்.
இவர் திருமணத்திற்கு சிவகார்த்திகேயன் உட்பட சில முன்னணி பிரபலங்களும் பங்கேற்று இருந்தனர். கல்யாணமான பிறகு மனைவி மோனிகாவுடன் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு Active-வாக இருப்பது அனைவரும் அறிந்ததே. கடந்த சில மாதங்களாக மனைவி கர்ப்பிணியாக இருப்பதையும் ஃபோட்டோ மூலம் வெளிப்படுத்தினார்.
vijay tv anchor vijay

இந்தநிலையில் விஜய், ரசிகர்களுடன் ஒரு இனிப்பு செய்தியை பகிர்ந்துள்ளார். ஆம், திருமணம் ஆகி ஒரு வருடம் கடந்த நிலையில் இந்த அழகான தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாம்.
குழந்தைக்கு வேறு மொழி கலப்பில்லாமல் தமிழ் பெயர் ஒன்று வைத்துள்ளார்கள். ஆம், நவிலன் என்பது தான் இந்த தம்பதியின் செல்ல மகனின் பெயராகும்.
RJ விஜய்க்கு குழந்தை பிறந்ததை அறிந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தற்போது அவருக்கு தங்களது வாழ்த்துகளை கூறிவருகின்றனர்.
