Serial

பாக்யலக்ஷ்மி சீரியலில் நடிக்கும் இனியாவை பற்றி தெரியுமா?

தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் அனைத்து சீரியல்களிலும் ஒரு கருத்தும் பல சிந்தனைகளும் இருக்கும். நாம் வாழும் வாழ்க்கையில் அம்மா என்பவள் எவ்வளவு முக்கியம் என்பதை பற்றி எடுத்துரைப்பது போல் அமையும் கதை தான் பாக்யலக்ஷ்மி மெகாத்தொடர்.இத்தொடரில் பாக்யாவிற்கு மகளாக நடிக்கும் இனியாவின் வாழ்க்கையை பற்றி பின்வருமாறு காணலாம்.

பிறந்த தேதி மற்றும் பெயர் :

இனியாவின் உண்மையான பெயர் நேஹா மேனன். அவங்க 2002ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் நாள் பிறந்துருக்காங்க. நேஹா மேனன் அப்பா பெயர் பிரசன்ன ராஜேஷ். நேஹா மேனன் வேலம்மாள் வித்யாஸ்ரம் பள்ளி சென்னையில் பள்ளி படிப்பை முடிச்சிருக்காங்க.

பிறந்த ஊர் :

நேஹா மேனன் அவர்கள் பிறந்த ஊர் கேரளாவில் உள்ள சாலக்குடி. இப்போ சென்னையில் வசித்து வராங்க.நேஹா மேனன் படம், சீரியல் மற்றும் மாடல்லிங்னு மல்டி டேலண்ட் கொண்டவங்க.

பிடித்த நடிகர் :

நேஹா மேனன் அவர்களுக்கு டிவி பாக்குறது ரொம்ப புடிக்கும். நடிகர் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் அவர்களையும் நேஹா அவர்களுக்கு ரொம்ப புடிக்கும்.

பள்ளி பருவம் :

நேஹா அவர்கள் 5ஆம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. இப்படி சின்ன வயசுல இருந்தே நடிக்க ஸ்டார்ட் பண்ணுனதுனால் அவங்களுக்கு பள்ளியில் நண்பர்களே இல்லையாம். அதிகமா அவங்க ஷூட்டிங் போறதுனால ஸ்கூல் நண்பர்கள் யாரும் இல்லை. அதனால் நிறைய தடவை அம்மா கிட்ட சண்டை போட்டுருக்காங்கலாம்.நான் ஸ்கூலுக்கு போறேன் ஷூட்டிங் போகலனு. பிறகு வளந்ததுக்கு அப்புறம் தான் நெனச்சாங்கலாம். நமக்கு சின்ன வயசுலயே இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு அப்படினு பெருமை பட்டுக்கிட்டாங்க.

முதல் சீரியல் :

நேஹா மேனன் அவர்கள் நடிச்ச முதல் சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட டி. கே. எஸ் நிமிஷ் அவர்கள் தயாரித்த பிள்ளை நிலா (2012 – 2014) சீரியலில் நிலா கதாபாத்திரத்தில் ஸ்ரீ குமார் அவர்களுடன் இணைந்து நடிச்சிருக்காங்க.அருண் குமார் ராஜன்,விக்னேஷ் குமார்,அப்சர்,மானஸ் சாவலி மற்றும் குகன் சண்முகம் போன்ற டிவி நடிகர்களுடனும் நடிச்சிருக்காங்க நேஹா மேனன்.

சின்னத்திரை :

பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள்(2012),வாணி ராணி(2013-2018),நிறம் மாறாத பூக்கள், தமிழ் செல்வி, தற்போது சன் டிவியில் சித்தி (2020) மற்றும் பாக்யலக்ஷ்மி(2020) போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.வாணி ராணி சீரியலில் தேனு என்னும் கதாபாத்திரத்தில் மிகவும் பிரபலம் அடைந்தார் நேஹா மேனன்.தமிழ் செல்வி சீரியலில் ஆஷிகா கோபால் படுகோனே அவர்களுக்கு சப்போர்டிங் கதாபாத்திரமாகவும் நடித்துள்ளார்.வெள்ளித்திரை :இவங்க முதன் முதலில் நடித்த படம் 2015ல் தமிழ் படம் யட்சம் அதில் ஆர்யா,க்ரீஷ்ணா,தீபா சந்நிதி மற்றும் ஸ்வாதி ரெட்டி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.அதைத்தொடர்ந்து 2017 ல் ஜாக்சன் துரை மிக சிறந்த படமாக அமைந்தது அதில் சத்யராஜ், சிபிராஜ் மற்றும் பிந்து மாதவி ஆகியோருடனும் இணைந்து நடித்துள்ளார் நேஹா.

