Serial

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் இரட்டை ரோஜா சீரியலில் நடிக்கும் சந்தினி தமிழரசன் பற்றி தெரியுமா?

rettai roja chandhini biography: ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இரட்டை ரோஜா சீரியலில் நடிக்கும் சாந்தினி தமிழரசன் பற்றி நீங்கள் அறியாத நிகழ்வுகளை பற்றி அவர்களின் வாழ்க்கை பற்றியும் பின்வருமாறு காண்போம்.

பிறப்பு மற்றும் பெற்றோர் :

சின்னத்திரை நடிகை சந்தினி பிறந்தது 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி. இவங்களுக்கு இப்போ 28 வயசு. அவங்க அப்பா பெயர் தமிழரசன், அம்மா பெயர் பத்மஞ்சலி. அவங்க சின்ன வயசுல இருந்தே வீட்டுல ரொம்ப கண்டிப்பாக வளந்தவங்காளம்.

பள்ளி, கல்லூரி படிப்பு :

சந்தினி பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைல தான். அவங்க படிச்ச பள்ளி சாக்ரெட் ஹார்ட் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளி, சர்ச் பார்க்,அண்ணா சாலை, சென்னை.

அவங்க படிச்ச கல்லூரி எத்திராஜ் பெண்கள் கல்லூரி. விஷுவல் கம்யூனிகேசன் படிச்சிருக்காங்க. இவங்க 12 வது படிக்கும் போது மிஸ் சென்னைல சேர்ந்திருக்காங்க. சந்தினி சின்ன வயசுல இருந்தே படம் பாத்தது இல்லயாம்.

கே. பாக்யராஜ் அவர்கள் மூலம் வாய்ப்பு கிடைத்தது :

சந்தினி 12 வது படிக்கும்போதே மிஸ் சென்னைல கலந்துகிட்டதுனால தமிழ் சேனல் ல ரியாலிட்டி ஷோ ல வாய்ப்பு கிடைச்சுது. அத பயன்படுத்திக்கிட்டு ரியாலிட்டி ஷோ பண்ணுனாங்க.

அத பாத்த கே. பாக்யராஜ் அவர்கள் சந்தினிய அலுவலகத்துக்கு கூப்டாரு. அங்க வந்து ஆடிஷன்ல சந்தினி செலக்ட் ஆகிட்டாங்க. அதற்கு பிறகு சாந்தனு கூட சித்து பிளஸ் 2 படம் நடிச்சாங்க.

அந்த படம் வெற்றி பெற்றது. அத தொடர்ந்து நிறைய படம் வாய்ப்புகளும் சந்தினிக்கு கெடச்சுது. சந்தினி நடிச்ச இரண்டாவது படம் படித்துறை. ஆன அது சில காரணத்துனால வெளியாகல.

இப்படி ஏராளமான வாய்ப்பு அவிங்க திறமைக்கு கிடைச்சாலும் சந்தினிக்கு படிக்கணும்னு ஆசை. அதனால அவிங்க கல்லூரி படிப்பை முடிச்சிரலாம்னு கல்லூரிக்கு போய்ட்டாங்க.அவங்க நெனச்சப்படியே படிப்பையும் முடிச்சிட்டாங்க.

வெள்ளித்திரை :

தனது பள்ளி படிப்பை முடிச்சிட்டு மறுபடியும் நடிக்க ஆரம்பிச்சாங்க சந்தினி. இவங்க தமிழ்ல 20க்கு மேற்பட்ட படம் நடிச்சிருக்காங்க அதுல முக்கியமா நான் ராஜாவாக போகிறேன், வில்லம்பு, லவ்வர்ஸ், கண்ணுல காச காட்டப்பா, பில்லா பாண்டி, பலூன், மன்னர் வகையறா இப்படி சொல்லிட்டே போலாம் அவ்ளோ நடிச்சிருக்காங்க.

அது மட்டும் இல்லாம தெலுங்குல ராஜா ரங்குஸ்கி படத்துல வில்லியாக நடிச்சிருக்காங்க. விஜய் சேதுபதி கூடையும் கவண், எட்டுத்திக்கும் பற போன்ற படங்களில் நடிச்சி வெள்ளித்திரைல அவங்கள நிலைனிறுத்திருக்காங்க.

அது மட்டும் இல்லாம சுந்தர்சி கூட ஒரு படம் பண்ணிருக்காங்க, அரவிந்த்சாமி கூடையும் வணங்காமுடி, அச்சமில்லை அச்சமில்லை, டாலர் தேசம் போன்ற படங்களிலும் தனது திறமையை கட்டியிருக்காங்க.

சின்னத்திரை:

சின்னத்திரைல நடிக்கிறது எனக்கும் நான் நடிச்ச படங்களுக்கும் ஒரு விளம்பரமாக நெனச்சி சின்னத்திரைலயும் நடிச்சி அசத்திட்டு வராங்க சந்தினி.

இவங்க 2018 ஆம் ஆண்டு நடன இயக்குனர் நந்தாவ காதல் கல்யாணம் பண்ணுனாங்க.அதுக்கு பிறகு 2019துல விஜய் டிவில ஒளிபரப்பு செய்யப்பட்ட தாழம்பூ சீரியல்ல நடிச்சாங்க. பிறகு ஜீ தமிழ்ல இரட்டை வேடத்துல இரட்டை பறவையா இரட்டை ரோஜா சீரியல்ல நடிச்சிட்டு இருக்காங்க.

கதைச்சுருக்கம் :

ஜீ தமிழ்ல திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல் தான் இரட்டை ரோஜா. இந்த சீரியல் முதன்முதலில் ஷிவானி நாராயணன் வச்சுத்தான் ஆரம்பிச்சாங்க. ஆன சில காரணத்துனால ஷிவானி நாராயணன் வெளியானதுனால சந்தினி தமிழரசன் நடிச்சிட்டு வராங்க.

சேர்ந்தே சிரிக்கிறோம் சேர்ந்தே அழுகிறோம் அம்மா கருவறையில் இந்த சீரியல்ல சந்தினி அணு மற்றும் அபி கதாபாத்திரத்துல நடிக்கிறாங்க. அவங்க இரண்டு பேரும் மிடில் கிளாஸ் குடும்பம். ஆன குணங்களும் பழக்கவழக்கங்களும் வேற வேற மாதிரி. அணு வந்து அதிகாரம் பண்றவ, ரொம்ப பேராசை புடிச்சவ. ஆன அபி ரொம்ப அமைதியான பொண்ணு எல்லாரையும் நல்லா பாத்துக்கிற பொண்ணு. தெய்வானை தான் அவங்க அம்மா.

அணு மட்டும் தான் கான்வென்ட் பள்ளில படிச்சா. அபிக்கு அவ்ளோவா படிப்பு வரல. கடைசியா அணு லாயர் ஆகிட்டா, ஆன அபி டைலரிங் பண்ணிட்டு இருந்தா. இன்னொரு பக்கம் இரண்டு அண்ணன் தம்பி இருந்தாங்க. ஒருத்தர் சந்தோஷ் இனொருத்தர் சஞ்சீவ்.

சந்தோஷ் மற்றும் சஞ்சீவ் :

அவங்க ரொம்ப பணக்கார குடும்பம். சந்தோஷ் ரொம்ப அமைதியானவன், எளிமையானவன். அவன் பிசினஸ் பாத்துட்டு இருக்கான். ஆன சஞ்சீவ் ரொம்ப கோவக்காரன் சீக்கிரம் கோவப்பற்றுவான். அதனால அவங்க அம்மா சீதா சஞ்சீவ் மேல அக்கறையா இருப்பாங்க.

சந்தோஷ் அணுவ பார்க்ல பாத்துருக்கான். அவனுக்கு அணுவை ரொம்ப புடிச்சிருச்சி லவ் பண்ண ஆரம்பிச்சிட்டான். அவன் பணக்காரன் அப்படின்றத மறச்சிட்டு அணுவுக்கு அசிஸ்டன்ட் லாயர்ரா சேர்ந்து ரெண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.

அதே மாதிரி சஞ்சீவும் ஒரு கார் ஆக்சிடென்ட்ல ஒரு பெரியவர திட்டிட்டு இருக்கும் போது அபி வந்து சஞ்சீவுக்கு அட்வைஸ் பண்ணுனா. அது அவனோட அம்மா மாதிரி அவனுக்கு தெரிஞ்சதுனால அவன் அபிய லவ் பண்ண ஆரம்பிச்சான்.

இப்போ இவங்க லவ் எல்லாம் சக்ஸஸ் ஆகுமா யாருக்கு யாரோட கல்யாணம் ஆகும் அப்படின்னு பாக்கறது தான் இந்த மெகாத்தொடர்.

5 thoughts on “சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் இரட்டை ரோஜா சீரியலில் நடிக்கும் சந்தினி தமிழரசன் பற்றி தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube