தெலுங்கு நடிகரான கதி மகேஷ் விபத்தில் சிக்கி மரணம்!!!

கதி மகேஷ் குமார், இவர் ஒரு இந்திய திரைப்பட விமர்சகர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் தெலுங்கு சினிமாவில் பணியாற்றிய நடிகர் மற்றும் தெலுங்கு டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ்ஸிலும் கலந்து கொண்டவர். இவர் விமர்சகராக மட்டும் இல்லாமல் எழுத்தாளராகவும், இயக்குனராகவும் தெலுங்கு திரை உலகில் சிறந்து பணியாற்றி வந்தார்.

கதி, தன்னோட திரை பயணத்தை “இடறி வர்ஷம்” என்ற படத்தில் இணை எழுத்தாளராக பங்கு வகித்து தொடர்ந்தார். பிறகு “மினிக்குருலு” என்ற படத்திற்கும் இணை எழுத்தாளராக பணியாற்றி உள்ளார். இந்த படம் சிறந்த படம் என்ற அகாடமி விருதுகளில் போட்டியிட்டுள்ளது. மேலும் இந்த படம் ஆஸ்கார் நூலகத்தின் நிரந்தர மைய சேகரிப்பாக தொடர்ந்து பாதுகாக்கப்பட்ட முதல் தெலுங்கு படம் என்ற சிறப்பை உடையது.

அடுத்து 2015 இல் காதல் நகைச்சுவை படமான “பெசரட்டில்” என்ற படத்தின் இயக்குனர் ஆனார். இந்த படத்தில் ஃப்லோகேம் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளார். மேலும் “ஹ்ருதய காலயம்” மற்றும் “கோபரி மாட்ட” என்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். 2017 இல் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார்.

இப்படிப்பட்ட இவர், ஐதராபாத் விபத்தில் சிக்கி சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் கடந்த ஜூன் 26 அன்று காரில் சித்தூரிலிருந்து ஐதராபாத் செல்லும் வழியில் விபத்தில் சிக்கினார். இதில் இவரின் தலை மற்றும் மூக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது, மேலும் முதுகு எலும்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

இவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், இவருக்கு ஆந்திர அரசு ரூ.17 லட்சம் நிதியாக வழங்கியது. இவர் கடந்த 14 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்து செயற்கை சுவாசமும் அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் இவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இவரின் மறைவிற்கு தெலுங்கு திரை உலகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றது.

5 thoughts on “தெலுங்கு நடிகரான கதி மகேஷ் விபத்தில் சிக்கி மரணம்!!!

Leave a Reply

Your email address will not be published.

Follow Us

Subscribe us on Youtube