குறும்படம் :

அது மட்டுமில்லாமல் தி எல்லோ பெஸ்டிவல் (the yellow festival ) என்னும் குறும்படத்தில் நடித்து அவங்க நடிப்பு திறமைக்கு அவார்ட் (award) வாங்கிருக்காங்க. அது மட்டுமல்லாமல் அவங்க இப்போ அக்காவா ஆனதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்காங்க.

கதைச்சுருக்கம் :

விஜய் டிவியில் தினந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் மெகாத்தொடர் பாக்யலக்ஷ்மி. இத்தொடரில் பாக்யா,கோபி, செழியன், எழிலன், இனியா, ஜென்னிபர், பாட்டி, தாத்தா போன்ற கதாபாத்திரங்கள் நடித்து வருகின்றனர்.அதில் பாக்யாவிற்கு மூன்றாவது மகளாக இருப்பவர் இனியா.

இனியா அவங்க அம்மா பாக்யா படிக்காததுனால் பாக்யாவை ஸ்கூல் மீட்டிங்கு கூட்டிட்டு போகமாட்டாள். அம்மாவை பெருசா மதிக்கவும் மாட்டாள்.அதை பெருசா நினைக்காமல் பாக்யா எல்லாரையும் ஒன்றாக நினைத்து கவனிப்பாங்க. இனியா தப்பு பண்றதா ஸ்கூல் பிரின்சிபால் அடிக்கடி சொல்லுவாங்க. பாக்யா இனியாவை கூப்பிட்டு கண்டிந்து கொண்டே இருப்பாங்க.அது இனியாவிற்கு பிடிக்காது.

அவங்க அப்பாவும் ரொம்ப செல்லமா இனியாவை வளத்துவாரு. இப்படி இருந்த நேரத்துல இனியா ஸ்கூல் நண்பர்கள் பேச்சை கேட்டுகிட்டு அவங்க ஸ்கூல் சீனியர் பையன் கூட பேசி பழகி ஸ்கூல் எக்ஸாம் கூட எழுதாம சினிமாவிற்கு போயிருவாங்க.

விஷயம் ஸ்கூல் பிரின்சிபாலுக்கு தெரிஞ்சி இனியாவுக்கு டீசி குடுத்துருவாங்க. இனியாவ நல்லா பாத்துக்கமா வேலை வேலைன்னு செஞ்சிட்டு இருக்க அப்படினு கோபி பாக்யா மீது கோவப்பட்டு சண்டை போடுவாங்க.இனியாவை கண்டித்து வளர்த்துன பாக்யாவுக்கு ரொம்ப கஷ்டம் ஆகிரும்.

அவங்க நான்தான் படிக்காத முட்டாள இருக்கேன் இனியாவாவது நல்லா படிக்கணும்னு ஆசை பட்டேன் அதுவும் இப்படி ஆயிருச்சேன்னு ரொம்ப கவலைப் படுவாங்க.அதெல்லாம் நினைச்சி இனியாவும் ரொம்ப கவலை படுவாங்க. பாக்யா ஸ்கூல் பிரின்சிபால் கிட்ட போய் கஷ்ட பட்டு பேசி அழுது அவங்க கஷ்டத்தை எல்லாம் எடுத்து சொல்லி இனியாவை மறுபடியும் ஸ்கூல்ல செத்துருவாங்க.இனியாவும் அம்மா பட்ட கஷ்டத்தை புரிஞ்சிகிட்டு நல்லபடியா படிக்க ஸ்டார்ட் பண்ணிருவாங்க.

ஒரு பெண்ணுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்த அம்மா தன்னோட பொண்ணும் என்ன மாதிரி ஆகிற கூடாது போராடும் கதை தான் பாக்யாவுக்கும் இனியாவுக்கும் இருக்கும் கதை.

5 thoughts on “பாக்யலக்ஷ்மி சீரியலில் நடிக்கும் இனியாவை பற்றி தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube