SerialTV Artist

சத்யா சீரியல் ஆயிஷா பற்றி பலரும் அறியாதவை!

Sathya serial ayesha: சின்னத் திரையில் பல தரப்பட்ட கதைகள் இருந்தாலும் அனைத்தும் ஒரே கதையை ஒன்றி இருந்துள்ளது.

ஆனால் அதில் வித்தியாசமான கதை கலம் கொண்ட ஒரு தொடர் தான் சத்யா. தற்போது ஜீ தமிழில் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. ஒளிபரப்ப பட்ட சிறிது நாட்களிலே தன்னுடைய வித்தியாசமான கதையால் பல தரப்பட்ட ரசிகர்களைப் பெற்றுள்ளது எனலாம்.

இத்தொடரில் சத்யாவாக நடித்துக் கொண்டு இருக்கும் நம்ம ரவுடி பேபி ஆயிஷாவை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைக் காணலாம்.

தனிப்பட்ட வாழ்கை :

ஆயிஷா கேரளத்தில் தான் பிறந்துள்ளார் இவர். 1993ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் நாள் கேரளாவில் உள்ள கசரகோட் என்னும் இடத்தில் பிறந்துள்ளார்.

Sathya serial ayesha real life - biography

பின்னர் இவர் தன்னுடைய பள்ளி படிப்பை கசரகோடில் உள்ள அம்பேத்கர் வித்யாநிகேதன் வித்யாநிகேதன் செகோண்டரி ஸ்கூல் கசரகோடிஹஸ் (Ambedkar Vidyanikethan English Medium Higher Secondary School) இல் முடித்துள்ளார்.

பின்னர் இவர் தனது கல்லூரி படிப்பை சென்னையில் உள்ள (MOP Vaishnav College for Women, Chennai) முடித்துள்ளார். அங்கு இவர் BSC computer science) படித்துள்ளார்.

இவருக்கு சிறு வயதில் இருந்தே ஏர்ஹோஸ்டர் ஆக வேண்டும் என்பதே கனவாக இருந்துள்ளது.ஆனால் இவர் தந்தை அதை ஒப்புக்கொள்ளவில்லையாம்.

திரை வாய்ப்புகள் :

இவர் 2017இல் இருந்து திரை உலகில் உள்ளார்.இவர் முதல் திரை உலக பயணம் விஜய் டீவியில் தான் தொடங்கியது.

இவர் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும்பொழுது இவருடைய நண்பரின் மூலம் இவருக்கு ரெடி ஸ்டடி போ ஷோவில் வில் கலந்து கொல்ல வாய்ப்பு கிடைத்தது.அதே வாய்ப்பின் மூலம் இவருக்கு விஜய் டீவி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ரெடி ஸ்டடி போ (READY STUDY PO) :

ரெடி ஸ்டடி போ ஷோவின் மூலம் இவருக்கு பல சின்னத்திரை வாய்ப்பு வந்துள்ளது.ஆனால் முக்கிய கதாபாத்திரமாக வந்த தொடர் தான் பொன்மகள் வந்தால் அதனால் இவர் இத்தொடரில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

பொன்மகள் வந்தால் :

Sathya serial ayesha - unknown information - love breakup - lover

இவரைப் பொன்மகள் சீரியலில் நடிக்க அழைப்பு விடுத்தனராம் அப்போது இவரை இவர் காதலன் ஆடிஷனக்கு அழைத்துச் சென்றாராம். இவர் எதோ ஒரு வாய்ப்பு என்று நினைத்துச் சென்றாராம் ஆனால் இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவே இவருக்கு மிகவும் வியப்பாக இருந்ததாம்.

இத்தொடரில் ரோகிணி என்ற பெயரில் விக்கி க்ரிஷ்க்கு ஜோடியாக நடித்து இருந்தார்.முதலில் இத்தொடரில் நடிக்கும் பொது இவருக்கு மிகவும் பயமாக இருந்ததாம் ஆனால் போக போக நடிப்பு வந்து விட்டதாம்.

பொன்மகளுக்கு மனக்கசப்பு:

இத்தொடரின் மூலம் ஆயுஷா பிரபலம் அடைய ஆரம்பித்தபொழுது இயக்குனர் உடன் சிறிது மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது.

இத்தொடரில் ஆயுஷா நடிக்கும்பொழுது மூன்று இயக்குனர் மாறியுள்ளனர் கடைசியாக வந்த இயக்குனரிடம் தான் ஆயிஷாக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

ஷூட்டிங் நடந்து கொண்டு இருக்கும் வேளையில் இவர் தயாராக தாமதம் ஆனதால் இத்தொடரின் இயக்குனர் ஆயுஷாவை கடுமையாக நடத்தினராம்.

இதன் மூலம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் நம்ம ஆயிஷா. பின்னர் இவர் படப்பிடிப்பிற்கு நேரமாக சென்று விடுவாராம்.

ஆனால் 100 தொடர்கள் எடுத்தபிறகு இவரை அழைத்து நீங்க இந்தச் சீரியலில் நடிக்க போவதில்லை என்று கூறினார்களாம்.

இது இவருக்கு மேலும் மனஉளைச்சலை தந்துள்ளது. இந்தத் தொடருக்காக இவர் பல பட வாய்ப்புகளை வேண்டாமெனக் கூறியிருந்துள்ளார். இது மேலும் இவர்க்கு மன கஷ்டத்தினை கொடுத்துள்ளது.

வேறு மொழிகளில் ரவுடி பேபி :

பொன் மகள் வந்தால் தொடரில் நடிக்கும் போதே இவருக்கு ஸ்டார் மா தொலை காட்சியில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.அத்தொடர் சாவித்ரம்மா கறி அப்பாயி(Savithramma Gari Abbayi) என்ற பெயரில் ஸ்டார் மா(STAR MAA) தொலை காட்சியில் ஒளிபரப்பட்டது.

மாயா :(SUN TV)

இவர் தமிழில் இரண்டவதாக மாயா என்ற தொடரில் நடித்திருந்தார் அத்தொடர் சன் தொலை காட்சியில் ஒளிபரப்ப பட்டது.

மாயா தொடரில் நடிக்க நடிகை குஷ்பு அவர்களின் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது.இவரும் உடனே அங்குச் சென்றுள்ளார். பின்னர் குஷ்பு அவர்களைச் சந்தித்துள்ளார்.

அவர் அப்பொழுது அவசரமாக வெளியில் சென்று கொண்டு இருந்துள்ளார் அதனால் இவரிடம் சரியாய் பேச முடியவில்லையாம். இத்தொடர் நான்கு மொழிகளில் ஒளிபரப்பட்டது.

இந்தக் கதையில் ஆயிஷாவிற்கு இரண்டு கதாபாத்திரமாகும். அதில் லட்சுமி பிரபாவதி யென்ற பெயரில் ஒரு கதாபாத்திரமாகவும், தர்ஷினி என்ற மற்றொரு கதாபாத்திரமாகவும் நடித்துள்ளார்.

தில்லுக்கு துட்டு 2:

இவர் சந்தானம் அவர்களின் மிகப் பெரிய ரசிகை ஆகும். ரெடி ஸ்டடி போ ஷோவ்வில் ஆயிஷாவிடம் தங்களுக்கு எந்த நடிகரை பிடிக்கும் எனக் கேட்டதற்கு சந்தானம் எனக் கூறியுள்ளார்.

பின்னர் தில்லுக்கு துட்டு 2 படத்தில் நடிக்க ஆடிஷனக்கு ஹைட்ரபாத் வர சொல்லி உள்ளனர். இவரும் ஆடிஷன்க்கு ஹைட்ரபாத் சென்று உள்ளார்.

இவர் தில்லுக்கு துட்டு படத்தில் தேர்வாகினர். அப்போது இவர் சந்தானம் அவர்களைப் பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருந்துள்ளார்.

ஆனால் இவருடைய விமானம் தாமதமாக போகவே சந்தானம் அவர்களைப் பார்க்க முடியவில்லையாம் இது இவருக்கு மிகவும் ஏமாற்றாமாக இருந்ததாம்.

சமூக வலை தளங்களில் வரவேற்பு :

இவருக்கு சமூக வலை தளங்களில் பல ரசிகர்கள் இருக்கின்றனர். இவரின் விடியோவை பார்த்தே பல விளம்பர படங்களில் நடிக வாய்ப்பு கிடைத்துள்ளது எனலாம்.

உதாரணமாக இவர் ஒரு சிறிய விளம்பர தொடர்களில் நடித்து முடித்தபிறகு இவர் அந்த இயக்குனரிடம் கேட்டாராம் “சார் நீங்க என்னுடைய சீரியலை பார்த்துத் தான் இந்த வாய்ப்பு குடுத்திர்களா என்று கேட்டுள்ளார்”. அதற்கு அவர் “இல்லை உங்க விடியோவ டிக்டாக்-ல பாத்தேன். அது நல்ல இருந்துச்சு அதனால உங்களைத் தேர்ந்து எடுத்தேன்” என்றாராம்.

சத்யா Sathya serial ayesha

ஜீ தமிழ்க்கு வேறொரு தொடருக்கான ஆடிஷனக்கு சென்றுள்ளார் நம்ம ஆயிஷா ஆனால் இயக்குனர் இவரைச் சத்யா தொடருக்கு தேர்ந்து எடுத்து உள்ளார்.

இத்தொடரில் ஆயிஷா ஒரு ஆண்(TOM BOY) போலத் தோற்றம் கொண்ட ஒரு பெண்ணாக நடிக்கிறார். இதில் ஆயுஷா சத்யவாகவும், விஷ்ணு பிரபுவாகவும் நடித்துள்ளனர்.

இத்தொடரில் இவர்களைச் செல்லமாக ஆயிஷாவை ( sathya serial ayesha ) ரவுடி பேபி எனவும் நம்ம விஷ்ணுவை அம்முள் பேபி எனவும் அழைகிறார்கள்.

ஆயிஷா மற்றும் விஸ்ணுவின் ஜோடி பொருத்தம் மிகவும் அருமையாக உள்ளது. நம்ம ஆயுஷாவின் நடிப்பும் அற்புதமாக இருக்கிறது.

சின்னத் திரை என்றாலே கதாநாயகி பார்ப்பதற்கு எப்போதும் ஒரு வித அலங்காரத்துடன் இருக்க வேண்டும்.ஆனால் இத்தொடரில் எந்த ஒரு அலங்காரமும் இல்லாமல் இவர் வருவது மிகவும் ரசிக படுகிறது மற்றும் மக்களால் வரவேற்க படுகிறது.

Sathya serial ayesha

ஒரு ஆண் பெண் வேடம் மிட்டு நடித்தால் அனைவராலும் ஏற்று கொள்ளப்படும்.ஆனால் ஒரு பெண் ஆண் வேடம் போட்டு நடித்தால் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே ரசிக்கப்படும்.

ஆனால் சின்னத்திரையில் ஒரு பெண் ஆண் போல நடந்து கொள்வதும் அந்தக் கதாபாத்திரம் வெற்றி பெறுவதும் இதுவே முதல் முறை ஆகும்.

காதலும் தோல்வியும் :

ஆயிஷா உதவி இயக்குனர் விக்கி என்பவரை காதலித்துள்ளார். இவரின் காதலர் தான் இவருக்கு அணைத்து விதத்திலும் துணையாய் இருந்துள்ளார். ஆனால் பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து விட்டனர்.

வருங்காலம் :

நம்ம சத்யாவுக்கு தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடிக வாய்ப்பு கிடைத்து உள்ளதாக கூறியுள்ளார்.

சத்யா தொடருக்கு பின்பு வெள்ளி திரையில் பணிபுரிய போவதாக கூறியுள்ளார்.
இவருக்கு வருங்காலத்தில் நயன்தாராவை போல வர வேண்டும் என்பது ஒரு கனவாக உள்ளது.

வாழ்வில் எத்தனை அவமானாகள் தோல்விகள் ஏற்பட்டாலும் கடுமையான முயற்சி இருந்தால் அவமங்களையும் அதை ஏற்படுத்தியவர்களையும் தலை குனிய செய்யலாம் அதற்கு சிறந்த உதாரணம் நம்ம ரவுடி பேபியின் வெற்றி .

5 thoughts on “சத்யா சீரியல் ஆயிஷா பற்றி பலரும் அறியாதவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube