Serial

பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் சுமதி யார் தெரியுமா?

Bharathi kannamma Neepa:

பாரதி கண்ணம்மா சீரியல் தினந்தோறும் இரவு 9.00 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும். அந்த சீரியலில் வரும் கதாபாத்திரங்களும் தனித்தனி வரவேற்பினை மக்களிடையே பெற்றுள்ளது

அதைத்தொடர்ந்து சுமதி என்னும் கதாபாத்திரம் தற்போது பிரபலம் ஆகி வருகிறது. கதாபாத்திரத்தில் நடித்தவர் யார் என்பதை பற்றியும் அவங்க உண்மையான பெயர் என்ன என்பதை பற்றியும் பின்வருமாறு காணலாம் வாங்க.

உண்மை பெயர் மற்றும் பெற்றோர் :

சுமதி கதாபாத்திரத்தில் நடிச்சவங்க உண்மையான பெயர் சண்முகப்பிரியா. அவங்க சீரியலில் நடிக்க ஆரம்பிச்சதுக்கு பிறகு தன்னோட பெயரை நீபா அப்படினு மாத்திக்கிட்டாங்க . அவங்க சென்னையில் பிறந்தாங்க. அவங்க அப்பா பெயர் வாமன். அவங்க அம்மா பெயர் மாலினி வாமன்.

நடனம் மீது ஆர்வம்:

நீபா அவர்களின் அம்மா அப்பா இருவருமே dance choreographers. அதனால சின்ன வயதிலிருந்தே நீபாவிற்கு நடனம் மீது ரொம்ப ஆர்வம். அதனால அவங்க பள்ளி கல்லூரி படிப்பைக்கூட விட்டுட்டு நடன பயிற்சி மேற்கொண்டார்.

அம்மாவிடம் நடனம் கற்றுக் கொள்ள சென்ற நீபா செல்லம் கொஞ்சிக் கொண்டு சரியாக எதையும் கற்றுக்கொள்ளவில்லை. அதனால் வேறு ஒரு மாஸ்டரிடம் அனுப்பி வைத்து கற்றுக்கொடுத்தார்.

சின்ன வயதிலிருந்தே பிரபலம் :

நீபா அவர்கள் சின்ன வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.அதனால் சின்ன வயது பருவதில்லையே பிரபலம் ஆகிட்டாங்க. அவங்க நிறைய தமிழ் படங்களிலும், சீரியல்களிலும் நடிச்சிருக்காங்க.பள்ளி கல்லூரியை விட்டு விட்டு நடனத்திற்கும் திரையுலகிற்கும் சென்றது வீண் போகவில்லை. பெற்றோருக்கு அதிக பெருமையை தேடி தந்துள்ளார்.

மானடா மயிலாடா:

இப்போ வரைக்கும் 12 சீரியலிலும் 6 படங்களிலும் நடிச்சிருக்காங்க.அம்மா பொண்ணு கதாபாத்திரத்தில் மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றிருக்காங்க.நீபாவிற்கு நடனம் மீது ஆர்வம் இருந்ததால் மானடா மயிலாடா டான்ஸ் ஷோவில் பங்கு பெற்று வெற்றி பெற்றார்.

சூப்பர் மாம் :

அவங்களோட மிக சிறந்த நடன திறமையால் ரொம்ப பிரபலம் ஆனாங்க. அதுமட்டுமில்லாமல் நிறைய படங்களில் supporting actor ஆகவும் நடிச்சிருக்காங்க. நீபா அவங்க பொண்ணு ஸ்ரேயா உடன் இணைந்து சூப்பர் மாம் ஷோவில் பங்கு பெற்றுள்ளார்.

திருமணம் :

நீபா அவர்களுக்கு வேலூரை சேர்ந்த கட்டுமான தொழில் அதிபர் சிவகுமாருடன் சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம் ஸ்ரீ லட்சுமி பிரசன்னா மகாலில் திருமணம் நடந்தது. திரையுலகினர் பலர் வந்து வாழ்த்தினர்.

