Serial

கலர்ஸ் தமிழில் ஹிரோவாக நடிக்கும் அசோக் பற்றி தெரியுமா? வாங்க பாக்கலாம்…

abhi tailor madhan : கலர்ஸ் தமிழில் திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் தான் அபி டைலர். இந்த சீரியல் ஓட ப்ரோமோலாம் பார்த்தோம்
ரொம்பவே சூப்பரா இருந்தது. இந்த சீரியலில் ஹிரோவாக அசோக் கேரக்டரில் நடிக்கும் மதன் அவர்களை பற்றி பாக்கலாம். இவருடைய உண்மையான பெயர்
மதன் பாண்டியன். இவர் ஒரு இந்தியன் ஆக்டர் அது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவலயும் சீரியலையும் நடிச்சிட்டு இருக்காங்க. இவங்களுக்கு மதன்
என்று புனை இருக்கு. இவங்க 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி மதுரையில் பிறந்தார்.

இவர் மதுரையில் பிறந்தார். இவங்களுடைய சொந்த ஊர் மதுரை. இவங்க இப்போ சென்னையில் இருக்காங்க. இவங்களோட தொழில் வந்து பிலிம் மற்றும் டிவி ஆக்டரா இருக்காங்க, அதுமட்டும் இல்லாமல் தொகுப்பாளர் ஆகவும் பணிபுரிராங்க. இவர் வந்து தனது இடைநிலை கல்வியை வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார்.

இவர் மதுரவாயல் டாக்டர்.
எம். ஜி. ஆர் பொறியல் கல்லூரியில் BE என்ற பட்ட படிப்பை முடித்தார். இவர் 2011 ஆம் ஆண்டில் இருந்து நடிக்க ஆரம்பித்தார். இவருடைய பொழுது போக்கு வந்து டிவி பார்ப்பது, நகைச்சுவை, நடனம் மற்றும் இசை கேட்பது. இவங்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரியும் ஆனா இவருடைய தாய் மொழி தமிழ். இவருக்கு பிடித்த நடிகர் அஜித் மற்றும் விக்ரம். இவருக்கு பிடித்த நடிகை சிம்ரன் மற்றும் ஜோதிகா. அம்மா மெஸ்ஸில் செய்யத மீன் குழம்புனா இவருக்கு ரொம்ப பிடிக்குமாம். இவருக்கு விருப்பமான நிறம் வந்து நீலம், சிகப்பு மற்றும் மஞ்சள் கலர்.
காதல் மன்னன் மற்றும் குடிமகன் என்ற திரைப்படம் இவருக்கு பிடித்த படமாம். இவருக்கு பிடித்த இடம் வந்து கோவா மற்றும் மதுரை.

இவர் வந்து நடித்த முதல் சீரியல் வந்து கனா காணும் காலங்கள். இவங்க 2011 ஆம் ஆண்டு தான் சினிமா வாழ்க்கையில் கால் எடுத்து வச்சாங்க. அப்பையில் இருந்து இப்ப வரைக்கும் நடிச்சிட்டு வராங்க. அதுக்கப்பறம் இவங்க வெள்ளித்திரையில் மொத்தமா மூனு திரைப்படங்கள் நடிச்சி இருக்காங்க. இவர் நடித்த முதல் திரைப்படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்
என்ற சிம்பு திரைப்படத்தில் ஒரு கேரக்டர் பண்ணி இருந்தாங்க. அதுக்கப்பறம் இவன் யார் என்று தெரிகிறதா என்று படத்திலும் நடிச்சி இருக்காங்க. அதுக்கப்பறம் ஜீவி பிரகாஷ்
நடிப்பில் வெளியான திரிஷா இல்லைனா நயந்தாரா என்ற படத்தில் ஒரு இம்பார்டண்ட் கேரக்டர் பண்ணி இருந்தாங்க. இந்த படத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். இது மட்டும் இல்லாமல் இவங்க மூனு சீரியல் நடிச்சி இருக்காங்க.

இவர் நடித்த முதல் சீரியல் தான் கனா காணும் காலங்கள். இந்த சீரியல் 2011 ஆம் ஆண்டு வெளியானது. இரண்டாவது ஆக ஆஃபீஸ் என்ற சீரியலில் விஜய் டிவியில் இவர் நடித்தார். இதுக்கப்பறம் அஞ்சரை பெட்டி என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக நடித்தார். இவர் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் பாட்டிஸ்பென்டாக கலந்து கொண்டார். அதுக்கப்பறம் ஜில் ஜாங் ஜக் என்ற ரியாலிட்டி ஷோவில்
வி. ஜே. கதிரோட சேர்ந்து இந்த ஷோவை தொகுத்து வழங்கினார். ஜீ தமிழில் பூவே பூச்சுடவா என்ற சீரியலில் சுந்தர் என்ற கேரக்டரில் சப்போர்டிங் ஆக்டராக மதன் பாண்டியன் நடித்து வராங்க. பூவே பூச்சூடவா சீரியலில் சுந்தர் என்ற கேரக்டரில் நடித்தால் சிறந்த துணை நடிகராக மதன் பாண்டியன் அவருக்கு 2018 ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகர் என்ற விருது கிடைத்தது. இது தான் இவருடைய முதல் விருது.

இதையடுத்து மதன் அவர்கள் சாட் பிலிம் பண்ணாங்க. இவங்க மொத்தம் மூனு சாட் பிலிம் பண்ணி இருக்காங்க. இவங்க நடித்த முதல் சாட் பிலிம் வந்து சென்னை பேச்சலர்ஸ் டே, இரண்டாவது சாட் பிலிம் பெயர் வந்து காக்கா குருவி கல்யாணம், மூன்றாவது சாட் பிலிம் பெயர் வந்து வருண் வர்சா மொத்தமாக மூனு சாட் பிலிம் மற்றும் இந்த மூன்று சாட்
பிலிம்களில் இம்பார்டன் கேரக்டர் பண்ணி இருக்காங்க.

இவங்க பூவே பூச்சூடவா சீரியலில் சக்தி என்ற கேரக்டரில் நடிக்கும் ரேஷ்மாவை காதலிக்கிறார். ரேஷ்மாவின் பிரண்டு ஆனா சைத்ரா ரெட்டிக்கு ரீசன்டா தான் கல்யாணம் ஆனது. மதனும் ரேஷ்மாவும் காதலிகிறாங்க என்ற விஷயத்தை சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வந்து. இவங்களோட பேன்ஸ் எல்லாருக்கும் ஷாக் ஆனது. ரேஷ்மா ஓட நன்பர்களுக்கும் ஷாக்கிங்கா இருந்தது. இவங்க இரண்டு பேரும் கூடிய சீக்கரமே திருமணம் பண்ண போரங்கனு சொல்லிட்டு வராங்க. இவங்க இரண்டு பேரும் சேர்ந்து அபி டெய்லர் என்ற சீரியலில் நடிக்கிறாங்க. இந்த சீரியலில் தான் அசோக் என்ற கேரக்டரில் மதன் பாண்டியன் அவர்கள் நடித்து வருகிறார். இந்த சீரியல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர் பார்க்கிறோம்.

7 thoughts on “கலர்ஸ் தமிழில் ஹிரோவாக நடிக்கும் அசோக் பற்றி தெரியுமா? வாங்க பாக்கலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube