Cinema

அட! இவங்களா சிம்ப்பிலா பிறந்தநாளை செலிப்ரேட் பண்ணாங்க?… யாரும் எதிர்பாராத தகவல்!

நம்ம எல்லாருக்கும் நிறைய நடிகைகளை பிடிக்கும். அதில் சில பேர் நிறைய படம் நடிச்சு பிரபலமாகி இருப்பாங்க. சில நடிகைகள் ஒரு சில படம் மட்டும் நடிச்சு இருப்பாங்க. அவங்க குறைவாக படம் நடிச்சு இருந்தாலும் நிறைய பேரோட மனசுல இடம் பிடிச்சு இருப்பாங்க. அதில் ஒருத்தங்கதா பிந்து மாதவி. இவங்க 1996 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி பிறந்து இருக்காங்க. இவங்களுக்கு காலேஜ் படிக்கும் போதே நடிக்க வாய்ப்பு கிடச்சு இருக்கு.

பிந்து மாதவி 2008 ஆம் ஆண்டு வெளியான ஆவக்காய் பிரியாணி என்ற தெலுங்கு படத்தில் முதன் முதலில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு வெளியான பொக்கிஷம் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இருப்பினும் இவங்களோட அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பிந்து நடிப்பதில் விருப்பம் இல்லை. இருப்பினும் பிந்து மாதவிக்கு திரைப்பதில் நடிக்க ஆர்வம் வந்தது
அதனால் நடிக்க தொடங்கினார். இவருக்கு தமிழ் படங்களில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பல படங்கள் நடித்தார். 2011 ஆம் ஆண்டு வெப்பம் என்ற திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வந்தார் பிந்து மாதவி.

இதனை அடுத்து 2012 இல் வெளியான கழுகு படத்தின் வெற்றி பிந்து மாதவியை தமிழ் சினிமாவில் கவனம் செலுத்த வைத்தது. அதனை தொடர்ந்து சில படங்கள் நடித்து இருந்தாலும் அவை எதுவும் மிக பெரிய வெற்றி படமாக அமையவில்லை. இதன் பிறகு உலகநாயன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய bigg boss சீசன் 1 நிகழ்ச்சியில் இணைந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் இவர் bigg boss குடும்பத்துடன் சேர்ந்து செய்த லூட்டிகள் மக்கள் பார்வையில் ஆர்வத்தை தூண்டியது. இதன் பிறகு பிந்து பிரபலம் ஆனார்.

இப்படி மக்கள் மனதில் நின்ற பிந்து ஜூன் 14 அன்று தனது பிறந்த நாளை சிம்பிளாக வீட்டில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். பிந்து கேக்
வெட்டும் போது எடுத்த போட்டோவை வரலக்ஷ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டு வாழ்த்து கூறியுள்ளார். இவர் சிம்பிளாக செலிப்ரேட்
பண்ண செய்தி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அனைவரும் இதனை ஆர்வமாக பார்த்துக்கொண்டு இருந்தனர். மேலும் பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களுடைய அன்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

5 thoughts on “அட! இவங்களா சிம்ப்பிலா பிறந்தநாளை செலிப்ரேட் பண்ணாங்க?… யாரும் எதிர்பாராத தகவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube