Cinema

கொரோனாவால், உயிரிழந்த பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் “தொரட்டி” படத்தின் நாயகனான ஷமன் மித்ரு!!

thoratti movie actor: ஷமன் மித்ரு, இவர் தன்னுடைய மனைவி மற்றும் மகளோடு வாழ்ந்து வந்திருக்கிறார். இவர் இந்திய படங்களில் ஒளிப்பதிவாளகரவும் நடிகராகவும் இருக்கிறார். இவர் இந்தியாவில் உள்ள கன்னியாகுமாரி மாவட்டத்தில் பிறந்தார்.

இவர் சில படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்துருகிக்கார். இவர் ரவி, கே.சந்திரன் மற்றும் கே.வி.ஆனந்த் அவர்களுக்கு ஒளிப்பதிவில் உதவியாளாராக இருந்திருக்கிறார். அதுக்கு அப்றம் தான் இவர் “மௌன ராகம்” என்ற தெலுங்கு படத்திற்கு பிரதான ஒளிப்பதிவாளராக ஆனார்.

அதற்கு பிறகு இவர் தமிழ் படத்துக்கு வந்தார் நரன் (வெளியிடப்படவில்லை), எதிரி எண் 3 (வெளியிடப்படவில்லை) போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்தார். அதன் பிறகு இவங்க “அஹாட” (வெளியிடப்படவில்லை) என்ற கன்னட படத்துக்கும் ஒளிப்பதிவாளராக இருந்தாங்க. இந்த படத்தில் நம்ப விஜய் சேதுபதி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிச்சிருக்காரு.

thoratti movie actor

அதுக்கு அப்றம் இவர் “ஹுசுடுகாரு” (வெளியிடப்பவில்லை) அப்படிங்கிற கன்னட படத்திலும் ஒளிப்பதிவு பண்ணிருக்கார். இந்த படத்திற்காக இவர் பாராட்டப்பட்டிருக்கார் என்றும் சொல்லலாம்.

இதன் பின்னர் இவர் தயாரிப்பாளராக மற்றும் நடிகராக தொரட்டி படத்தில் களமிறங்கினார். பி.மாரிமுத்து “தொரட்டி” படத்தின் இயக்குனர் ஆவார். ஆனால் இந்த படத்தோட
கதாபாத்திரமும் திரைப்படம் தயாரிக்கும் முறையும் பருத்திவீரன், சுப்ரமணியபுரம், வாகை சூடவா படங்களை ஒற்றி இருக்கிறது என்றார் ஷமன்.

இந்த படத்தின் நடிகர்கள் ( thoratti movie actor ) ஆறு மாதம் பயிர்ச்சி பெற்றதுக்கு பிறகும் 5 நாட்களுக்கு போலியான படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தை திரையிடுவதற்கு முன்னாடி இன்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவலில் வெளியிட்டருக்காங்க. இந்த படத்தோட வெற்றி இவரை அடுத்த படத் திட்டத்திற்கு உதவியதுனு சொல்லலாம்.

இந்த நிலையில் தற்போது உலகத்தையே அச்சுறுத்தும் கோவிட் 19 தொற்று காரணமாக இவர் 17 ஜூன் 2021 அன்று இவுலகத்தை விட்டு பிரிந்தார். இவரோட தற்போதைய வயது 43. இவருடைய இழப்பு தமிழ் சினிமாவிற்கு மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்தி உள்ளது எனலாம்.

5 thoughts on “கொரோனாவால், உயிரிழந்த பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் “தொரட்டி” படத்தின் நாயகனான ஷமன் மித்ரு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube