CinemaSerial

2021இல் பிரபலம் ஆன சீரியல் நடிகைகள் யார் என்று தெரியுமா?

உலக மக்கள் அனைவரும் பல வேலைகளில் இருந்தாலும் வீட்டில் உள்ள தாய்மார்களுக்கு பல கஷ்டங்கள் இருந்தாலும் அவர்களுக்கு பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் ஆகும். திங்கள் முதல் சனி வரை அனைவரின் வீட்டிலும் வந்து மகிழ்வித்து மக்களின் மனங்களை கவர்ந்தந்துள்ளது.

அவ்வாறு அமைந்த ஒவ்வொரு சீரியலும் பல வெற்றிகளை பெற்றுள்ளது. அந்த வெற்றிகள் பெறுவதற்கு காரணமாக இருந்தவர்கள் அதில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் ஆகும்.அவர்கள் தனது குடும்ப கதை போல் மனதில் நினைத்து கதாபாத்திரமாகவே வாழ்ந்து வெற்றியை அடைந்துள்ளனர்.

2021இல் பல நடிகைகள் தங்கள் முயற்சியை வெற்றியை நோக்கி செலுத்தினாலும் தற்போது மக்களின் மனதை கவர்ந்து முன்னிலையில் இருப்பவர்களை பற்றி நாம் பின்வருமாறு காண்போம்.

வாணி போஜன் (சத்யா ): தெய்வமகள்

வாணி போஜன் அவர்கள் 1982 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி ஊட்டில பிறந்துருக்காங்க. அவிங்க அப்பா வைல்ட் லைப் போட்டோக்ராபர் அம்மா ஹவுஸ் வைப். வாணி போஜனின் அண்ணா ஒரு பத்திரிகையாளர். வாணி போஜன் ஊட்டில பள்ளி மற்றும் கல்லூரி முடிச்சிருக்காங்க.

அது மட்டும் இல்லாமல் வானுர்தி பணி பெண் பயிற்சி பெற்று கிங் பிஷேர் ல பணி பெண்ணா இருந்துருக்காங்க. அவிங்க தோழி நீங்க ஏன் மாடல்லிங் பண்ண கூடாது அப்டினு கேட்ருக்காங்க. அதனால வாணி போஜானும் மாடல்லிங் செய்ய ஆரம்பிச்சாங்க.பிறகு பல விளம்பரங்களிலும் நடிச்சிருக்காங்க. அத தொடர்ந்து பல சீரியல் நடிச்சிருக்காங்க.

ஜீ தமிழ்ல லக்ஷ்மி வந்தாச்சு சீரியல் பண்ணிருக்காங்க.2013 ல தெய்வம் தந்த வீடு நடிச்சிருக்காங்க. அதுக்கு அப்பறோம் வாணி போஜன்னு சொல்றத விட சத்யானு தான் ரொம்ப பிரபலம் ஆனாங்க. பிறகு படம் வாய்ப்பு கெடச்சுது.

ஆன வாணி போஜனுக்கு திரைப்படம் நடிப்பது மீது ஆர்வம் இல்லாம இருந்துச்சி. அந்த படம் வெற்றி பெற்றதும் வாய்ப்பை தவற வீட்டுட்டோம்னு நெனச்சி திரும்ப படம் வாய்ப்புக்கு காத்திருக்கிறாங்க. வாணி போஜனுக்கு தனுஷ் ரொம்ப புடிக்கும்.

பாரின ஆசாத் ( வெண்பா ):பாரதி கண்ணம்மா

1992 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி சென்னைல பிறந்திருக்காங்க. இவங்க சின்ன வயசுல இருந்து தொகுபாளராக ஆகணும்னு ஆசை.6வது படிக்கும் போது இருந்து கண்ணாடி முன்னாடி நின்னு பேசுவாங்கலாம். அத பாத்த அவிங்க அப்பா நிறைய ஆடிஷன்கு கூட்டிட்டு போயிருக்காரு.

அவங்களுக்கு லோக்கல் டிவில வாய்ப்பு கெடச்சிருக்கு. ராஜ் டிவில ஆல் டயம் மியூசிக்னு ஒரு ப்ரோக்ராம் பண்ணிருக்காங்க. அதை தொடர்ந்து வானவில் புதுயுகம் சேனல்ல நிறைய ப்ரோக்ராம் பண்ணிருக்காங்க. நிறைய செலிப்ரட்டிஸ் இன்டெர்வியூ பண்ணிருக்காங்க. அஞ்சரைப்பெட்டி தொகுபாளராகவும் சன் டிவில கிட்சேன் களாட்டாவும் பண்ணிருக்காங்க.

அத பாத்துட்டு சன் டிவி அவங்களுக்கு ஒரு வாய்ப்பு குடுத்தது. சன் டிவில ஒளிபரப்பு செய்யப்பட்ட அழகு சீரியல்ல முதன்முதலில் நிவேதா கதாபாத்திரத்தில நடிச்சிருக்காங்க. இவிங்க சிம்பு ஓட பெரிய ரசிகைனும் சொல்லலாம். சீரியல்ல வில்லியா நடிச்ச பரினா ரியல் லைப்ல காதல் திருமணம் செஞ்சிருக்காங்க. கணவர் பெயர் ரஹ்மான். அவரு விளம்பர டைரக்டர்.2014 ஆம் ஆண்டு கல்யாணம் பண்ணிருக்காங்க.

ஸ்ரீநிதி ( ரோஜா ): செந்தூரபூவே

டீச்சர்னு சொன்னவே நம்ப மனசுல வரது மலர் டீச்சர் தான். அதை தொடர்ந்து சின்னத்திரைல டீச்சர்ணா அது நம்ப ரோஜா டீச்சர் தான். ஸ்ரீநிதி 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி பிறந்துருக்காங்க. பிறந்த இடம் கேரளா ல இருக்க திருவென்றம். ஸ்ரீநிதிக்கு அவிங்க அம்மா ரொம்ப சப்போர்ட்டா இருக்காங்க. ஸ்ரீநிதி பள்ளி கல்லூரி படிப்பை திருவென்றம் ல முடிச்சிருக்காங்க.

அவங்களுக்கு படிப்பை தவிர நிறைய ஆக்ட்டிவிடிஸ் இருக்கு. சின்ன வயசுல இருந்து நடனம் மீது ஆர்வமா இருந்தாங்க. நடிப்புல இருந்த ஆர்வதுனால கேரளால பிளார்ஸ் டிவில மலர்வடி சீரியல்ல நடிச்சிருக்காங்க.ஸ்ரீநிதி முதன்முதலில் மலையாளம் மொழில அறிமுகம் ஆகிருக்காங்க. ஜீ கேரளம் டிவில வேலை செஞ்சிருக்காங்க பிறகு மாடல்லிங் பண்ணிட்டு இருந்தாங்க. சாயபென்சில் படத்துல வாய்ப்பு கெடச்சுது பிறகு சில காரணத்தால படம் நின்றுச்சி.

கேரளால நிறைய தோல்விகளை சந்திச்ச ஸ்ரீநிதி சென்னைக்கு வந்து பல சீரியல்ல நடிச்சிருக்காங்க. சன்லைட் டிவில ஜிம்மிகி கம்மல் சீரியல்ல பாப்போளாரிட்டி ஆனாங்க. பிறகு கலர்ஸ் தமிழ்ல தறி சீரியல்ல நெசவு தொழில் பற்றி தாவணி போட்ட பெண்ணாக நடிச்சிருக்காங்க. கடைசியா விஜய் டிவில செந்தூர பூவே நடிச்சிட்டு மக்கள் மனசுல நிரந்தரமா நின்னுட்டாங்க.

நிவிஷா ( அஞ்சலி ):ஈரமான ரோஜாவே

ஈரமான ரோஜாவில் வில்லியாக நடிப்பவர் தான் அஞ்சலி (நிவிஷா ).1990 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி திரிச்சில பிறந்தாங்க. இப்போ சென்னைல இருக்காங்க. பள்ளி கல்லூரி முடிச்சிட்டு ஒரு மாடல்லிங் ஆனாங்க.

பிறகு 2014 அவளுக்கு என்ன அழகிய முகம்,இறையான் மற்றும் ஜமான் என்னும் படங்கல்ல நடிச்சிருக்காங்க.சின்னத்திரைல தெய்வமகள், தெய்வம் தந்த வீடு மற்றும் சிவகாமி என்னும் சீரியல்ல நடிச்சிருக்காங்க. ஜீ தமிழில் முள்ளும் மலரும் ராஜ் டிவில கண்ணம்மா மற்றும் விஜய் டிவில ஈரமான ரோஜாவில் அஞ்சலியாகவும் நடிச்சிட்டு இருக்காங்க.

கண்மணி மனோகரன் ( அஞ்சலி ):பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவிற்கு தங்கச்சி கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் அஞ்சலி ( கண்மணி மனோகரன் ). இவிங்க 1995 ஆம் ஆண்டு 26 ஆம் தேதி ஜூன் மாதம் பிறந்துருக்காங்க. பிறந்த ஊர் பெங்களூரு. டிவி நடிகை மற்றும் மாடல்லிங் செஞ்சிட்டு இருக்காங்க.2019 ஆம் ஆண்டு பாரதி கண்ணம்மா சீரியல்ல தான் முதன்முதலில் நடிச்சிருக்காங்க. இவிங்களுக்கு தமிழ், மலையாளம் மற்றும் கனடம் மொழிகள் தெரியும்.

5 thoughts on “2021இல் பிரபலம் ஆன சீரியல் நடிகைகள் யார் என்று தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube