Serial

நீதானே எந்தன் பொன்வசந்தம் அனு யார் ?

Neethane enthan ponvasantham anu: தமிழ் தொலைகாட்சி நிறுவனத்தில் ஜீ தொலைக்காட்சிக்கென்று தனிச்சிறப்பு உண்டு.

அந்த ஜீ  தொலைக்காட்சிகளில் இந்த வருடம் வெளியான சின்னத் திரைதொடர்களில் ஒளிபரப்பான சிறிது நாள்களில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரு தொடர் தான் நீதானே எந்தன் பொன்வசந்தம்.


தற்போது ஜீ தமிழ் தொலைகாட்சியில திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்படுகிறது இந்தத் தொடரில் நடித்துக் கொண்டு பல தமிழ் நெஞ்சங்களில் அனுவாக வாழ்ந்து கொண்டு இருக்கும் தர்ஷனாவை பற்றிக் காண்போம்.

தனிப்பட்டவாழ்கை :

நீதானே எந்தன் பொன்வசந்தம்அனுவின் நிஜப்பெயர் தர்ஷனாஅசோகன்.இவர் பூர்வீகம் கேரளவாக இருப்பினும் இவர் பிறந்தது ஊட்டியில் தான். இவர் 1995ஆம் ஜூன் 3ஆம் தேதி பிறந்துள்ளார்.

neethane enthan ponvasantham anu real life

இவருடைய தந்தை பெயர் அசோகன்.இவர் ஒரு மருத்துவர். இவருக்குச் சொந்தமாக ஒரு க்கிளினிக் உள்ளது.இவரின் தூண்டுதலாலே தர்ஷனா  மருத்துவத்  துறையை தேர்ந்து எடுத்தார்.

இவர் சென்னையில் தன்னுடைய படிப்பை முடித்து உள்ளர். தர்ஷனா  தன்னுடைய பள்ளிப் படிப்பை சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முடித்தார்.

பின்னர் இவர் தன்னுடைய கல்லுரிப் படிப்பை சென்னையில் உள்ள மாதா டென்டல் காலேஜ் & ஹோச்பிடலில் (Madha Dental College & Hospital)முடித்தார்.இவர் ஒரு பல் மருத்துவர் ஆகும். 

நடிப்பின் மீது ஆர்வம் :

தர்ஷனாவிற்கு சிறுவயது முதலே நடிப்பின் மீது தான் மிகவும் ஆர்வம் இருந்தது ஆனால் தான் நடிப்பதை தன் குடும்பத்தார் விரும்பமாட்டார்கள் என்பதால் இவர் நடிப்பதற்கு வராமல் மாடலிங்  மட்டும் செய்து வந்துள்ளார்.


இவர் தன்னுடைய புகை படத்தை சமூக வலை தலங்களில் பதிவேற்றி வந்து உள்ளார் இதன் மூலம் இவருக்கு இத்தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது எனலாம்.

சின்னத் திரை வாய்ப்பு :

இவரின் புகை படத்தை சமூக வலை தளங்களில் பார்த்து இவரை நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியலில் நடிகை இன்ஸ்டாகிராம்மில் அழைப்பு விடுத்தனராம் ஆனால் இவர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லையாம்.

பின்னர் இவர் ஒரு போட்டோ ஷூற்றிக்கு சென்ற பொது அங்கு ஒருவர் இத்தொடரின் ஆடிஷசனை பற்றிக் கூறியுள்ளார் இதை முதலில் நம்பாத தர்ஷனா  பின்னர் இருவரிடம் வந்த தகவலின் பேரில் நம்பிக்கை கொண்டு ஆடிசன்க்கு சென்றாராம்.


இவருக்கு மிகவும் சந்தோசமாக இருந்ததாம் பின்னர் தான் நடிக்க போவதை தன் குடும்பத்தாரிடம் கூறியுள்ளார்.

அவருடைய குடும்பம் இவரைத் திரை உலகிற்கு போக  சம்மதம் தெரிவிக்கவில்லை இருப்பினும் இவர் தன் பெற்றோரை மீறி இந்தத் தொடரில் நடிக்கவந்தார்.


ஏனெனில் சிறுவயதில் இருந்தே இவரை டிவி சினிமா பார்க்க கூடாது என்றெ இவர் குடும்பத்தார் இவரை வளர்த்தனராம் இதை ஒரு நேர்காணலில் தர்ஷனா  கூறியுள்ளார்.

நீதானே எந்தன் பொன்வசந்தம் – Neethane enthan ponvasantham anu

முத்துக்குமாரசுவாமி இயக்கத்தில் ஹாரன் பிரசன்ன எழுத்தில் இந்த வருடம் பிப்ரவரி மாதம் இத்தொடர் ஒளிபரப்பட்டது. இந்தத் தொடர் முதலில் ஜீ மராத்தியில் ஒளிபரப்பப்பட்ட (Tula Pahate Re) என்ற தொடரின் ரீமேக் அகா இதுதொடர் தயாரிக்கப்பட்டது. 


இந்தத் தொடர் அடைந்த வெற்றியின் காரணமாக ஜீ கன்னடம் மற்றும் ஜீ கேரளம் போன்ற தொலைகாட்சியில் ஒளிபரப்பு ஆனது.

தற்போது ஜீ தெலுங்கில் ஒளிபரப்பாகி வெற்றி கரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது இந்த வருடம் தமிழிலும் ஒளிபரப்பாகி வெற்றி பெற்றது.


இத்தொடரில் ஜெய் ஆகாஷ் சூர்யா பிரகாஷ் ஆகவும் தர்ஷனா அனுவாகவும் நடிக்கிறார்கள். அனு மிகவும் அமைதியான அப்பாவியான தோற்றத்துடன் காணப்படுகிறார்.இவர் 20 வயது பெண்ணாக வலம் வருகிறார் மேலும் அனுவின் குடும்பம் ஒரு மிடில் கிளாஸ் பேமிலி ஆகும்.

zee tamil award | tamil serial | dharshana ashokan

சூர்யா பிரகாஷ் ஒரு கம்பனிக்கு முதலாளியாக இருக்கிறார் மேலும் இவருக்கு40 வயதாகிறது இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை இவ்வாறு இவர்கள் இருவரின் கதாப்பாத்திரம் காட்சிப்  படுத்தப்பட்டு உள்ளது.


சூர்யா பிரகாஷுன் கம்பனியில் அனு பணிக்கு சேர்கிறாள் அனுவின் நடவடிக்கைள் அனைத்தும் சூர்யா பிரகாஷுக்கு பிடித்துப் போகிறது.

அதனால் சூர்யா பிரகாஷ் அனுவின் மீது காதல் கொள்கிறார் இதை அனுவிடம் எவ்வாறு கூறுவது மற்றும் தன் அனுவை விட 20வயது மூத்தவன் என்பதால் அனு தன் காதலை ஏற்றுக்கொள்வாரா, என்ற சந்தேகத்தில் உள்ளார் இதைத் தொடர்ந்து கதை கலம் விறு விறுப்பாக நகர்ந்து கொண்டு இருக்கிறது.


அனு சூர்யா பிரகாஷின் காதலை ஏற்று கொள்வாரா இல்லை வயதை காரணம் காட்டி வேண்டாம் என்பறா என்று வரும் தொடர்களில் பார்க்கலாம்.

இத்தொடர் கொரோன காரணமாக சிறிது காலமாக நிறுத்தி வைக்க பட்டது பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது.

இதில் ஆச்சிரியம் என்னவென்றால் இத்தொடர் நிறுத்தி வைக்கும் பொது எத்தனை ரசிகர்கள் இருந்தனரோ அந்த அளவு சற்றும் குறையாமல் உள்ளது. ஏனெனில் இருவரின் நடிப்பும் அற்புதமாக உள்ளது.

கனவுகளும் விருதுகளும் :

இத்தொடரில் நடித்ததுக்காக தர்ஷனாவிற்கு (FIND OF THE YEAR)என்ற விருது ஜீ தமிழ் தொலைக்காட்சியின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படப்பிடிப்பு தலத்தில் இவரிடம் இயக்குனர் ஏதேனும் கோவப்பட்டால் சிறு புன்னகை புரிவாரம் இதனால் இவரை மற்றவர்களுக்கு மிகவும் பிடிக்குமாம்.

serial actress dharshana ashokan


இந்தத் தொடருக்கு இருக்கும் ரசிகர்களைப் பார்த்தால் தற்போது பிரபலமாக ஓடிக் கொண்டு இருக்கும் தொடர்களைப் பின்னுக்கு தள்ளவும் இத்தொடருக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது எனலாம்.


அனுவாக வலம் வரும் நம்ம தர்ஷனாவை கூடிய விரைவில் அவரின் ஆசைப்படியே வெள்ளிதிரையில் காணலாம் என்று நம்பப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube