ரோஜா சீரியல் அர்ஜுன் பற்றி நாம் அறியாதவை!
Roja serial arjun life : வித்தியாசமான சின்னத் திரை தொடர்களுக்குப் பெயர் போனவை தான் நம்ம சன் டிவி.
அது போன்று ஒரு வித்தியாசமான கதை களம் கொண்ட ஒரு தொடர் தான் ரோஜா இப்பொது இத்தொடர் சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முதல் மூன்று இடத்திற்குள் வருகிறது.
ரோஜா தொடரில் அர்ஜூனாக வலம் வந்து கொண்டு இருக்கும் சிபு சூரியனை பற்றின பல சுவாரசியமான தகவல்களைக் காணலாம் வாங்க…
அர்ஜுனின் உண்மையான பெயர் சிபு சூரியன் இவர். 1990இல் மார்ச் 26ஆம் தேதியில் கர்நாடகாவில் ஷிமோகா என்ற இடத்தில் பிறந்துள்ளார்.
இவர் பெங்களூரில் உள்ள பெங்களூரு இன்ஸ்டிடியூட் ஒப்பி டெக்னாலஜி (Bangalore Institute of Technology யென்ற கல்லூரியில் என்ஜினீயரிங் முடித்துள்ளார்.
இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பெங்களூரில் தான் முடித்துள்ளார். தற்போது இவர் பெங்களூரில் தான் வசித்துக் கொண்டு இருக்கிறார்.

சின்னத் திரை வாய்ப்புகள் :
இவர் கல்லூரி படிப்பு முடிந்ததும் ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் பணி செய்து கொண்டு இருந்தாராம். அவ்வாறு இருக்கும் பொது சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இவருக்கு விடுமுறை கிடைக்குமாம்.
விடுமுறை நாள்களில் சிபு தன் நண்பர்களுடன் சேர்ந்து வெளியில் செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளார்.
அவ்வாறு ஒரு விடுமுறை நாளில் ஒரு ஹோட்டலுக்கு சென்று இருந்த பொது அருகில் வேறொரு டேபிலில் இருந்தவர் சிபுவை அழைத்து நீங்க பாக்குறது நல்ல இருக்கீங்க ஏன் சினிமாவுல ட்ரை பன்ன கூடாது என்றாராம்.
அதைக் கேட்டவுடன் சிபுவிற்கு சிரிப்பு தாங்க முடியவில்லையாம்.பின்னர் அதைத் தன் நண்பர்களிடம் கூறி சிரித்து உள்ளார். இதைப் பார்த்த அந்த நபர் நான் சொல்லுவது உங்களுக்குப் சிரிப்பு வருகிறதா என்று கேட்டாராம்.
நான் ஒரு எழுத்தாளர் என்று கூறினாராம் பின்னர் தன்னுடைய தொலைபேசி என்னை இவரிடம் கொடுத்து விட்டு இவருடைய அழைப்பு எண்ணையும் வாங்கி கொண்டாராம்.
ஆனால் சிபு இதை எதுவும் நம்ப வில்லையாம் பார்த்தால் அடுத்த நாள் அந்த எழுத்தாளரிடமிருந்து அழைப்பு வந்ததாம். இன்று ஆடிஷன் உள்ளது வந்து பாருங்கள் என்று கூறியுள்ளார்.

இவரும் அங்குச் சென்று பார்த்த போதுதான் அந்த எழுத்தாளர் கூறியது உண்மையெனப் புரிந்ததாம். பின்னர் இவரை நடிக்க சொன்னார்களாம் ஆனால் இவருக்கு நடிக்கும் முன்பு மிகவும் பயம் மற்றும் நடுக்கம் ஏற்பட்டதாம்.
பின்னர் இவரே தன்னை சமாதானப் படுத்தி கொண்டு நடிக்க ஆரம்பித்தாராம். அந்த தொடர் தான் ராதா ரமணா ஆகும்.
ராதா ரமணா :
இத்தொடர் 2017இல் வெளிவந்தது. இத்தொடரின் மூலம் தான் சிபுவிற்கு சின்னத் திரைக்கனா பாதை அமைந்தது.
இத்தொடரில் சிபு ஒரு ஆசிரியராக வலம் வந்து இருந்தார். அதோடு இல்லாமல் இத்தொடரில் இவரின் பொழுது போக்காக புகைப்படம் எடுபவராகவும் நடித்துள்ளார். ஷிவா பூஜேனக்ராஹார (Shiva Poojenagrahara) இயக்கத்தில் (Shwetha R Prasad) ஷுவெத ர் பிரசாத் உடன் இணைத்து நடித்துள்ளார்.
ரோஜா வாய்ப்பு : Roja serial arjun life
சிபு அவர்கள் கன்னட ஷூட்டிங்கில் இருந்த பொது ரோஜா சீரியலின் இயக்குனர் இவரைத் தொரடப்பு கொண்டுள்ளார். ஆனால் இவருக்குத் தமிழ் புரியவில்லையாம் சார் எனக்கு எதுவும் புரியவில்லை இங்கிலீஷில் பேசுங்கள் என்றாராம்.
பின்னர் இயக்குனர் ஆங்கிலத்தில் ரோஜா தொடரினை பற்றிக் கூறிய பொது உடனே இவருக்குப் பிடித்துப் போனதாம். நான் எப்பொழுது அங்கு வர வேண்டும் என்று கேட்டாராம். அதற்கு நாளைக்கே வாங்க என்று இயக்குனர் கூறினாராம். பின்னர் இவர் தமிழ்நாட்டிற்கு வந்து அவரைச் சந்தித்து ரோஜா தொடரில் நடிக ஆரம்பித்தாராம்.
ரோஜா தொடரில் சிபு :
இத்தொடரில் பிரியங்கா நல்காரி (Priyanka Nalkari) ரோஜாவாகவும், சிபு அர்ஜுன்கவும் நடிக்கிறார்கள். இத்தொடரில் ஒரு வக்கீலாக நடிக்கிறார் நம்ம சிபு.
ரோஜாவிற்கும் அர்ஜுனனிருக்கும் ஒப்பந்த முறையில் திருமணம் நடைபெறுகிறது. பின்னர் இருவருக்கும் பிடிக்க ஆரம்பிக்கிறது. அதோடு தற்போது மிகவும் அன்பான கணவனாக சீரியலில் வலம் வருகிறார் நம்ம அர்ஜுன்.
இத்தொடரில் இவரருக்கு வடிவுக்கரசி அம்மாவை தான் மிகவும் பிடிக்குமாம். ஏனெனில் அவரின் நடிப்பு உண்மையாகவும் சுவாரசியமாக இருக்குமாம்.

எத்தனை பெரிய வசங்களையும் சாதாரணமாக நடித்து விடுவாராம். இத்தொடரில் நம்ம சிபுவிற்கு பல சண்டை காட்சி உள்ளதாம்.
அது போன்று ஒரு சண்டை காட்சிகளின் பொது இவருக்குத் தோள் மற்றும் கைகளில் தசை பிடிப்பு ஏற்பட்டுவிட்டதாம். அது இவருக்கு மிகவும் வலி ஏற்படுத்தியதாம்.
தமிழ்நாட்டு மக்களின் மனதில் :
சிபுவிற்கு தமிழ்நாட்டில் நடந்த அனுபவங்கள். இவர் ஷூட்டிங் முடிந்து சென்று கொண்டு இருக்கும் பொது இவருடைய செருப்பு(SHOES) கிழிந்துவிட்டதாம்.
அப்போது இவர் ஒரு செருப்பு தெய்க்கும் தொழிலாளிடம் சென்று தன்னுடைய காலணியை சரிசெய்து தருமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் முண்ணூறு ரூபாய் ஆகும் என்று கூறியுள்ளார்.
ஆனால் சிபுவின் கையில்100 ரூபாய் தான் இருந்து உள்ளது. அப்போது இவர் அண்ணா என்னிடம் 100 ரூபாய்தான் உள்ளது என்றாராம். ஆனால் அந்த நபர் இவரை நிமிர்த்து கூடப் பார்க்காமல் 300 ரூபாய்க்கு ஒரு ரூபாய் கூடக் குறைக்க முடியாது என்றாராம்.இவரும் சரி கடைசியாக எவ்வளவு ரூபாய் வேண்டும் என்றாராம்.
அப்போது அந்தத் தொழிலாளி இவரை நிமிர்ந்து பார்த்துள்ளார்.உடனே அவர் அர்ஜுன் சார் எப்படி இருக்கீங்க என்னுடைய பொண்ணு உங்களுடைய மிகப் பெரிய ரசிகை என்று கூறியுள்ளார்.
பின்னர் தன் மகள் ஏழாவது படிப்பதாவும்.அவள் தங்களுடைய ரசிகை எனவும் உங்களுக்காக தான் ரோஜா தொடரினை பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
தன்னுடைய மகளுக்கு தொலைபேசியில் அழைத்து இவ்வாறு கூறியுள்ளார்.சிபுவும் தன்னுடைய குட்டி ரசிகையிடம் பேசினாராம்.
பின்னர் இவருடைய காலனியை சரி செய்து கொடுத்தாராம். இவர் அண்ணா என்னிடம் தற்போது 100 ரூபாய் தான் உள்ளது. நான் அடுத்த முறை வரும் பொது மீதி பணத்திணை கொடுத்து விடுகிறேன் என்றாராம்.

உடனே அவர் வேண்டாம் அர்ஜுன் சார் நீங்க பணம் கொடுத்தால் நான் உங்க சீரியலை இனிமேல் பார்க்கமாட்டேன் என்றாராம்.
அப்பொழுதான் சிப்புவிற்கு தனக்கு தமிழ்நாட்டில் எவ்வளவு அன்பு கிடைத்தது என்று புரிந்ததாம்.
தற்போது இவருடைய உண்மையான பெயரை தமிழ்நாட்டில் யாரும் அழைப்பதில்லையாம் அனைவரும் அர்ஜுன் சார் என்றே அழைகின்றனராம்.
தனிப்பட்ட விருப்பங்கள் :
இவரனின் வருங்கால ஆசை என்னவென்றால் இவரின் உழைப்பின் மூலம் சம்பாரித்த பணத்தை கொண்டு ஒரு சிறிய ஆசிரமம் கட்ட வேண்டுமாம். அதில் ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே இவரின் வருங்கால ஆசையாக உள்ளது.
படிக்கும் பொது அனைத்து விளையாட்டுகளிலும் முதல் இடம் பிடித்து விடுவாராம் ஆனால் அர்ஜுன் சார்க்கு கிரிக்கெட் வராதாம் மற்றும் நயன்தாரா என்றால் மிகவும் பிடிக்குமாம்.
இவர் நடிப்பது இவருடைய குடும்பத்திற்கு பிடிக்க வில்லையாம் ஏனெனில் இவர் தந்தை என்ஜினீயரிங் முடித்து விட்டு அதற்கு ஏற்ற பணி செய்யாமல் இவ்வாறு கேமரா ஷூட்டிங் என்று இருக்கிறாய் என்று கேப்பாராம்.
ஆனாலும் தற்போது ரோஜா சீரியலில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். அது கண்டிப்பாக சிபு குடும்பத்தை மகிழ்ச்சி ஆக்கிருக்கும் மற்றும் நம்பிக்கையையும் தந்திருக்கும்.
தற்போது இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கூடிய விரைவில் வெள்ளித் திரையில் மின்னுவர் என எதிர்பார்க்க படுகிறது.