Serial

பாரதி கண்ணம்மா சௌந்தர்யா தேவி பற்றி தெரியுமா?

பாரதி கண்ணம்மா சௌந்தர்யா தேவி: விஜய் டிவி ஒளிபரப்பு செய்யும் அனைத்து சீரியல்களும் வித்தியாசமான கதைகளை கொண்டுள்ளது. உலக மக்கள் அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்கிறது.

அப்படிபட்ட சீரியல்களிலும் மிகவும் மக்களிடையே வரவேற்பு பெற்ற சீரியலில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. மிகவும் விறுவிறுப்பாகவும் மக்களிடையே ஆர்வத்தையும் உண்டாக்கும் வகையில் அமைந்துள்ளது.

கண்ணம்மாவின் மாமியாராக நடிக்கும் சௌந்தர்யா தேவி பற்றி பின்வருமாறு காண்போம். அந்த காலத்தில் கல்யாணம் செய்து கொடுக்கும் பெற்றோருக்கும் கல்யாணம் செய்து கொண்டு போகும் மருமகளுக்கும் ஒரே கவலை புகுந்த வீட்டில் மாமியார் கொடுமைகள் தான்.

பாரதி கண்ணம்மா சௌந்தர்யா தேவி real age bio family

தற்போதுள்ள ஒருசில மாமியார்கள் என்னதான் தோழிகள் போல அம்மாவை போல நடந்துகொண்டாலும் அந்த மருமகள்களும் மாமியாரும் பொறாமை படுவது போல் இருக்கும் மாமியார் மருமகள் தான் சௌந்தர்யா லட்சுமியும் கண்ணம்மாவும். 

தன் மகனான பாரதியே கண்ணமம்மா மீது சந்தேக பட்டு வெளியே அனுப்பினாலும் தன் மருமகள் நெருப்பு என அவள் பக்கம் நின்றவள் தான் சௌந்தர்யா ( பாரதி கண்ணம்மா சௌந்தர்யா தேவி ).

அப்படி பட்ட கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே வரவேற்பினை பெற்றவர் சௌந்தர்யா. கதைச்சுருக்கம்:விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் முதன் முதலில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி இரவு 8.30 க்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பாரதி கண்ணம்மா சீரியலில் சௌதர்யா தேவியின் மகன்கள் பாரதி மற்றும் அகிலன். சௌந்தர்யாவிற்கு கருப்பானவர்களை பிடிக்காது.

பாரதி ஒரு மருத்துவர். பாரதியை கல்லலூரி படிக்கும்போதே விரும்பியவள் தான் வில்லி வெண்பா.கண்ணம்மா மிகவும் அழகான அறிவான தைரியம் மிக்கவள்.

ஆனால் கருப்பு நிறம் கொண்டவள். பாரதி கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துகொள்வான் . சௌந்தர்யா கண்ணம்மாவை புரிந்துகொள்ளாமல் அவளை துன்புறுத்தினாள்.

பிறகு கண்ணம்மாவின் நற்குணங்களை புரிந்துகொண்ட சௌதர்யா அவளை மருமகளாக ஏற்றுக்கொண்டாள்.

இத்தொடரில் வில்லியாக நடிக்கும் வெண்பா பாரதியையும் கண்ணம்மாவையும் பிரித்து வெண்பா பாரதியுடன் சேர்ந்து வாழ்வாளா என்பதுதான் இக்கதையின் முடிவு.

பெயர் மற்றும் பிறப்பு:

சௌந்தர்யா லக்ஷ்மியின் உண்மையான பெயர் ரூபாஸ்ரீ.

இவங்க 1970 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம்  தேதி பிறந்தாங்க. அவங்க பிறந்த இடம் சென்னை . ரூபாஸ்ரீ அவிங்களுக்கு 4 சகோதரர்கள் . இவங்க 13 வயதில்லையே தன்னோட கரியர்ரா தொடங்கிட்டாங்க.

அவங்க கணவர் பெயர் தினேஷ் . இப்போ சென்னைல தான் இருக்காங்க . ரூபாஸ்ரீ 1992 ஆம் ஆண்டு கள்ளனும் போலீஸும் என்னும் மலையாளம் படத்தில் அறிமுகம் ஆனாங்க.

tamil serial actress rupa sree with sivaangi

சின்னத்திரை உலகம்: முதன் முதலில் தமிழ் சீரியல்ல தான் நடிச்சிருக்காங்க. சன் டிவில ஒளிபரப்பான காதல் பகடை என்னும் சீரியலில் நடித்து ரொம்ப பிரபலம் ஆனாங்க.

அதை தொடர்ந்து அம்பிகை, அகல்யா, மைடியர் பூதம், வாணி ராணி, தெய்வம் தந்த வீடு, சீதா கல்யாணம், உதிரி பூக்கள் என பல தொடர்கள்ல நடிச்சிருக்காங்க.

வெள்ளித்திரையில் பதித்த அடையாளம் :

ரூபாஸ்ரீ தமிழ்ல மட்டுமில்லாமல் கன்னடம் , தெலுங்கு,  மலையாளம் என பல மொழிகளிலும் படம் நடிச்சிருக்காங்க.

எங்க வீடு வேலன் , இதயா நாயகன் , பொண்டாட்டியே தெய்வம் , டூயட் , எல்லாமே என் ராசா தான் , அரபிக்கடலோரம் , உதயம் , எட்டுப்பட்டி ராசா என பல படங்களில் நடிகையாகவும் நடிச்சிருக்காங்க.

பின்பு துணை கதாப்பாத்திரமாகவும் நிறைய படங்களில் நடிச்சிருக்காங்க. 

திருமணத்திற்கு பிறகு 2000 ஆம் ஆண்டு கரியர்ர நிறுத்திட்டாங்க. பிறகு 2004 ஆம் ஆண்டு சீதா கல்யாணம் சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சாங்க.

இவங்க பல வெற்றியை சந்திச்சிருந்தாலும் தோல்விகளை படிக்கல்லாக கொண்டுதான் முன்னேறி போயிருக்காங்க.

ஒரு பெண்ணா நின்னு சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் பாதம் பதிச்சிருக்காங்கன்ன எவ்வளவு துன்பத்தையும் சோதனைகளையும் கடந்து வந்திருக்கணும்.

பாரதி கண்ணம்மா சௌந்தர்யா தேவி

பல மக்களிடத்தில் அன்பை சம்பாதிச்சிருக்கான்க.இப்படி ஒவ்வொரு பெண்ணும் தன்னோட துன்பங்களையும் சோதனைகளையும் கடந்து வந்து சாதனைகளை செய்ய இவங்க ஒரு வழி கட்டியாக இருப்பாங்க.

கதையின் கருத்து: கருப்பாக இருப்பவர்கள் அழகு இல்லை என்பதில்லை அவர்கள் வண்ணம் பூசாத ஓவியங்கள். அழகு அகத்தில் உள்ளது.

ஒருவருக்கு உதவ முன்வருவது மனமே தவிர முகம் இல்லை. நிறத்தை வைத்து ஒருவரின் மனதை துன்புறுத்தக் கூடாது. கரு மேகத்தைக் கண்டுதான் மயில் தன் தோகையை விரித்து ஆடுகிறது.

அழகான இயற்கைகளை ரசிப்பது கரு விழிகளால் தான். எனவே நிறத்தில் வேறுபாடு பார்க்காமல் அனைவரும் ஒன்று என வாழவேண்டும் என்பதே இத்தொடரின் கருத்து ஆகும்.

5 thoughts on “பாரதி கண்ணம்மா சௌந்தர்யா தேவி பற்றி தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube