Cinema

கொரோனாவால் உயிர் இழந்த மலையாள பாடலாசிரியர்!

ரீசெண்டா மலையாள ரசிகர்களுக்கு தெரிய வந்த அதிர்ச்சி தகவல் என்னானு பார்த்தா பாடலாசிரியர் ஒருவர் இறந்து இருகிறார். அவர் யார்னா பூவாசல் காதர் அவர்கள். இவர் கேரளாவை சேர்ந்த முன்னனி மலையாள பாடலாசிரியர் ஆவார். இவர் திருவனந்தபுரம்
மாவட்டத்தில் உள்ள பூவாசல் என்ற கிராம்பத்தில் வசித்தவர். இவர் 1948 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று பூவாசல் கிராமத்தில் பிறந்தார். இவருடைய உண்மை பெயர் முஹம்மது அப்துல் காதர். இவருடைய அப்பா பெயர் அபூபக்கர் பிள்ளை மற்றும் இவருடைய அம்மா பெயர் ரபியத்துள் அடாபியா. இவர் பயோ டெக்னாலஜி என்ற பட்ட படிப்பை படித்தார்.

இவர் முக்கியமான மலையாள திரைப்பட துறையில் பணியாற்றினார். அவருடைய முதல் திரைப்படம்
கட்டுவித்தச்சனில் பாடலாசிரியராக பணியாற்றினார். ஆனால் இவர் பீவி. எம். எஸ் பாபுராஜின் இசை இயக்கத்தில் 1973 இல் வெளியான சுஜி என்ற திரைப்படத்தில் பாடலாசிரியாக
அறிமுகமானார். இவர் மலையாள திரைப்பட துறையில் 900 க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு பாடல் எழுதி பெருமை சேர்த்து உள்ளார்.

அவர் பிச்சு திருமலாவுடன் சேர்ந்து, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மலையாள திரையுலகில் ஆதிக்கம் செலுத்தினார்.
குறிப்பாக ஷியாம், எம். ஜி. ராதாகிருஷ்ணன், கங்கை அமரன், இளையராஜா மற்றும் சங்கர் கணேஷ் போன்ற இசையில் அதிகமான பாடல்களை எழுதி உள்ளார். அவரது பாடல்வரிகளுக்கு தொகுப்பு மெட்டுகளில் வேண்டும் என்று கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி, கே.எஸ். சித்ரா
மற்றும் உன்னி மேனன் இவர்களிடம் ஆலோசித்து பாடல்களை இயக்கினார்.

சமீபத்தில் இவருக்கு உடல் நிலையில் மாற்றம் ஏற்ப்பட்டது. இவருக்கு உடல் நிலை பரிசோதனையில் கொரோனா தொற்று என்று தெரியவந்தது.
இதனால் இவர் திருவனத்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறந்த மருத்துவர்களால் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இவர் சிகிச்சை பலமின்றி ஜூன் 22 ஆம் தேதி தனது 72 வயதில் மரணம் அடைந்தார். இதனால்
இவருடைய குடும்பத்திற்கு பல மலையாள திரைப்பட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

6 thoughts on “கொரோனாவால் உயிர் இழந்த மலையாள பாடலாசிரியர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube