Cinema

லட்சுமி மேனன் ரோலில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!! தெலுங்கில் வர போகும் வேதாளம்!!!..

தல அஜித் நடித்து 2015 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான ஆக்ஷன் படம் தான் வேதாளம். இந்த படத்தை இயக்குநர் சிவா இயக்கி உள்ளார். இந்த படத்தில் அஜித் மற்றும் லட்சுமி மேனன் முக்கியமான கதாபாத்திரத்திலும், ராகுல் தேவ், தபீர் துஹன் சிங், ஸ்ருதி ஹாசன் மற்றும் சூரி ஆகியோர் துணை வேடங்களிலும் நடிச்சிருக்காங்க. இந்த படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக மிக பெரிய அளவு வெற்றியை தந்ததுனு சொல்லலாம்.

இந்த படத்தை சர் சாய் ராம் கிரேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசை அமைத்திருக்கிறார். வேதாளம் படம் திரை அரங்குகளில் வெளியிட்டததில் தமிழ் மக்களிடத்தில் மிக பெரிய அளவு வரவேற்பை பெற்றதுனு சொல்லலாம். சொல்லப்போனால் இன்றளவும் வேதாளம் படம் தமிழ் மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்திருக்கிறது, மேலும் அனைவருடைய எதிர் பார்ப்பையும் பூர்த்தி செய்துள்ளது.

இந்த படத்தில் வரும் அண்ணன் தங்கை பாசம் எல்லா குடும்பத்திலும் இருக்கும் சகோதர சகோதிரிகளிடத்தில் கண்ணீரை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. இப்படிப்பட்ட வசூல் சாதனையை படைத்த இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கு பெரிய கடுமையான போட்டி நடந்தது. அதன் முடிவாக தெலுங்கு ரீமேக்கில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, அஜித் கதாபாத்திரத்தில் நடிப்பதாக உறுதியாகி உள்ளது.

இந்த படத்தை மெஹர் ரமேஷ் இயக்க உள்ளதாகவும் இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் கதாபாத்திரத்தில் அவரையே நடிக்க வைப்பதாக முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமான லட்சுமி மேனனிற்கு பதிலாக கீர்த்தி சுரேஷிடம் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்கான தேதி முடிவானதும் இவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனவும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தை அனில் சுக்ரா, ராம்சரன் மற்றும் ஏ.எம். ரத்னம் ஆகிய மூன்று பேரும் தயாரிக்க உள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும் இந்த படத்தை பற்றிய எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே உள்ளதுனு சொல்லலாம். தமிழில் மக்களின் மனதை வென்ற இந்த படம் தெலுங்கிலும் மக்களின் மனதை வெல்லும் என பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கவினின் மிரட்டலான நடிப்பில் புதிய வெப் சீரிஸ்!! முழு தகவல்!!

தற்போது சோசியல் மீடியாவில் கவின் பற்றி ஒரு தகவல் வெளியாகி இருக்கு. அது என்னனா, இவர் புதிதாக வெப் சீரிஸ் நடிக்க போறாராம். அந்த சீரிஸ்க்கு ஆகாஷ் வாணி என பெயர் வச்சு இருக்காங்க.
இந்த படத்தோட படப்பிடிப்பு தொடங்கிட்டதா தகவல் வெளியிட்டு இருக்காங்க. இந்த தகவலை தொடர்ந்து இவருடைய மற்றோரு படம் வெயிட போவதாக சொல்லி இருகாங்க. அது என்ன படம் என்று நிறைய
பேருடைய மனசுல எண்ணங்கள் இருந்த நிலையில், படத்தோடு பெயரும் வெளியிட்டுட்டாங்க..

கவின் நடிப்பில் அடுத்ததாக லிஃப்ட் என்ற படம் வெளியாக இருக்கு. இந்த படத்தோட பணிகள் நிறைவடைந்து இப்போ வெளியிட தாயாராக இருப்பதாக படக்குழுவினர் சொல்லி இருக்காங்க. இந்த படத்தோட
எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் வெளியிட ஆர்வமாக உள்ளனர். ஆனால் லிப்ரா நிறுவனம் திரையரங்குகள் திறந்த பிறகு இந்த படத்தை வெளியிட போவதாக அறிவிச்சு இருக்காங்க.

கவின் அவருடைய படத்தில் நடிப்பது மட்டும் இல்லாமல், சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் நடித்து கொண்டு இருக்கும் டாக்டர் மற்றும் பீஸ்ட் படத்தில் உதவி இயக்குனராக வேலை செஞ்சுட்டு இருக்கறதா தகவல்
வெளியாகிட்டு இருக்கு.. இந்த நிலையில் கவின் கொஞ்சம் கூட சோர்வடையாம புதிதாகவே வெப் சீரிஸ் நடிக்க தொடங்கி இருக்காரு.. இந்த சீரிஷை அட்லீயுடன் உதவி இயக்குனராக வேலை பார்த்த ஈனாக் இயக்கிட்டு
இருக்காரு என்று சொல்லி இருக்காங்க..

இந்த படத்தில் ரேபா ஜான் ஹீரோயினியாக நடித்து வருகிறார்.. இவர் மட்டும் இல்லாமல் மேலும் , சரத் ரவி , தீபக் பரமேஷ், வின்ஷா, தாபித் வெங்கட் ராமன், மார்க்ரெட், மெல்லின் , ஜான்சன் , கவிதாலயா
கிருஷ்ணன் போண்றவங்க நடிக்க ஒப்பத்தம் செஞ்சு இருக்காங்க.. இந்த வெப் சீரிஸ் பற்றிய கதை என்ன என்று நிறைய பேருடைய மனசில் தோன்றி இருக்கும்.. அந்த தகவலையும் இயக்குனர் சொல்லி இருக்காரு..

அது என்னனா இந்த கதை காதல் மற்றும் காதல் உறவில் வர பிரச்சனைகளை பற்றிய ஒரு உணர்வுபூர்வமான கதை என்று சொல்லி இருக்காரு.. இது ஒரு அழகான காதல் திரைக்கதை என்று சொல்லலாம்.
இது மட்டும் இல்லாமல் இந்த படம் பார்வையாளர்களை எளிதில் உணர்வுபூர்வமாக இழுக்கும் அளவிற்கு இருக்கும் என இயக்குனர் சொல்லி இருக்காரு..

இந்த ‘ஆகாஷ் வாணி’ வெப் சீரிஷை ராமணகிரிவாசன் எழுதி உள்ளார். இந்த சீரிஸ்க்கு சாந்தகுமார் சக்கரவர்த்தி ஒளிப்பதிவாளராக உள்ளார். இசையமைப்பாளராக குணா பாலசுப்பிரமணியன் போன்றோர்
வேலை செஞ்சுட்டு இருக்கறதா தகவல் வெளியாகி இருக்கு..

7 thoughts on “லட்சுமி மேனன் ரோலில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!! தெலுங்கில் வர போகும் வேதாளம்!!!..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube