கண்ணான கண்ணே சீரியல் மீரா யார் ?
kannana kanne serial meera: சன் தொலைக்காட்சியில் ஒரு தொடர் வெளியானால் அந்தத் தொடர்அணைத்து மக்களாலும் விரும்பிப் பார்க்கபடும் அதுபோலக் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஒளிபரப்ப பட்ட தொடர் தான் கண்ணான கண்ணே தொடர்.
இத்தொடர் வெளியான இரண்டு வாரங்களில் அணைத்து மக்களாலும் விரும்பிப் பார்க்கப்படுகிறது. தற்போது இத்தொடரில் மீராவாக நடித்துக் கொண்டு இருக்கும் நிமோஸிக்காவை பற்றிப் பார்க்கலாம் வாங்க….
மீராவின் உண்மையான பெயர் நிமோஸிக்க ராதாகிருஷ்ணன். இவர் 1994ஆம் ஆண்டு கோயம்பத்தூரில் பிறந்துள்ளார்.
பின்னர் இவர் தனது பள்ளி படிப்பை கோயம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி முடித்துள்ளார்.
இவர் தன்னுடைய கல்லூரி படிப்பை கோவையில் உள்ள PSG College of Technology யில் இன்ஜினீரிங் முடித்துள்ளார். தற்போது இவர் சென்னையில் வசித்து வருகிறார்.
திரை கனவு :

நிமோஸிக்கவிற்கு திரை உலகிற்கு வர வேண்டும் என்கிற ஆர்வம் இருந்துள்ளது. ஆனால் இவருக்கு எந்தத் திரை பின்புலம் இல்லாததால் திரை உலகில் எவ்வாறு நுழைவது என்று தெரியாமல் இருந்துள்ளார்.
சமூக வலைதளங்களும் வாய்ப்புகளும்:
இருப்பினும் இவர் தன்னுடைய சொந்த ஊரான கோயம்புத்தூரில் ஒரு லோக்கல் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளனியாக இருந்துள்ளார். பின்னர் பல சமூக வலை தலங்களில் தன்னுடைய டிக் டாக் விடியோவினை பதிவு செய்துள்ளார்.
குறிப்பாக டிக் டாக் செயலியின் மூலமே இவருக்கு வாய்ப்பு கிடைத்தது எனலாம்.
கடைக்குட்டி சிங்கம் (2019):
நிமோஸிக்கவின் விடியோவை சமூக வலை தளங்களில் பார்த்து விஜய் டிவி இவரைத் தொடர்பு கொண்டு கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடிக அழைப்பு விடுத்தது. இவரும் இத்தொடரில் நடிக்க ஆர்வத்துடன் ஒப்பு கொண்டார்.
நாகசரவணன் எழுத்தில் இத்தொடரில் நீலாம்பரியாக நடித்து இருந்தார். இத்தொடரில் பிக்பாஸ் புகழ் சிவானி நாராயணன் மற்றும் முகமத் அஷீம் உடன் இணைத்து நடித்து இருந்தார்.

இதில் நெகட்டிவ் ரோலில் நடித்து இருந்தார். இதன் மூலம் இவர் விஜய் டிவியில் என்கிட்ட மோததே ஷோவிலும் பங்கு பெற்று உள்ளார்.
மலையாள தொடரில் வாய்ப்பு :
கடை குட்டி சிங்கம் தொடரில் நடித்துக் கொண்டு இருக்கும் பொது மலையாள தொடரில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.மஹவில் மனோரமா டிவியில் செந்தில் விஸ்வநாத் எழுத்தில், ராஜா நாராயணன் இயக்கத்தில் அனுராகம் என்ற தொடரில் நடித்து இருந்தார்.
மேலும் இத்தொடரில் கதாநாயகியாக நடித்துக் கொண்டு இருந்தார் கொரோனா காரணமாக இத்தொடர் நிறுத்த பட்டது. அப்போது தான் நிமோஸிக்கவிற்கு சன் தொலை காட்சியில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
கண்ணான கண்ணே – kannana kanne serial meera
தனுஷ் அவர்களின் இயக்கத்தில் நிமோஸிக்க நடித்துள்ளார். இத்தொடரில் மீராவாக வலம் வருகிறார் மேலும் இத்தொடரில் அப்பாவின் அன்புக்கு எங்கும் மகளாக நடித்துள்ளார்.
இவருக்கு ஜோடியாக யுவா என்ற பெயரில் நந்தினி தொடர் புகழ் ராகுல் ரவி நடிக்கிறார். பீர்த்தியாக அக்ஷித பூபயாவும், சித்தியாக நித்திய தாஸ் நடிக்கிறார்கள்.
கதையின் ஆரம்பத்தில் கவுசல்யாவாக நடிகை இனியா தோன்றுகிறார் கவுதம்மாக பிரிதிவீரஜ் (Babloo Prithiveeraj) நடிக்கிறார். கவுதம் மாற்றும் கவுசல்யா இருவரும் காதலித்து கவுசல்யா வீட்டை எதிர்த்துத் திருமணம் செய்து கொண்டுள்ளனார்.
கவுசல்யாவிற்கு குழந்தை பிறக்காது என மருத்துவர்கள் கூறுகின்றனர். அவ்வாறு குழந்தை பிறந்தாலும் கவுசல்யாவின் உயிர்க்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரித்து உள்ளனர்.

ஆனால் இது எதுவும் கவுதம்மிற்கு தெரியாது. கவுசல்யா தாய்மை அடைகிறார்.கவுசல்யாவும் கவுதம்மும் சந்தோசமாக இருக்கின்றனர் இருவரும் அந்தக் குழந்தையின் வரவுக்காக காத்து கொண்டு இருக்கின்றனர்.
பிறகு நடந்தது:
பின்னர் திடிரென்று கவுசல்யாவிற்கு குழந்தை பிறக்க போவதாக அழைப்பு வரவே கவுதம் மருத்துவமனைக்கு செல்கிறார் அவ்வாறு செல்லும் பொது தன்னுடைய கம்பெனியில் முக்கியமான மீட்டிங் இருந்தும் இவர் ஹாஸ்பிட்டலுக்கு சென்று விடுவார்.
கவுசல்யாவிற்கு குழந்தை பிறக்கிறது அதை மருத்துவர்கள் கவுதம்மிடம் கூறும்பொழுது ஒரு அழைப்பு வருகிறது கவுதம் அலுவலகத்தில் வருவாய் துறை அலுவலர்கள் வந்துள்ளனர் என்று கூறுகிறார்கள்.
அதோடு கம்பெனி மூட பட்டு விட்டதாக தெரிவிக்கின்றனர். பின்னர் மருத்துவர் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று கூறுகிறார்.
அந்த குழந்தையை கவுதம்மிடம் காட்ட கொண்டு வரும் பொது கவுசல்யா இறந்து விட்டதாக கூறுகிறார்கள்.
அதோடு வருவாய் துறை அதிகாரிகள் இவரைக் கைது செய்கின்றனர். தன்னுடைய மனைவியும் இறந்துவிடவே மேலும் கம்பெனி மூட பட்டு விட்டதால் கவுதம்மிற்கு பிறந்த குழந்தைமேல் ஆத்திரம் மற்றும் வெறுப்பும் ஏற்படுகிறது.
அப்போது கவுதம் நினைக்கிறார் இந்தக் குழந்தை பிறந்த பிறகுதான் தனக்கு இவ்வாறு எல்லாம் நடந்தது என்று அந்தக் குழந்தையை வெறுக்கிறார்.
20 வருடங்கள் கழித்து அப்பாவின் அன்புக்காக காத்திருக்கும் மகளாக மீரா வருகிறார்.”இன்னைக்கு இல்லாட்டி எங்க அப்பா எப்பாவது என்னிடம் பேசுவார்” என்று நினைக்கிறார்.
இதில் கவுதம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார் அதோடு இவருக்கு ஒரு மகள் உள்ளது.
கவுதம் தன்னுடைய இரண்டாவது மகளை மட்டும் தான் மகளாக நினைக்கிறார் அதோடு மீராவை கண்டால் வெறுப்பை மட்டுமே கட்டுகிறார்.
ஆனால் மீராவின் சித்தி மற்றும் தங்கை இவரை ஏற்று கொண்டுள்ளனர் மீராவின் சித்தி இவரைத் தன்னுடடைய மகளாக தான் பார்க்கிறார்.

அவ்வாறு இருக்கும் பொது மீராவை யுவா காதலிக்கிறார். தற்போது திருப்பு முனையாக கவுசல்யாவின் தங்கையாக வாசுகி என்ற பெயரில் ப்ரீத்தி சஞ்சீவ் இணைத்துள்ளார்.
கவுசல்யா கவுதம் உடன் சென்றதால் தன் குடும்பத்திற்கு பிரச்சினை வந்ததாவும்.தன்னுடைய அப்பா இறந்ததற்கும் அதோடு தனக்கு திருமணம் நடக்காததற்கும் காரணம் கவுதம் தான் எனவும் அவரைப் பலி வாங்க காத்து கொண்டு உள்ளார் வாசுகி.
தற்போது பல திருப்பங்களுடன் இத்தொடர் ஒளிபரப்பபட்டு கொண்டு இருக்கிறது.
இத்தொடரின் இன்ட்ரோ பாடல் அனைவராலும் விரும்பப்பட்டுள்ளது எனலாம் மேலும் இத்தொடருக்கான ப்ரோமோ சின்னத் திரைக்கான ப்ரோமோ போல் இல்லாமல் வெள்ளி திரைக்கான ப்ரோமோ போல் உள்ளது.
இதனால், இத்தொடருக்கான ஆர்வத்தை மேலும் தூண்டியது எனலாம்.யுவா மற்றும் மீரா இருவரின் ஜோடி பலராலும் ரசிக்க பட்டு வருகிறது.
இத்தொடர் தன்னுடைய வாழ்க்கையுடன் ஒத்து போவதாக நிமோஸிக்க கூறியுள்ளார். அதோடு இவர் தந்தை இல்லாமல் தான் வளர்ந்துள்ளார்.
கல்லூரி காலங்களில் தந்தைக்காக மிகவும் ஏங்கியதாகவும்பள்ளி மற்றும் கல்லுரிகளில் இவர் நண்பர்கள் அனைவரும் தந்தையுடன் வரும்பொழுது இவருக்கு ஏக்கமா இருக்குமாம் அதை ஒரு நேர்காணல் நிமோஸிக்கவே கூறியுள்ளார்.
யாரு இந்தப் பொண்ணு :
யாரு இந்தப் பொண்ணு என்ற நிகழ்ச்சி மீராவுக்காகவே நடத்த பட்டது அதோடு இதுவரை எந்தச் சின்னத் திரை நடிகைக்கு இவ்வாறான நிகழ்ச்சி நடத்தியதே கிடையாது எனலாம். இந்த நிகழ்ச்சி நிமோஸிக்கவிற்கான வரவேற்பை மேலும் அதிகரித்துள்ளது எனலாம்.
நிமோஸிக்கவிற்கு நடிகர் அஜித் என்றால் மிகவும் பிடிக்குமாம். பின்னர் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகமாகி வருகிறது அதோடு கூடிய விரைவில் இந்தக் கொங்கு மங்கை வெள்ளி திரையில் மின்னுவர் என எதிர் பார்க்க படுகிறது.