CinemaSerial

வானத்தைப்போல சீரியல் சின்னராசு யார் தெரியுமா?

Vaanathaippola serial chinnarasu: இந்த வருடம் பல சின்னத்திரை தொடர்களைப் புதிதாக ஆரம்பித்த வரிசையில் முதல் இடத்தில நம் சன் டிவி உள்ளது.


அந்த வரிசையில் தற்போது புதிதாக இணைத்து இருப்பது வானத்தைப்போல தொடர் 
தற்போது பல ரசிகர்களைப் பெற்றுள்ளது.

இத்தொடரின் நாயகன் சின்னராசின் வாழ்க்கையில் ஏற்பட்ட பலதரப்பட்ட நிகழ்வுகளை இங்குக் காண்போம். 

தனிப்பட்ட வாழ்கை :

நம்ம சின்னராசின் உண்மையான பெயர் தமன் குமார் செப்டம்பர் 12 ஆம் தேதி  1980யில்  மதுரையில் பிறந்து உள்ளார்.

இவர் பிறந்து மட்டும் தான் மதுரை மற்றபடி இவர் சென்னையில் தான் வளர்ந்துள்ளார் இவர் தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார்.

serial actor thaman biography

இவர் தனது பள்ளி படிப்பை சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முடித்தார். பின்னர் இவர் தன்னுடைய கல்லூரிப் படிப்பை சென்னை உள்ள ஒரு பிரபலமான தனியார் கல்லூரியில் படித்தார்.

மேலும், இவர் ஒரு இன்ஜினீயர் பட்டதாரி ஆகும். இவர் தற்போது சென்னையில் தான் வசிக்கிறார்.

திரை துறைக்கு முன்பு :

தமன் திரை உலகிற்கு வருவதற்காக தான் செய்து கொண்டு இருந்த வேலையை விட்டுவிட்டராம் ஏனென்றால் இவருக்குத் திரையுலகம் அவ்வளவு பிடிக்குமமாம்.


இவர் 2011யில்லிருந்து திரை உலகிலிருந்து வருகிறார்.தமனுக்கு சிறு வயதில் இருந்தே ஒரு ஸ்கிரிப்ட் ரைட்டர்  ஆக வேண்டும் என்பது இவர் ஆசையாம். பின்னர் நடிப்பின் மீதும் ஆர்வம் ஏற்பட்டது.


ஆனால் இவருக்குத் திரை துறைக்குள் எவ்வாறு வருவது என்று தெரியவில்லையாம் ஏனெனில் இவர் குடும்பத்திற்கோ அல்லது இவர் நண்பர்களுக்கோ திரைஉலக அனுபவம் இல்லையாம்  அதனால் இவர் முதலில் நடிப்பு பறிச்சி எடுத்துக் கொண்டராம்.

இயக்குனர் மணிரத்னம் அழைப்பு :

பின்னர் இவருக்கு வந்த முதல் அலைப்பே இயக்குனர் மணிரத்தினம் படத்திற்காக  வந்ததாம்.

Vaanathaippola serial chinnarasu lifestyle

இவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டாராம் முதல் சுற்றில் வெற்றி அடைந்தாராம் ஆனால் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வில்லையாம்.

ஆனால் இவர் மனம் தளராமல் மற்ற  பல ஆடிஷனில் கலந்து கொண்டார் படவாய்ப்புகளும் தோல்விகளும் (படம் வெளிவராமல் போனது ).


நடிகர் ஆர்யாவின் தயாரிப்பில் படித்துறை என்ற படத்தில் நடித்தார். முழு படம் முடிவடைந்த பிறகு படம் வெளிவரவில்லை இதனால் இவர் மிகவும் வருத்தம் அடைந்தாராம்.

மீண்டும் லண்டன் மாப்பிளை என்ற படத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்தாம் ஆனால் அந்தப் படமும் வெளிவரவில்லையாம்.

வெற்றி படங்கள் :

பல தோல்விகளுக்குப் பின்னர் ஆச்சிரியங்கள் படத்தில் 2012  கார்த்திக் என்ற பெயரில் ஐஸ்வர்யா ராஜேஷ்வுடன் இணைந்து நடித்தார் இந்தப் படம் நல்ல வெற்றியினை அடைந்தது எனலாம்.


பின்னர் அதே வருடத்தில் சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தில் ஆடிஷனுக்கு அழைப்பு வந்ததாம். அப்போது அந்தப் படத்தின் இயக்குனர் இவரை ஒரு சீன்னுக்கு(SCENE) நடிக்க சொன்னாராம் இவர் நடித்ததை பார்த்துப் இயக்குனர் உடனே இவரைத் தேர்வு செய்தாராம்.

Vaanathaippola serial chinnarasu in movies


சினேகா பிரிட்டோ இயக்கத்தில் சந்திரசேகர் எழுத்தில் தமன் நடித்து 2012இல் வெளியான சட்டம் ஒரு இருட்டுரை படம்  மாபெரும் வெற்றி அடைந்தது.

இந்தப் படத்தில் பிந்துமாதவி, ரீமாசென், பியா பாஜிபி போன்றோர் நடித்து இருந்தனர் இந்தப் படம் தமன் திரை உலக வாழ்க்கைக்கு ஒரு நல்ல திருப்பு முனையாக இருந்தது.


2012ஆம்  ஆண்டு இவருக்கு வெற்றிகரமான ஆண்டாக இருந்தது சட்டம் ஒரு இருட்டறை படத்திற்கு பிறகு இவருக்குப் பல தமிழ் பட வாய்ப்புகள் தேடி வந்தனவாம்.


அந்த வரிசையில் சும்மா நச்சுனு இருக்க என்ற படத்தில் 2013யில்  பவர் ஸ்டார் மற்றும் தம்பிராமையா போன்றோருடன் இணைந்து நடித்துள்ளார் நம்ம தமன்.

2015யில்  தொட்டால் தொடரும், 2016யில் சேது பூமி, 2017யில் புயலா கிளம்பிவருவோம். பின்னர் திகில் படங்களில் நடித்தார் 2018யில் 6அத்தியாயம் படத்திலும் 2019யில்  நேத்ரா என்ற படத்தில் நடிகர் வினையுடன்(Vinay) இணைந்துநடித்தார்.

இந்த இரு படங்களும் நல்ல வெற்றி அடைந்தது. இவ்வாறு வருடத்திற்கு ஒரு படம் வீதம் நடித்து வந்துள்ளார்.

வானத்தை போல – Vaanathaippola serial chinnarasu

வெள்ளித்திரையில் ஒரு கலக்கு கலக்கியது போலச் சின்னத் திரையிலும் கலக்கவே வானத்தை போலத் தொடரினை தேர்ந்து எடுத்து உள்ளார் நாம சின்னராசு.

இவர் தற்போது வானத்தை போல என்ற தொடரில் நடித்து வருகிறார் இத்தொடரில் மிகவும் பாசமான அண்ணனாக வலம் வருகிறார்.

இத்தொடரில் சின்னராசு என்கிற பெயரில் தமன்குமார் நடிக்கிறார் தங்கையாக ஷுவெத கஹஜ் நடிக்கிறார் இத்தொடரில் இருவரும் தாய்தந்தை இல்லாதவர்கள். தன் தங்கையை தன்னுடைய குழந்தைபோல வளர்க்கிறார் சின்னராசு.

Vaanathaippola serial chinnarasu with sister thulasi

அதோடு இல்லாமல் தங்கைக்கு திருமணமானால் தன்னை விட்டுப் பிரிந்து விடுவாளோ என்கிற எண்ணத்தில் அண்ணனும் தான் திருமணம் செய்தால் தன் அண்ணனை விட்டுப் பிரிந்து விடுவோமோ என்கிற எண்ணத்தில் தங்கையும் இருக்கிறார்.


இந்தத் தொடரில் பாசமலர் படத்தை போல இவர்கள் கதா பாத்திரம் அமைந்து உள்ளது .


தமனுக்கு பிடித்த நடிகை அன்ஷிகா மோத்வானி, மற்றும் பட பிடிப்பு தலத்தில்.படங்களைப் பற்றி மட்டும் தான் மற்ற நடிகர்களுடன் பேசுவாராம் இதை ஒரு நேர்காணலில் வானத்தை போலத் தொடரின் நாயகியே கூறியுள்ளார்.


இத்தொடரில் நடிப்பதன் மூலம் பல பெண்களுக்கு இவரைப் பார்த்தால் அண்ணன் என்ற எண்ணம் வருகிறதாம் தங்களுக்கும் இதுபோல அண்ணன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறதாம்.

அந்த அளவிற்கு அண்ணனாக நம்ம தமனின் (சின்னராசு) நடிப்பு உள்ளது எனலாம்.


என்னும் எண்ணமே இலக்கு என்றால் எண்ணியது கிட்டும் என்பது போலத் தமன் அவர்கள் திரை பின்புலம் இல்லாவிடினும் தன் இலக்கை விடாமல் பிடித்ததால் அவருக்குத் திரை துறை வசமானது எனலாம்.

6 thoughts on “வானத்தைப்போல சீரியல் சின்னராசு யார் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube