வெற்றிமாறனுடன் இணையும் சூர்யா அப்போ அடுத்த தேசிய விருது ரெடி!
vetri maaran suriya joins:
வலிமையை தொடர்ந்து வாடிவாசல் படமும் அப்டேட் லிஸ்டில் வந்தது. வாடிவாசல் படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.
கலைப்புலி தாணு அவர்களின் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் சூர்யா நடிக்க இருக்கும் படம் வாடிவாசல். இந்தப் படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டிற்கான படம்
கடந்த வருடம் வாடிவாசல் படத்தின் தகவல் வெளியானது. வெளியானதை தொடந்து ப டத்தை பற்றின எந்தத் தகவலும் கிடைக்காமல் இருந்தது
வெற்றிமாறன் இயக்கிய பல படங்கள் தேசிய விருது பெற்றுள்ளது. தனுஷ் நடிப்பில் கடைசியாக இவர் இயக்கிய அசுரன் சக்கை போடு போட்டது. அதோடு அவரின் படம் சமூகத்திக்கான படமாகத் தான் இருக்கும்.
தற்போது சூரி அவர்களை கதாநாயகனாக வைத்துப் படம் இயக்கிக் கொண்டு இருக்கிறார். இந்தப் படம் முடிந்த பிறகு வாடிவாசல் பக்கம் வருவாரென எதிர் பார்க்க படுகிறது.

இந்தக் படத்தின் கதை 1948 ல் சி.சு செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற நாவலை தழுவி உள்ளது.மேலும் இந்தப் படத்தில் இரட்டை கதா பாத்திரங்கள் உள்ளன தந்தை மற்றும் மகன் என இரு வேடங்களில் சூர்யா நடிக்க உள்ளார்.
இந்தப் படத்தில் ஜல்லிக்கட்டு காட்சிகள் இடம் பெறுவதால் சூர்யா அவர்கள் ஜல்லிகட்டு காளைகளுடன் பயிற்சி பெற்று வருகிறார். ஏனெனில் காட்சிகள் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதர்காகவாம்.
வெற்றிமாறன் அவர்களிடம் வாடிவாசல் பட தகவலினை கேட்டதற்கு. இந்தப் படத்திற்கு அதிக படியான ஆட்கள் தேவையாம் அதாவது குறைந்தது ஐந்நூறு ஆயிரம் பேர் ஒரே இடத்தில இருக்க வேண்டுமாம். அதனால் கொரோன தாக்கம் குறைந்த பிறகும் தடுப்பு மருந்து எவ்வாறு வேலை செய்கிறது என்று பார்த்த பிறகுதான் ஷூட்டிங் தொடங்க போவதாகக் கூறியுள்ளார்.
வாடிவாசல் முழுக்க தமிழர்களின் வரலாற்றினை எடுத்துக் கூறும் என்று தெரியப்படுகிறது. வெற்றிமாறன் சூர்யா முதல் முறையாக இணைகிறார்கள் இது இந்தப் படத்திற்க்கான ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது.
இந்த வருடம் ஜூலை மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது அதோடு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வாடிவாசல் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.