Cinema

அட எதிர் பாராத செய்தி! இவர் மீண்டும் படம் இயக்க வருகிறாரா!

actor prithvi director

நம்ப திரையுலகில் நிறைய அக்டர்ஸ் நடிச்சிட்டு இருக்காங்க. அதில் சிலர் படம் இயக்கிட்டும் இருக்காங்க. அதில ஒருத்தர்தா பிரித்வி ராஜ் சுகுமாரன். இவர் அக்டோபர் 16, 1982 இல் பிறந்தார். இவர் ஒரு இந்திய நடிகர் , இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர் மற்றும் வினியோகிஸ்தர். இவர் பெரும்பாலும் மலையாள சினிமாவில தனது படைப்புகளை வெளியிட்டு இருக்காரு. அதன் மூலம் சிறந்த பெயரை பெற்றவர். இவர் அப்பா பெயர் சுகுமாரன், அம்மா பெயர் மல்லிகா சுகுமாரன்.

இவர் இது மட்டும் இல்லாமல் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு போன்ற படங்களிலும் நடிச்சி இருக்காரு. இவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு வேடங்களில் நடிச்சி இருக்காரு. இவர் தனது திரைப்பட வாழ்க்கையில் தேசிய திரைப்பட விருது , மூன்று கேரள மாநில திரைப்பட விருதுகள், ஒரு தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் ஒரு பிலிம்பேர் விருதுகள் உட்பட மேலும் பாடல் விருதுகள்
வாங்கி இருக்காரு.

இவர் தனது திரைப்பட வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி தற்போது உலக அளவில் பிரபலமாகி உள்ளார். இவர் முதலில் லூசிபர் படம் மூலம் டேரக்டராக அறிமுகம் ஆனார். பிரித்வி தமிழ் திரைப்படத்தில் அதாவது, கனா கண்டேன் , கண்ணாமூச்சி ஏனடா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் அதிகமான படங்களில் நடித்து முன்னணி நடிகராக விளங்கினார். பிரித்வி கதாநாயகனாக பணியாற்றுவதற்கு முன்பு துணை இயக்குனராக பணியாற்றினார்.

இதன் காரணமாக படம் இயக்குவதில் ஆர்வம் ஏற்பட்டது. பிறகு படம் இயக்க தொடங்கினார். முதலில் இயக்கிய லூசிபர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.. பிறகு அதில் ஆர்வத்தோடு பணியாற்றி தற்பொழுது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்பிரான் படத்தை இயக்க முடிவு செய்து இருக்கிறார்.

தற்பொழுது லாக்டவுன் காரணமாக பட வேலைகள் தொடங்கவில்லை. இது மட்டும் இல்லாமல் இந்த நிலையிலும் புதிய படம் ஒன்றை எடுக்க முடிவு எடுத்து அந்த தகவலை வெளியிட்டு உள்ளார்.. இந்த படத்தை கதையை தேர்வு பண்ணிட்ட இனி படம் எடுப்பது மட்டும்தா வேலை என்று கூறியுள்ளார். மீண்டும் கேமராவுக்கு பின்னால் செல்ல போகிறேன் , படம் பற்றிய விவரத்தை விரைவில் வெளியிடுவேன் என்று கூறி இருக்கிறார் பிரித்வி சுகுமாரன்.. இந்த படம் மக்களால் கவரப்படும் என்று நம்ப்படுகிறது. இதனை எதிர் பார்த்து காத்துக்கொண்டுள்ளார்கள் ரசிகர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube