Cinema

நெல்சன் திலீப்குமார் பற்றி பலரும் அறியாதவை!

Nelson Dilipkumar Biography:

தமிழ்நாட்டு மக்களால் தற்போது பெரிதும் எதிர்பார்க்கப்படும் இரண்டு படங்கள் என்றால் சிவகார்த்திகேயன் அவர்கள் நடிக்கும் டாக்டர் மற்றும் தளபதி 65 ஆகும்.

இந்த இரு படங்களும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு டாக்டர் படத்தில் உள்ள செல்லமா பாடல் படம் வெளியாவதிற்கு முன்னரே செம்ம ஹிட் ஆகி உள்ளது.

தற்போது இந்த இரு திரைப்படத்தின் இயக்குனரான நெல்சன் திலீப்குமார் எவ்வாறு இயக்குனர் ஆனார் என்பதும் அவருடைய திரை வாழ்க்கை பற்றிய தகவல்களை இங்குக் காணலாம்….

Nelson Dilipkumar Biography
Nelson Dilipkumar Biography

நெல்சன் திலீப்குமார் இயக்குனராக தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர். இவர் திரைக்கதை எழுத்தாளராக பல படங்களில் பணியாற்றி உள்ளார்.

தனிப்பட்ட தகவல்கள் :

இவருடைய உண்மையான பெயர் நெல்சன் திலீப்குமார் ஆகும் ( Nelson Dilipkumar Biography ). வேலூர் மாவட்டத்தில் 1984ஆம் வருடம் ஜூன் மாதம் 21ஆம் தேதி பிறந்துள்ளார்.

மேலும் இவர் தனது சொந்த ஊரில் பள்ளி கல்வியினை முடித்துள்ளார். பின்பு சென்னையில் உள்ள நியூ கல்லூரி Visual Communication இளங்கலை பட்டம் பெற்று உள்ளார்.

நெல்சன் அவர்களுக்கு சிறு வயதில் இருந்தே இயக்குனராக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.

விஜய் டிவி :

நெல்சன் அவர்கள் இயக்குனர் பணியினை தொடங்கியது விஜய் டிவியில் தான் ஆம் நெல்சன் திலீப்குமார்.

தனது இளங்கலை பட்டத்திற்கு பின்னர் திரைக்கதை எழுத்தாளராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ மற்றும் சில தொடர்களுக்கு பணியாற்றியுள்ளார். கனா காணும் காலங்கள் போன்ற சூப்பர் ஹிட் சீரியலை இயக்கி உள்ளார்.

2005-ஆம் ஆண்டு அழகி என்ற நிகழ்ச்சியில் துணை இயக்குனராக பணியாற்றி வந்துள்ள நெல்சன் திலீப்குமார் அடுத்தடுத்து ஜோடி நம்பர் 1, ஏர்டெல் சூப்பர் சிங்கர், பிக்பாஸ் தமிழ் எனப் பல நிகழ்ச்சிகளில் இயக்குனராகவும், தயாரிப்பு குழுவில் இருந்தும் இயக்கி வந்துள்ளார்.

பல வருடங்கள் விஜய் டிவி யில் தன்னுடைய உழைப்பை காட்டினர். மேலும் இங்குத் தான் சிவகார்திகேயன் அவர்களின் நட்பும் இவருக்கு கிடைத்துள்ளது.

director nelson in vijay tv

பல இசை வெளியிட்டு விழாக்களுக்கும் விருது வழங்கும் விழாக்களும் இயக்குனராக இருந்துள்ளார்.

குறிப்பாக ஐ மற்றும் 2.0 படத்தில் இசை வெளியிட்டு விழாக்களுக்கு இயக்குனராக இருந்துள்ளார். பின்னர் நெல்சன் அவர்க்கு வெள்ளி திரையில் கால் பதிக்க ஆசை இருந்துள்ளது.

முதல் வெள்ளித்திரை அனுபவம்:

2010ஆம் ஆண்டு நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவான “வேட்டை மன்னன்” திரைப்படத்தின் இயக்குனர் ஆனார் நெல்சன். இத்திரைப்படமானது இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக வேலை செய்த முதல் திரைப்படம்.

வேட்டை மன்னன் திரைப்படத்தில் சிம்பு, ஹன்ஷிகா என்று பல தமிழ்சினிமா முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீஸரானது வெளியாக தமிழ்சினிமாவில் பெரிய அளவில் பிரபலம் அடைந்தது. சிலம்பரசன் ரசிகர்களால் கொண்டாடபட்ட இந்த படம் ஒருசில காராணாமால் கைவிடப்பட்டது.

தான் இயக்கிய முதல் திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்ட காரணத்தால் மீண்டும் இவர் படவாய்ப்புகளை இழந்து தனது திரைப்பயணத்தை தொடக்கத்தில் இருந்து துவங்கம் நிலைக்கு தள்ளப்பட்டார்.

மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் இணைந்து சில நிகழ்ச்சிகளை இயக்கி வந்துள்ளார் நெல்சன்.

திரை உலக நண்பர்கள் :

நெல்சன் அவர்களும் விக்னேஷ் சிவன் இருவரும் ஆரம்ப காலங்களிலே நண்பர்களாக இருந்துள்ளனர். பின்னர் சிவகார்த்திகேயன் மூலம் அனிருத் நண்பராகி உள்ளார் மேலும் சிவா கார்த்திகேயன் அருண் ராஜா அவர்களை நெல்சன் அவர்க்கு அறிமுகப்படுத்தி உள்ளார்.

பின்னர் அருண் ராஜா நெல்சன் அவர்களிடம் அசிஸ்டன்ட் டைரக்டர் பணிசெய்து கொண்டுருந்துள்ளார். பின்னர் அருண் ராஜா அவர்களும் வெள்ளி திரையில் அடி எடுத்து வைக்க ஆரம்பித்தார்.

தான் இயக்கிய முதல் படமான காண படத்தில் நெல்சன் அவர்களின் மீது உள்ள மரியாதையால் தன் படத்தில் ஹீரோவிற்கு நெல்சன் திலீப்குமார் என்று பெயர் வைத்து இருந்தார். மேலும் அந்த படத்தில் ஹீரோவாக நடித்தவர் நம் சிவகார்த்திகேயன்.

கோலமாவு கோகிலா:

வேட்டை மன்னன் படம் நிறுத்தத்திற்கு பிறகு இசையமைப்பாளர் அனிரூத் இவரை ஒரு கதை ரெடி பண்ணுங்க சார் என்று சொன்னாராம் இவரும் உடனடியாக கதையை ரெடி செய்து அனிரூத் அவர்களிடம் கொடுத்தாராம்.

super star rajinikanth with director nelson

அனிருத் நெல்சன் எழுதிய கதைய தமிழில் பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனம் லைக்கா புரோடக்சன் நிறுவனத்தின் சில முக்கிய புள்ளிகளுடன் கலந்துரையாற்றி இவருக்கு இந்த திரைப்பட வாய்ப்பினை பெற்று தந்துள்ளார்.


மேலும் லைக்கா நிறுவனத்திற்கு நெல்சன் கதை மிகவும் பிடித்து போகவே உடனடியாக சம்மதம் தெரிவித்து உள்ளனர்.

லைக்கா தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் வந்த கோலமாவு கோகிலா அனிருத் இசைஅமைப்பில் நடிகை நயன்தாரா மற்றும் யோகி பாபு அவர்களின் நடிப்பில் 2018ல் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்ததது.

நெல்சன் திரைவாழ்வில் இவருக்கு முதல் திரைப்படமாக அமைந்துள்ளது.

டாக்டர் :

இந்த வருடம் அணைத்து மக்களின் வாயில் முனுமுனுக்கபட்ட பாடல் என்றால் அது சிவகார்த்திகேயன் எழுதி அனிருத் இசையில் பாடப்பட்ட பாடலான செல்லமா பாடல் தான் ஆம் சிறுசுகள் முதல் இளசுகள் வரை அனைவரையும் ஈர்த்த இந்த பாடல் டாக்டர் படத்தில் உள்ளது.

இந்த படம் நெல்சன் அவர்களின் இயக்கத்தில் சிவகார்திகேயன் மற்றும் அவர்களின் நடிப்பில் இந்த வருடம் வெளிவர உள்ளது.

படம் வெளியிட்டிற்க்கு முன்னரே நெல்சன் மற்றும் சிவகார்த்திகேயன் அனிருத் மூவரும் சேர்ந்து படத்திற்கான பாடல்களை தயார் செய்து கொண்டிருக்கும் வீடியோவை வெளியிட்டனர்.

ஆனால் youtubeல் அது பல மில்லியன் வியூஸ் தாண்டிச் சென்றுவிட்டது. கூடிய விரைவில் மக்கள் நெல்சனை சிறந்த இயக்குனராக மட்டுமல்லாமல் சிறந்த நடிகராக வரவும் வாய்ப்புள்ளது என்று கமெண்டில் புகழ்ந்து தள்ளி விட்டனர்.

தளபதி 65:

மாஸ்டருக்கு பின் தளபதி சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதாக செய்தி வெளியானது.

தர்பார் பட தோல்வியால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தளபதி 65 படத்திற்கு முருக தாஸ் அவர்களின் சம்பளத்தை குறைக்க சொல்லியதால் அப்படத்தில் இருந்து
ஏ ஆர் முருகதாஸ் விலகி உள்ளார்.

இதற்கிடையில் நெல்சன் அவர்கள் தளபதி விஜய் அவர்களிடம் தன்னுடைய கதையை சொல்லவே நகைச்சுவை கொண்ட கதை விஜய்க்கு பிடித்து விட்டது.

விஜய் படத்தின் இயக்குனர் நெல்சன் அவர்கள் தான் என்று சன் பிக்ச்சர்ஸ் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது. தளபதி 65ல் ஹீரோயின் தேர்வு நடை பெற்று விட்டது தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகி பூஜா ஹெக்டே தான்.

Nelson Dilipkumar Biography

இசைஅமைப்பாளர் அனிரூத் இசையில் விஜய் மற்றும் பூஜா அவர்களின் நடிப்பில் அடுத்த வருடம் பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என எதிர் பார்க்க படுகிறது.

தமிழ் சினிமாவின் முக்கியமான இளம் இயக்குனர் பட்டத்தை விகடன் இவருக்கு கொடுத்தது.

பின்பு முன்னணி பத்திரிக்கை நிறுவனம் தி டைம்ஸ் ஆஃப் இந்திய சிறந்த இளம் இயக்குனருக்கான விருதினை தந்தது.

இந்த வருடம் நெல்சன் காட்டில் மழை தான் என்று மற்ற இயக்குனர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் இதே போலப் பல முன்னணி நாயகர்களுடன் இணைந்து வெற்றி படம் கொடுப்பாரென எதிர்ப்பார்க்க படுகிறது.

மனிதன் வாழ்வில் வெற்றி என்னும் வீடு கட்ட அவனுடன் இருப்பவர்களும் உதவுவார்கள்.

ஆனால் அஸ்திவாரம் என்னும் லட்சியமும் உழைப்பு என்னும் செங்கல்லும் பலமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தோல்வி என்னும் பூகம்பம் வந்தாலும் ஒன்றும் ஆகாது.

6 thoughts on “நெல்சன் திலீப்குமார் பற்றி பலரும் அறியாதவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube