Serial

பாரதி கண்ணம்மா வெண்பா பற்றி பலரும் அறியாதவை!

bharathi kannamma venba: விஜய் டிவி தொடர்களிலே அதிக TRP ரேட்டிங்கை கொண்டது பாரதி கண்ணம்மா தொடர்..

இந்த தொடரில் நடித்துக் கொண்டு இருக்கும் அனைவரும் தன்னுடைய திறமையை காட்டி வரும் நிலையில் வில்லியாக வெண்பா என்ற கதா பாத்திரத்தில் கலக்கி வருகிறார் நம்ம ஃபரீனா.

தன்னுடைய நடிப்பால் பல ரசிகர்களைப் பெற்றவர்களைப் பார்த்து இருப்போம் ஆனால் பல வெறுப்பாளர்களை உருவாக்கியர் நம்ம வெண்பா தான்.

தற்போது பாரதி கண்ணம்மா தொடரையே வேறு இடத்திற்கு கொண்டு சென்றவர் நம்ம வெண்பா. அவர் திரை உலகில் பல தரப்பட்ட சூழ்நிலைகளில் பணி செய்து உள்ளார். அவருடைய வாழ்கை பற்றின தகவல்களைக் காணலாம் வாங்க…

தனிப்பட்ட தகவல்கள் :

நம்ம வெண்பாவின் உண்மையான பெயர் ஃபரீனா ஆசாத் ஆகும். இவர் சென்னையில் ஆம் 1992 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் தேதி பிறந்துள்ளார். மேலும் இவர் ஒரு MBA பட்டதாரி ஆகும்.

bharathi kannamma venba real life

இவர் சென்னையில் அண்ணா பல்கலை கழகத்தில் MBA Health and Service படித்துள்ளார்.

ஆங்கர் ஃபரீனா :

நம்ம ஃபரீனாவிற்கு சிறு வயது முதலே திரை உலகில் வர வேண்டும் என்று ஆசை இருந்ததாம். அதற்கு இவருடைய அப்பாவும் உதவி புரிந்தாராம்.

பின்னர் இவர் தன்னுடைய ஆசை பணியான ஆங்கர் பணியை செய்ய தொடங்கி உள்ளார். மேலும் கல்லுரிக் காலங்களிலே இவர் சின்னத் திரை உலகில் கால் பதித்து விட்டாராம்.

இவர் முதலில் லோக்கல் சேனல்லில் தான் தன்னுடைய பயணத்தை தொடங்கி உள்ளார். பின்னர் ராஜ் டிவியில் ALL TIME MUSIC என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவந்தார்.

பின்னர் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒரு நிமிடம் ப்ளீஸ் போன்ற பல ஷோக்களை தொகுத்து வழங்கி கொண்டு இருந்துள்ளார்.

bharathi kannamma venba photo
bharathi kannamma venba

குக்கரி ஷோ என்றால் இவருடைய நினைவு தான் வரும். ஆம் நம்ம ஃபரீனா பல குக்கரி ஷோக்களை தொகுத்து வழங்கி உள்ளார்.

குறிப்பாக ஜி தமிழில் அஞ்சறைப் பெட்டி நிகழ்ச்சிலும் மேலும் சன் டிவி-யில் ஒளிபரப்பான கிச்சன் கலாட்டா போன்ற நிகழ்ச்சிகலில் ஃபரீனா பிரபலமாக பேசப்பட்டார்.

அதோடு கன்ன குழி தெரிய இவர் உணவை ருசி பார்ப்பதும் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.

இவர் சிறு வயதிலிருந்து அசைவ உணவை மட்டும் தான் எடுத்துக் கொண்டுள்ளாராம். பின்னர் குக்கிங் ஷோவிற்கு சென்ற பிறகு தான் சைவ உணவை சாப்பிட்டுள்ளாராம். ஆனால் இவருக்கு அசைவம் தான் ரொம்ப பிடித்து உள்ளதாம்.

ஆரம்பம்:

ஆரம்பம் முதலே நிறைய சீரியல் மற்றும் பட வாய்ப்புகள் ஃபரீனாவின் கதவை தட்ட ஆரம்பித்துள்ளன ஆனால் அவற்றை ஃபரீனா நிராகரித்திருக்கிறார். ஏன் என்றால் ஃபரீனாவிற்கு சீரியலில் நடிப்பதை விட ஆங்கரிங் செய்வது தான் மிகவும் பிடித்து இருந்ததாம். 

பின்னர் ஃபரீனாவிற்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்துள்ளது. அதனால் சின்ன திரை தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இவர் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியலில் நடித்தார். பின்னர் கலர் தமிழ் டிவியில்ஒளிப்பரப்பான தறி என்ற தொடரில் வாணி என்ற பெயரில் நடித்து இருந்தார்.

பாரதி கண்ணம்மா :

பாரதி கண்ணம்மா தொடரின் இயக்குனர் பிரவீன் இவரைத் தான் வெண்பாவாக நடிக்க வைக்க வேண்டும் என்று சேனல்லிடம் கூறியிருந்தாரம்.

barathi kannamma akilan

ஆனால் சேனல்லில் உள்ளவர்கள் இவர் வேண்டாம் என்றும் இவருடைய முகம் வில்லி வேடத்திற்கு பொருந்தாது என்றும் கூறியிருந்துள்ளனர்.

ஆனால் பிரவீன் அவர்கள் இவர் தான் வேண்டும் என்று கூறியிருந்தாரம்.

முதலில் பிரவீன் அவர்கள் இந்த தொடரை பற்றிக் கூறும் பொழுது ஃபரீனா நினைத்தாராம் இந்த சீரியல் எல்லாம் எப்படி ஒட போகிறது சரி பார்க்கலாம் என்று தான் ஃபரீனா இந்த தொடருக்கு ஒப்பு கொண்டு உள்ளார்.

இவர் பாரதி கண்ணம்மா தொடருக்கு தாமதாமாக என்ட்ரி ஆனார். அப்பொழுது மற்ற நடிகர்கள் இவரை ஏற்க வில்லையாம்.  இதனால் இவருக்கு காலேஜில் ஜூனியராக இருப்பது போன்று இருந்ததாம்.

பின்னர் நாள்கள் அகா அகா ஏல்லோரும் இவரிடம் நெருக்கமாகி விட்டனராம்.

வில்லி வேடமும் வசை பாடுகளும் :

பாரதி கண்ணம்மா தொடரில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி திருமணம் செய்து கொண்டனர். 

கண்ணம்மா கர்பமாக இருக்கும் பொழுது வெண்பா பாரதி மீது கொண்ட காதலால் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரரையும் திட்டம் தீட்டி பிரித்து விட்டார்.

பின்னர் பாரதி திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருந்தபோது பாரதியின் அம்மாவால் அந்த திருமணம் நிறுத்த பட்டது.

bharathi kannamma venba real life

தற்போது பாரதியின் வாழ்க்கையில் வெண்பா இருப்பாரா இல்லை இவர் போட்ட திட்டம் அம்பலமாகும என்று வரும் தொடர்களில் பார்க்கலாம். 

இந்த தொடரில் திருப்பு முனையாக இருந்ததே வெண்பா என்ட்ரி தான் யாரும் நினைக்காத அளவு வில்லியாக கலக்கி கொண்டு இருக்கிறார்.  

இயக்குனர் இவரிடம் இந்த தொடருக்கு தேர்வு செய்யும் போது இந்த கதா பாத்திரத்தில் நடித்தால் உங்களை எல்லோரும் திட்டுவார்கள் என்று கூறி உள்ளார்.  உனக்கு விருப்பம் இருந்தால் நடி என்று கூறி விட்டாராம். இவரும் சரி என்று நடிக்க ஆரம்பித்துள்ளார்.

பார்த்தால் சமூக வலை தளங்களில் எல்லோரும் இவரை திட்டித் தீர்த்து உள்ளனர். இவரும் பொறுமையாக இருந்தாராம்.
பின்னர் அதிகமாக நெகடிவ் கமெண்ட் வரவே அதை நினைத்து அழுதே விட்டாராம்.

பின்னர் இயக்குனர் மட்டும் மற்ற நடிகர்கள் இவரை சமாதான படுத்தினராம். இந்த கமெண்ட் எல்லாம் உனக்கானது இல்லை வெண்பாக்கானது என்று சமதப்படுத்தினராம். 

ஒரு முறை இவர் ஒரு கல்யாணத்திற்கு சென்ற பொழுது பாரதி கண்ணம்மா ரசிகர்கள் இவரைப் பார்த்து வந்துட்டா குடும்பத்தை கெடுத்தவள் என்று திட்டி விட்டனராம். இது இவருக்கு மிகவும் வருத்தமாக இருந்ததாம்.

திருமணம் பிரிவும் சேர்வும்: இவர் திருமணம் காதல் திருமணம் தானம்.

ஆம் தொலை காட்சிகளில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது அங்கு உடன் பணி புரிந்த ரகுமான் என்பவரை காதலித்து 2017 ஆம் ஆண்டு கல்யாணம் செய்து கொண்டாராம். 

bharathi kannamma venba

bharathi kannamma venba real life

ஆனால் திருமணமான சில நாள்களில் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்படவே இருவரும் பிரிந்து விட்டனர். பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து இருவரும் தன்னுடைய காதலை புதுப்பித்து உள்ளனர்.

தற்போது மீண்டும் இருவரும் சேர்த்து வாழ ஆரம்பித்துள்ளனர்.

மேலும் இவர் தன்னுடைய திருமண வாழ்க்கையை பற்றியும் தற்போது கணவருடன் வாழ்ந்து வருவதும் பற்றியும் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

அதை மக்கள் பெரிதும் வரவேற்று இருந்தனர். மேலும் இருவருக்கும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். ஃபரீன நடிப்பு மட்டும் மில்லாமல் தற்போது பாடலும் பாடி அசத்தி வருகிறார்.

ஆம் இவர் ஷூட்டிங் இடை வேளையில் இவரும் பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்கும் மற்றொரு நடிகரும்மான பிரவீன் உடன் இணைந்து பாடல் பாடி சமூக வலை தலத்தில் வெள்ளியிட்டார்.

இவர் முதலில் வெளியிட வேண்டாம் என்று சொன்னாராம். ஆனால் பிரவீன் அவர்கள் சொல்வே சரி என்று வெளியிட்டு விட்டாராம். எல்லோரும் கிண்டல் செய்வார்கள் என்று தான் நினைத்தாராம்.

ஆனால் இவர்களுடைய பாடல்கள் அனைவருக்கும் பிடித்து விட்டதாம். தற்போது அது இவருடைய பெரிய பொழுது போக்காக மாறியுள்ளது. பழைய பாடல்களைத் தனக்கே உரித்தான குரலில் பாடி கலக்கி வருகிறார்.

இவர் ஒரு மிக பெரிய சிலம்பரசன் ரசிகராம். அவருடைய அனைத்து படங்களையும் ஒன்று விடாமல் பார்த்து விடுவாராம்.

சின்ன திரை தொடர்களுக்கு வருவதற்கு முன்னர் பல பட வாய்ப்புகளை நழுவ விட்டு விட்டாராம். பாரதி கண்ணம்மா வெற்றியினை பார்த்து அந்த பட வாய்ப்பினை விட்டதை எண்ணி வறுத்தப் படுகிறாராம்.


கூடிய விரைவில் இந்த கன்ன குளியழகை வெள்ளித்திரையில் பார்க்கலாமென எதிர் பார்க்க படுகிறது.

6 thoughts on “பாரதி கண்ணம்மா வெண்பா பற்றி பலரும் அறியாதவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube