மௌன ராகம் 2 சக்தி – ரவீனா பற்றி நமக்கு தெரியாதவை!
Mouna ragam 2 raveena: விஜய் டிவி பல தரப்பட்ட வித்தியாசமான தொடர்களை ஒளிபரப்பிக் கொண்டு இருக்கிறது.
அந்த வரிசையில் தந்தை மகளுக்கான பாச போராட்டத்தை கதை கலமாக கொண்ட ஒரு தொடர் தான் மௌன ராகம்….
அதோடு இந்த தொடர் இரண்டு சீசன் வரை வந்துள்ளது. அதற்கு மௌன ராகம் தொடர் ரசிகர்கள் தான் காரணம்.
மௌன ராகம் தொடர் தந்தை மகளுக்கானது மட்டுமின்றி இசைக்குமானது அதனால் தான் இந்த தொடருக்கு பல தர பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரம் என்று பார்த்தால் அது சக்தியும் ஸ்ருதியும் தான் மௌன ராகம் முதல் தொடரில் சக்தியாக நடித்த கிருத்திகாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டபட்டது.

மேலும் மௌனராகம் இரண்டாம் தொடரில் சக்தியின் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என எதிர் பெரிதும் பார்க்கபட்டது.
தற்போது சீசன்2 தொடங்கி உள்ள நிலையில் இப்பொது சக்தியாக நடித்து வரும் ரவினா பற்றின சில தகவல்களை இங்குக் காணலாம்.
தனிப்பட்ட தகவல்கள் :
இவருடைய உண்மையான பெயர் ரவினா தாஹா. இவர் 2002ல் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி சென்னையில் பிறந்துள்ளார். இவர் சென்னையில் பிறந்து இருந்தாலும் இவருடைய பூர்வீகம் கேரளாவை சேர்ந்தது. இவருடைய அப்பா பெயர் ஜெயராஜ் அம்மா பெயர் லதா மேலும் இவருக்கு ராகுல் பிரகாஷ் என்ற அண்ணன் ஒருவர் உள்ளார்.
சினிமா ஆசை :
நம்ம ரவினாவிற்கு சிறு வயது முதலே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது அதைத் தன் அம்மாவிடம் அடிக்கடி கூறியுள்ளார்.
ரவினாவின் சினிமா ஆர்வத்தை புரிந்து கொண்ட அவருடைய அம்மா இவரை ஆடிஷனுக்கு அழைத்துச் சென்று உள்ளார். பின்னர் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இவருக்கு 6 வயது இருக்கும் பொது சன் டிவி யில் ஒளிபரப்பான தங்கம் தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ளார்.

இதன் மூலம் இவர் பல சின்னத் திரை தொடர்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. வசந்தம், பவானி, சாந்தி நிலையம், வள்ளி, பைரவி, நாயன் மார்கள், சந்திர லேகா, ராமானுஜம் போன்ற வெற்றி தொடர்களில் நடித்து வந்துள்ளார்.
வெள்ளித்திரை:
நம்ம ரவினா விஜய் அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆம் ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
படத்தில் ஒரு காட்சியில் வெடி குண்டால் ஒரு இடம் வெடித்து தீப்பற்றி எரியும். அந்த இடத்தில் மேலே இருந்து ஒருகுழந்தை விழும். அந்த குழந்தையை தளபதி விஜய் அவர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்ப்பார்.
அந்த குழந்தை தான் ரவீனா தஹா என்று பலருக்கும் தெரியாது. முதலில் ஜில்லா படத்தில் இவர் தேர்வாகவில்லையாம் வேறொரு ஆடிஷனுக்கு சென்ற பொது ஜில்லா பட வாய்ப்பு கிடைத்துள்ளது.
பல திரை படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். அதில் பல படங்கள் வெற்றி படங்கள் ஆகும்.
அவை பூஜை, புலி, கதை சொல்ல போறோம், ஜீவா, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரை அரங்கம் போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்துதுள்ளார்.
ராட்சசன்:
ராம் குமார் இயக்கத்தில் ராட்சசன் படத்தில் கிருத்திகா என்ற பெயரில் நடித்து இருந்தார்.
பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்களால் ஏற்படும் பாலியல் தொல்லைகளையும் அதனால் அந்த மாணவிகளுக்கு ஏற்படும் மன கஷ்டங்களை அப்பட்டமாக நடித்துக் காட்டினார்.
இந்த படத்தில் அப்பாவியான முக பாவனைகளால் நடித்துக் கலக்கி இருந்தார். அதில் இவரைப் பார்த்தால் அனைவர்க்கும் பாவமாக இருக்கும். இந்த படம் தான் ரவினா திரை உலக வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனையாக இருந்தது எனலாம்.
மௌன ராகம் :
மௌன ராகம் தொடர் 2017 ல் தாய் செல்வம் மனோஜ் குமார் அவர்களின் இயக்கத்தில் வெளியானது. வெளியான சில நாள்களிலே பல லட்சம் ரசிகர்களைப் பெற்றது.

மேலும் இதில் உள்ள கதாபாத்திரங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு பின்னர் மூன்று வருடங்களாக இந்த தொடர் வெற்றி கரமாக ஒளிபரப்பட்டது 2020ல் சீசன் 1 நிறைவடைந்தது.
இந்த தொடரின் ப்ரோமொக்காக பலரும் காத்து கொண்டு இருந்தனர் எனலாம் ஏனேன்றால் கதையில் அத்தனை திருப்பங்கள் இருந்தது எனலாம்.
கதை சுருக்கம்:
மௌனராகம் தொடரில் கார்த்திக் மல்லிகா என்ற பெண்னை காதலித்து குடும்பத்தாரிடம் தெரிவிக்கமால் திருமணம் செய்து வாழ்ந்து வந்து இருந்தார்.
அந்த சமயம் குடும்பத்தாரிடமிருந்து கார்த்திக்கு அழைப்பு வரவே மல்லிகாவை விட்டு விட்டுத் தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று விடுகிறார் கார்த்திக். அங்குக் கார்த்திக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடக்கிறது.
தன்னுடைய முதல் திருமணத்தை பற்றி யாருக்கும் சொல்லாமல் மன வருத்தத்துடன் வாழ்ந்து வருகிறார் கார்த்திக்.
முதல் மனைவிடம் சக்தி என்ற பெண் குழந்தை உள்ளது.
பின்னர் இரண்டாவது மனைவிடம் ஸ்ருதி என்ற குழந்தை உள்ளது. மல்லிகா தனது அண்ணன் குடும்பத்தில் இருந்து சக்தியை வளர்த்து வந்தார்.

இதில் ஆச்சிரியம் எண்ணவென்றால் இசைபற்றி எதும் தெரியாமலே சக்தி நன்றாக பாடும் திறமை பெற்று இருந்தார்.
பின்னர் மல்லிகாவிற்கு விபத்து ஏற்படவே அப்பாவை தேடி அலைகிறார் சக்தி. பின்னர் சந்தர்ப்ப சூழ்நிலையால் சக்தி தன் அப்பாவின் வீட்டுக்கு வந்து விடுகிறார்.
பின்னர் பல நாள்கள் கழித்து இருவருக்கும் தங்களுக்கான உறவு தெரிகிறது அப்போது மல்லிகாவும் திரும்பி வந்து விடுகிறார்.
ஆனால் இது கார்த்திக்கின் இரண்டாவது மனைவியான காதம்பரிக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படவே சக்தியை மல்லிகா தன்னுடன் அழைத்து சென்று விடுகிறார் இதனால் சக்தியும் கார்த்திக்கும் பிரித்து விடுகிறார்கள்.
மௌன ராகம் 2 :
தற்போது சீசன் 2 தொடங்க பட்டு உள்ளது. சீசன் 2வில் 12 வருடங்கள் கழித்து தொடர் காட்சி படுத்த படுகிறது. இந்த தொடரில் சக்தி மட்டும் மல்லிகா இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
அதோடு சீசன்1 நடித்த நடிகர்கள் தான் மீண்டும் நடிக்கின்றனர். ஸ்ருதி மற்றும் சக்தி கதாபாத்திரங்கள் மட்டும் மாற்றப்பட்டு உள்ளது.
இந்த தொடரில் சக்தியாக நம்ம ரவினாநடிக்கிறார். இந்த தொடரில் பருவ பெண்ணாக வலம் வருகிறார் நம்ம ரவினா.
கடந்த வாரங்களில் சக்தி அம்மாவிற்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் மருத்துவத்திறகாக தன் அப்பா இருக்கும் ஊருக்கு வருகிறாள்.
பின்னர் வேலை இல்லாத காரணத்தால் தன் கார்த்திக்கின் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இனி இவர்களுக்கு தங்களுக்குள்ளான அப்பா மகள் உறவு முறை தெரியுமா இல்லை தெரியாத என்று வரும் வாரங்களில் பார்க்கலாம்.

திரையில் மட்டும் தான் இவர் அமைதியான பெண்ணாக வளம் வருகிறார்ஆனால் நிஜத்தில் மிகவும் சுட்டி தனமான பெண்ணாக இருக்கிறார்.
இவர் மௌன ராகம் தொடருக்கு பின்னர் சமூக வலை தலத்தில் லைவ்வில்(Live) வந்தார்.
அப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு தனக்கே உரித்தான குறும்புத்தனமான பாணியில் பதில் அளித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளார்.
இவருடைய பெயர் ரவினா மட்டும் தான் ஆனால் தாஹா என்ற வார்த்தையை இவர் பெயரையுடன் இணைத்துக் கொண்டார் நம்ம ரவினா.
மேலும் இவர் இரண்டரை வயது இருக்கும் போதே பாரத நாட்டிய பயிரிச்சி பெற்றுள்ளார். மேலும் ஜீ தமிழ் டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை வெற்றி பெற்றார்.
மௌன ராகம் தொடர் நம்ம ரவினாவிற்கு வெள்ளி திரை வாய்ப்பினை கொண்டு வரும் என எதிர் பார்க்க படுகிறது.
Pingback: mouna raagam season 2 cast - மௌன ராகம் 2 சீரியல் - Tamilfy