மிகவும் பின்தங்கிய SPB உடல்நிலை! சோகமான ரசிகர்கள்- SP Balasubrahmanyam
SP Balasubrahmanyam Health updates: இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத மாபெரும் பாடகர் தான் எஸ்.பி.பி அவர்கள். இவர் 40,000 பாடல்களுக்கு மேல் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பாடியுள்ளார்.
சமீபத்தில் இவர் கொரான பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதியானது நாம் அனைவரும் அறிந்ததே.
இவர் குணம் ஆகி மீண்டு வரவேண்டும் என்று தமிழகம் முழுவதும் பல குடும்பங்கள் , பல பிரபலங்கள் பிராத்தனை செய்துவருகின்றனர்.
நேற்று மாலை 6PM-6.05PM வரை உலகம் முழுவதும் உள்ள SPB ( SP balasubramaniam) ரசிகர்கள் சிறப்பு பிராத்தனையும் செய்தனர்.
SP Balasubrahmanyam Health updates

இந்தநிலையில் மருத்துவமனையில் இருந்து வெளிவந்த அறிக்கை அனைவரையும் மேலும் அதிர்ச்சியாக்கியுள்ளது. ஆம், SPB அவர்களின் நுரையீரல் பகுதியில் தற்போது இரத்தக்கசிவு ஏற்பட்டு உள்ளதாம்.
அதனால் சிகிச்சையளிப்பதில் மேலும் சிரமம் ஆகியுள்ளது. உடல்நிலை பின்னடைவு ஆனதை அறிந்த ரசிகர்கள் அனைவரும் மிகவும் உடைந்து விட்டனர்.
இருப்பினும் அவர் உடல்நலம் முன்னேற்றம் அடைய நாம் கடவுளை தொடர்ந்து பிராத்திப்போம் நல்ல மனிதர்களுக்கு கண்டிப்பாக நல்லதாய் தான் நடக்கும்.