வெள்ளித்திரையில் நீபா :

நீபா அவர்கள் காவலன், பெருசு, கண்ணும் கண்ணும், தோட்ட, பள்ளிக்கூடம், அம்முவாகிய நான் போன்ற படங்களிலும் நடிச்சிருக்காங்க.காவலன் படத்தில் விஜய் மற்றும் வடிவேலுவுடன் இணைந்து நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

நடிகர் விஜய் அவர்களுடன் காவலன் படம் நடிப்பதற்கு முன்னாடியே புதிய கீதை படத்தோட மெர்குரி பூவே பாடலுக்கு விஜய் சாரோட ஜாஸ்மின் மேடம் ஆடவேண்டிய டான்ஸ் சொல்லி கொடுக்கும் போது அவர்களுக்கு பதில் நீபா விஜய் சாருடன் டான்ஸ் ஆடி காட்டிருக்காங்க.

அதற்கு பிறகு 8 வருடம் கழித்துதான் காவலன் படத்தில் விஜய் அவர்களுடன் நடிச்சிருக்காங்க.அது மட்டுமில்லாமல் சினிமாவில் டான்சரா போயிருக்காங்க. டான்சரா இருந்துகிட்டே அசிஸ்டன்ட் choreography பண்ணிருக்காங்க.

சின்னத்திரையில் மின்னிய நீபா :

நீபா அவர்கள் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட கவ்யாஞ்சலி என்னும் தொடரில் நடிச்சிருக்காங்க. பிறகு பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்னும் தொடரில் வேணி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது பாரதி கண்ணம்மா என்னும் மேகத்தொடரில் கண்ணம்மா வீட்டு( owner )சுமதி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அந்த கதாபாத்திரத்திற்கு பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது.

கதைச்சுருக்கம் :

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா தங்கியுள்ள வீட்டின் owner சேகர் மற்றும் சுமதி சேகர். அவர்களுக்கு ஒரு மகள்.இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.சேகர் ஒரு சந்தேகம் பிடித்தவர்.

கணவன் குடித்துவிட்டு கொடுமை :

சுமதி மகளிர் குழுவில் வாங்கி வந்த பணத்தை ஏதோ தவறான வழியில் சம்பாதித்த பணம் என்று சுமதியை கொடுமை படுத்துவார்.

அதே போல் அடிக்கடி குடித்துவிட்டு சுமதியை சந்தேகப்பட்டு கொடுமை படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார் சேகர்.

சந்தேகத்தால் ஏற்படும் வன்முறை :

பல முறை சூடும் வைத்துள்ளார். அதையெல்லாம் வெளியே காட்டிக் கொள்ளாமல் சமாளித்து சுமதி வாழ்க்கையை நடத்தினார்.

ஒரு சேகர் குடித்துவிட்டு வந்து சுமதியை கொடுமை செய்வதை பார்த்த கண்ணம்மா.

போதை மருவாழ்வு மையம் :

அவரை சுத்தியால் அடித்து பெண்கள் என்றால் உங்களுக்கு கேவலமா போயிருச்சா என்று ஆவேசமாக வசனம் பேசி சேகரை போதைமருவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தார்.

மருவாழ்வு மையத்திற்கு சென்றதும் வீட்டில் வருமானம் இல்லாமல் பழைய சாப்பாடு சாப்பிட்டு வந்தாங்க.

புதிய தொழில் :

அதை பார்த்த கண்ணம்மா நாம் அனைவரும் சேர்ந்து ஒரு தொழில் செய்வோம் என்று அரிசி மாவு தொழிலை ஆரம்பிக்க தொடங்கினர்.

கணவர் மனம் திருந்தி வந்து சுமதியுடன் சேர்ந்து வாழ்வதே சுமதி சேகரின் கதை ஆகும்.

6 thoughts on “பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் சுமதி யார் தெரியுமா?

  • Patients were allocated the simple alternate randomization into Group I 5-mg once-daily tadalafil and Group II 5-mg alternate-day tadalafil priligy dapoxetine

  • Dose-response relationships, between 20 mg and 40 mg, were not observed for 6-minute walk distance or pulmonary vascular resistance PVR in subjects with PAH in the placebo-controlled study buy cialis pro You may find that using a vacuum device requires some practice or adjustment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube