ராஜா ராணி சீரியல் ஹீரோ சித்து பற்றி தெரியுமா?
raja rani 2 sidhu: சின்னத்திரையில் தற்போது ஒளிபரப்பப்படும் தொடர்களின் தலைப்புகளுக்கு கென்றே தனிப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜா ராணி முதல் பகுதிக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருந்தனர்.
இத்தொடர் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த தொடருக்கும் தொடரின் கதாபாத்திரங்களுக்கு கென்று தனிப்பட்ட ரசிகர்கள் இருந்தனர்.
தற்பொழுது விஜய் டிவி ராஜா ராணி தொடரின் இரண்டாம் பகுதியை ஒளிபரப்ப தொடங்கியுள்ளது. இத்தொடரில் கதாநாயகனாக நடிக்கும் சரவணன் என்கிற சித்துவை பற்றிய தகவல்களை இங்குக் காணலாம்.

தனிப்பட்ட தகவல்கள் :
இவரின் உண்மையான பெயர் சித்தூரன் ஆகும். இவரைச் சித்து என்றால் தான் எல்லாருக்கும் தெரியுமாம். இவர் திருவண்ணாமலையில் 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி பிறந்துள்ளார்.
இவர் பள்ளி படிப்பை திருவண்ணாமலையில் முடித்துவிட்டு கல்லூரிப் படிப்பை சென்னையில் உள்ள லயலோ கல்லூரியில் படித்து இருக்கிறார். அங்கு இவர் (BSC VISUAL COMMUNICATION) பட்டம் பெற்று உள்ளார்.
திரை வாய்ப்புகள்:
இவருக்கு நடனம் மிகவும் பிடிக்குமாம். சித்துவின் திறமையை இவரின் நண்பர்கள் தான் முதலில் வெளிக்கொண்டு வந்துள்ளனர்.
கல்லூரியில் படித்து கொண்டு இருக்கும் பொது சித்துவிடம் கேக்காமலே சித்துவின் பெயரை டான்ஸ் ஷோவ்வில் சேர்த்து உள்ளனர். இதனால் இவர் டான்ஸ் ஷோவ்வில் ஆடியுள்ளார்.
கல்லூரியில் பல டான்ஸ் ஷோக்களில் கலந்து கொண்டுள்ளார். அதன் மூலம் விஜய் டிவியில் உங்களில் யார் பிரபுதேவா ஷோவ்வில் (DREAM TEAM) என்ற நடன குழுவின் இயக்குனராக இருந்துள்ளார்.
இதன் மூலம் பல ஷார்ட் ஃபிலிம்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது எனலாம். பிரிவொன்று ஏதுமில்லை, ஒரு கதை பாடட்டுமா போன்ற ஷார்ட் பிலிமில் நடித்துள்ளார். ஆனால் அதன் மூலம் இவருக்கு எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லையாம்.

கல்லூரியில் படிக்கும் பொது நடனம் மட்டுமல்லாது வாலிபால் விளையாடுவதிலும் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார். இதன் மூலமே சித்துவிற்கு வெள்ளித்திரை வாய்ப்பு கிடைத்தது எனலாம்.
சித்து வாலிபால் விளையாட்டில் பயங்கர ஈடுபாட்டுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது சித்துவின் கல்லூரி நண்பர் ஒருவர் நடிகர் நகுல் நடிக்கும் படத்தில் ஒரு வாய்ப்புள்ளது நடிக்கிறியா என்று கேட்டுள்ளார்.
அதற்கு சித்துவும் சம்மதம் தெரிவித்துள்ளார். சித்து நடித்த முதல் படம் அது தான் வல்லினம் என்ற படத்தில் மூலம் வெள்ளித்திரைகாண திரை திறக்கப்பட்டது.
அந்த படத்தில் வாலிபால் விளையாடும் கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்குப் பிறகு திரைத்துறையில் அவ்வளவாக எந்த வாய்ப்பும் கிடைக்காமல் இருந்துள்ளது. அதன் பின்னர் பல ஆடிஷனலில் கலந்து கொண்டு இருந்துள்ளார்.
இவர் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த பொது சமூக வலை தளங்களில் டிக் டாக் செய்து வெளியிட்டு வந்து துள்ளார். இதனால் டிக் டாக் மூலம் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார் மேலும் திருமணம் தொடர் வாய்ப்பும் இவரைத் தேடி வந்துள்ளது எனலாம்.
திருமணம் :
2018 ஆம் ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் வெளியான திருமணம் என்ற தொடரில் கோபிகாந்த் இயக்கத்தில் சந்தோஷ் என்ற பெயரில் நடித்திருந்தார்.

இத்தொடரின் மூலம் இவருக்கு பலதரப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர் எனலாம். மேலும் இத்தொடரில் இவருடைய நடிப்பு ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. இத்தொடரில் கதாநாயகியாக ஸ்ரேயாஅஞ்சன் நடித்து இருந்தார்.
மேலும் இருவரின் ஜோடிகள் மக்களால் பெரிதும் ரசிக்க பட்டது எனலாம். இத்தொடர் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருந்து. பின்னர் சில காரணங்களால் இத்தொடர் நிறுத்த பட்டது.
திருமணத்தால் வந்த காதல் :
இத்தொடரில் கதாநாயகியாக நடித்த ஸ்ரேயாஅஞ்சனிற்கும் சித்துவிற்கும் காதல் மலர்ந்தது.
மேலும் இவர்கள் இருவரும் சேர்ந்து பல YOUTUBE சேனலுக்கு இன்டெர்வியூ அளித்து இருந்தனர். இதனால் இருவருக்கும் இடையில் இருந்த காதல் மக்களுக்கு தெரிய வந்தது.
இவர்களின் காதல் பலராலும் வரவேற்க பட்டது எனலாம் தற்போது இருவரின் குடும்பத்தில் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த வருடம் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர் பார்க்க படுகிறது.
ராஜா ராணி:
ராஜா ராணி 1 விஜய் டிவியில் மிகவும் பிரபலம் அடைந்த தொடர் எனலாம். இந்த தொடரின் முதல் பகுதியில் நடித்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா இருவரின் ஜோடிகள் மக்களால் பெரிதும் ரசிக்க பட்டது எனலாம். பிறகு இருவரும் நிஜ ஜோடிகளாகினர்.
தற்போது பிரவீன் அவர்களின் இயக்கத்தில் இத்தொடர் இரண்டாம் பகுதி ஒளிபரப்பப்பட்டுப் பெரிதும் வெற்றி அடைந்துள்ளது.

இத்தொடரில் சித்து சரவணன் என்ற பெயரில் மிகவும் அமைதியான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
மனைவிக்கு மிகவும் உறுதுணையாக கணவனாக நடித்துக்கொண்டிருக்கிறார் மிகவும் அமைதியாகவும் தன் மனைவியின் முன்னேற்றத்திற்கு துணையாக இருக்கும் கணவராக நடித்து கொண்டு இருக்கிறார்.
மேலும் சித்துவிற்கு ஜோடியாக ராஜாராணி முதல் பகுதியில் கதாநாயகியாக நடித்த ஆல்யா மானசா தான் இந்த தொடரிலும் கதா நாயகியாக நடிக்கிறார். தற்பொழுது இவர்கள் இருவரின் ஜோடியையும் மக்கள் ஏற்று வருகின்றனர்.
கதை சுருக்கம்:
சித்து இத்தொடரில் சரவணன் என்ற பெயரில் நடிக்கிறார். இதில் ஒரு இனிப்புக் கடை நடத்தி வரும் சாதாரண கிராமத்து மனிதனாக நடிக்கிறார். அம்மாவிற்கு மரியாதையை தரும் மகனாகவும் வருகிறார்.
ஆல்யா சந்தியா என்ற பெயரில் நடித்துக் கொண்டு இருக்கிறார். சந்தியாவிற்கு பெரிய போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவு சிறு வயது முதலே இருந்துள்ளது.
சந்தியா அதற்காக தயாராகி கொண்டு இருக்கும்பொழுது சந்தியாவின் பெற்றோர் ஒரு விபத்தில் இறந்து விடுகின்றனர். இதனால் சந்தியாவின் அண்ணன் சந்தியாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்.
பின்னர் கிராமத்தில் வசிக்கும் சரவணனுக்கு சந்தியாவை திருமணம் செய்து வைக்கிறார்கள் சந்தியாவின் அண்ணன் சந்தியாவை பற்றின எந்த தகவல்களும் சொல்லாமல் திருமணம் செய்துகொடுக்கிறார்.
இதனால் சந்தியா தன் மாமியார் வீட்டில் பெரிதும் சங்கடப்படுகிறார். ஆனால் சரவணனன் சந்தியாவிற்கு உறுதுணையா இருக்கிறார்.
ராஜா ராணி இரண்டாம் பகுதியின் கதை Diya Aur Baati Hum என்ற ஹிந்தி சீரியலின் கதையாகும் மேலும் இந்தத்தொடர் வடநாடுகளில் நல்ல வரவேற்பினை பெற்ற தொடராகும்.
இத்தொடர் 2012ல் விஜய் டிவியில் என் கணவன் என் தோழன் என்ற பெயரில் தமிழ் டப்பிங் செய்து ஒளிபரப்பப்பட்டது.
மேலும் நம்ம சித்து பிரவீன் அவர்களின் இயக்கத்தில் ஒளிபரப்பான பல தொடர்களின் ஆடிஷனிற்கு சென்று உள்ளார். ஆனால் எந்த ஆடிஷனிலும் தேர்வாகவில்லையாம்.

மேலும் ராஜா ராணி முதல் பகுதியில் நடிக்கவும் ஆடிசன் சென்று உள்ளார் ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு இவர் சரியாக இருக்கமாட்டாரெனப் பிரவீன் இவரைத் தேர்வு செய்ய வில்லையாம்.
ஆனால் தற்போது ராஜா ராணி 2வில் நடித்துக் கொண்டு இருப்பதை எண்ணி மிகவும் சந்தோச படுகிறார் சித்து.
சித்து வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து இருந்துள்ளார். குற்றம் கடிதல், மதுர வீரன், தோழா, உனக்கு என்ன வேணும் சொல்லு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அகோரி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஆனால் அந்தப் படம் அவ்வளவாக மக்களிடம் சென்று அடையவில்லை. திருமணம் தொடர்தான் இவருக்குப் பெரிய திருப்புமுனையாக இருந்தது இவருடைய வாழ்வில் சின்னத்திரையின் மூலமே மக்களிடத்தில் அதிகளவில் சென்றுள்ளார்.
பார்ப்பதற்கு ஒரு சாயலில் விஜய்சேதுபதி போல இருக்கிறார் கூடிய விரைவில் விஜய் சேதுபதி போன்று வெள்ளி திரையில் மின்னுவர் என எதிர் பார்க்க படுகிறது.
கொள்ளிக்கட்டை இருந்தால் தான் நடப்பேன் என்றால் ஒரு அடியும் நகர முடியாது நிலா வெளிச்சத்தில் கூட நடக்கலாம் என்றால் எண்ணிய இடத்தை சீக்கிரமாக அடையாளம் என்கிறது சித்துவின் திரை வாழ்கை.