நகைகளை திருடிய வழக்கில் கைதாகும் பிரபல தமிழ் சீரியல் நடிகை!
Sun tv actress arrest: சினிமா நடிகைகளை போலவே சீரியல் நடிகைகளை பற்றிய தகவல்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரல் ஆகி வருகிறது.
அதுமாதிரியான பல செய்திகளை நாம் பார்த்திருப்போம், தற்போதும் பிரபல தமிழ் சீரியல் நடிகை செய்த ஒரு செயல் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
ஆம், தங்க நகைகளை திருடிய வழக்கில் சமீபத்தில் சன் டிவி சீரியல் நடிகை சுசித்ரா மீது வழக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் நடித்தவர், அந்த சீரியலில் பிரகாஷின் 2வது அண்ணியாக நடித்திருந்தவர் தான் சுசித்ரா.
இவர் Car டிரைவர் மணிகண்டன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நன்றாக சென்று கொண்டிருந்த இந்த தம்பதிகளின் வாழ்க்கை கொரானா காலத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
நடிகை சுசித்ராவின் கணவருக்கும் வேலை இல்லாமல் போனதால் மிகவும் சிரமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் நடிகை சுசித்ரா தனது கணவரிடம் அவரின் அப்பா வீட்டில் உள்ள தங்க நகைகளை திருடி வர சொல்லியிருக்கிறார்.
மணிகண்டனும் சில சவர தங்க நகைகள் மற்றும் ஐம்பது ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி வந்துள்ளார்.
sun tv actress arrest
இதனை அறிந்து கொண்ட மணிகண்டனின் அப்பா, சுசித்ரா மற்றும் அவர் கணவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது போலீஸ் தலைமறைவு ஆகியுள்ள சுசித்ராவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சன் டிவி சீரியல் நடிகை செய்த இந்த செயல் சக சீரியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
