மாஸ்டர் படம் மாளவிகா தனிப்பட்ட வாழ்கை!
master movie malavika life: தற்போது அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாக உள்ள ஒரே திரை படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் அவர்கள் நடிக்கும் மாஸ்டர் படம் தான்.
கொரோன காரணமாக 7 மாதங்கள் வரை இந்தப் படம் வெளிவராமல் இருந்தது இதனால் மக்கள் மற்றும் ரசிகர்களிடையேயானா எதிர்பார்பை மேலும் தூண்டியது எனலாம்.
தற்போது 2021 பொங்கலுக்கு திரையிடப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் பல முக்கிய கதாநாயகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இது மாஸ்டர் படத்திக்கான வரவேற்பினை மேலும் அதிகரித்துள்ளது.
தளபதி விஜய் அவர்களின் படம் என்றாலே தனி மவுசு தான் அதிலும் விஜய் சேதுபதி உடன் இணைகிறார் மேலும் அனிரூத் இசையில் இந்தப் பொங்கலுக்கு கலக்க வருகிறது மாஸ்டர் திரைப்படம்.
தற்போது மாஸ்டர் திரை படத்தில் கதாநாயகியாக வலம் வரும் கேரளா மற்றும் மும்பை கலவையான மாளவிகா மோஹனை பற்றிப் பார்க்கலாம் வாங்க.

தனிப்பட்ட வாழ்கை – master movie malavika life
மாளவிகா மோஹனன் 1992 ஆம் ஆண்டு கேரளாவில் கண்ணூர் என்ற இடத்தில் ஆகஸ்ட் 7ஆம் தேதி பிறந்துள்ளார். பின்னர் இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை மும்பையில் முடித்துள்ளார்.
இவர் தன்னுடைய பள்ளி படிப்பை மும்பையில் உள்ள தனியார் பள்ளியிலும், கல்லூரி படிப்பை மும்பையில் பிரபலமான கல்லூரியான வில்சன் காலேஜ்ஜில் மாஸ் மீடியா முடித்துள்ளார்.
மாளவிகாவின் தந்தை பெயர் K.U. மோஹனன் தாயர் பெயர் பீனு மோஹனன் மற்றும் இவருக்கு ஒரு தம்பி உண்டு அவர் பெயர் ஆதித்ய மோஹனன்.
மாளவிகா மோஹனன் அவர்களின் குடும்பம் கேரளாவில் தான் இருந்துள்ளது ஆனால் மாளவிகா அவர்களின் தந்தை கேரளாவில் மிகபெரிய ஒளிப்பதிவாளராக இருந்துள்ளார்.
பின்னர் இவருக்கு பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்கவே குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகி உள்ளார்.ஷாருகான் அவர்களின் பல திரை படத்திற்கு இவர் தான் ஒளிப்பதிவாளராக இருந்துள்ளார்.
மம்முட்டி அவர்களின் சந்திப்பு :
மாளவிகா மும்பையில் வசித்துக் கொண்டு இருக்கும்பொழுது மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி அவர்கள் இந்துலேகா விளம்பரத்திற்க்காக வந்துள்ளார்.

இந்த விளம்பர படத்திற்கு மாளவிகாவின் தந்தை தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். அப்போது இவரும் இவரின் அம்மாவும் மம்முட்டி அவர்களைப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மாளவிகாவின் தாயர் மிக பெரிய மம்முட்டி ரசிகராம் சிறுவயதில் இருந்தே மம்முட்டி அவர்களின் படங்களைப் பார்த்தே மாளவிகா வளந்துள்ளார். தனக்கு மொழி புரியவில்லை என்றாலும் மலையாள படங்களை ரசித்துப் பார்பராம் மாளவிகா.
பின்னர் அந்த ஷூட்டிங் மம்முட்டி அவர்கள் மாளவிகாவிடம் நடிக்க ஆசை இருக்கிறதா என்று கேட்டுள்ளார் அதற்கு மாளவிகா எதுவும் கூறவில்லையாம் இவருக்கு அதிர்ச்சி மட்டுமே ஏற்பட்டதாம்.
மாளவிகா 2013இல் இருந்து திரை உலகில் உள்ளார்.
இவருக்கு இவருடைய தந்தை போலவே ஒளிப்பதிவாளராக ஆக வேண்டும் இல்லை என்றால் இயக்குனர் ஆக வேண்டும் என்பது தான் ஆசையாம். ஆனால் நடிகர் மம்முட்டி இவரிடம் கேட்டதற்காக நடிக்க தொடங்கினாராம்.
இவர் திரை உலகில் மட்டுமில்லாது பேஷன் ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார். இது இல்லாமல் இவருக்கு போட்டோகிராபர்(PHOTOGRAPHER) துறையிலும் ஆர்வம் அதிகமாம்.
முதல் பட வாய்ப்புகள் :
பின்னர் சில மாதங்கள் கழித்து மீண்டும் மம்முட்டி அவர்களின் சிபாரிசு மூலம் இயக்குனர் அழகப்பன் இவரைத் தொடர்பு கொண்டுள்ளார்.
இயக்குனர் இவரிடம் நான் தங்களின் சில புகை படத்தை பார்க்க வேண்டும் என்றாராம். இவரும் தன்னுடைய புகை படத்தை அனுப்பி உள்ளார். பின்னர் இயக்குனர் நீங்கள் இந்தப் படத்திற்கு சரியாக உள்ளிர்கள் என்று கூறியுள்ளார்.
இவரும் தன் தாய் மொழியிலிருந்து வாய்ப்பு வருவதாலும் மம்முட்டி அவர்களே கூறியுள்ளதால் இந்தப் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம்.
பட்டம் போலே :
கிரிஷ் குமார் எழுத்தில் அழகப்பன் இயக்கத்தில் மலையாளத்தில் மாளவிகா அவர்களின் முதல் படம் வெளியானது. இந்தப் படம் இவருக்கு மிகவும் புதிய அனுபவத்தை தந்ததாம்.
கார்த்தி என்ற பெயரில் துல்கர்சல்மான் அவர்களும் ரியா என்ற பெயரில் மாளவிகாவும் நடித்து உள்ளனர்.
முதலில் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் பொழுது இவருக்கு மிகவும் பயமாக இருந்ததாம்.

முதல் நாள் ஷுட்டிங் துல்கர் சல்மானுடன் தான் இருந்துள்ளது இது இவருக்கு மேலும் பயத்தினை கொடுத்தது. பின்னர் படப்பிடிப்புகள் அனைத்தும் முடியும் பொழுது இருவரும் நல்ல நண்பர்களாகி விட்டனராம்.
இந்தப் படத்தில் தன் குணத்தை போல கதாபாத்திரம் அமைந்ததால் இவருக்கு சிரமம் இல்லாமல் இருந்ததாம். பின்னர் டைரக்டர் இவரைத் தன்னுடைய மகள் போல நடத்தியதாகவும் ஒரு நேர்காணலில் மாளவிக்கவே கூறியுள்ளார்.
நிர்ணயக்கம் :
V.K.பிரகாஷ் இயக்கத்தில் நிர்ணயக்கம் என்ற மலையாள படத்தில் 2015இல் சாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கன்னட படங்களில் மாளவிகா :
ப்ரீத்தம் குப்பி இயக்கத்தில் நானு மாட்டு வரலக்ஷ்மி (Naanu Mattu Varalakshmi) என்ற கன்னட படத்தில் வரலக்ஷ்மி என்ற பெயரில் நடித்து இருந்தார்.
பாலிவுட் பட வாய்ப்புகள்:
பியன்ட் தி கிளவுட்ஸ்(Beyond the Clouds)
மாளவிகா தன்னுடைய நண்பருடன் சேர்ந்து ஒரு ஹோட்டலுக்கு டின்னர் சென்று இருந்தாராம் அப்போது பாலிவூடில் பிரபல காஸ்ட் இயக்குனரான ஹனி ட்ரெஹன்(Honey Trehan) அவர்களிடமிருந்து ஒரு அழைப்பு வந்ததாம்.
இந்த அழைப்பை மாளவிகா சற்றும் எதிர் பார்க்கவில்லையாம். பின்னர் மாளவிகாவிடம் அந்த இயக்குனர் உங்களின் புகை படத்தை எனக்கு அனுப்புங்கள் என்றாராம்.
பின்னர் அவர் மாளவிகாவிடம் நாளை முதல் வேலையாக என்னை என் அலுவலகத்தில் வந்து பார்க்கும்மாறு கூறியுள்ளார்.இவரும் அந்த இயக்குனர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
பின்னர் அவர் இது மஜித் மஜிதி(MAJID MAJIDI) அவர்களின் படமாகும் உங்களுக்கு முக்கிய கதாபாத்திரம் உண்டு என்று கூறினாராம்.
இவர் அதைச் சற்றும் எதிர் பார்க்க வில்லையாம் தான் ஒரு பாலிவுட் படத்தில் அதும் ஈரான் நாட்டு இயக்குனரிடம் பணி செய்ய போவது இவருக்கு மேலும் மகிழ்ச்சியை தந்ததாம்.
மேலும் இந்தப் படத்தில் பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோனே(deepika padukone) மற்றும் கங்கணரணத்துட்(KANGANA RANAVATH) போன்றோர் தான் முதலில் தேர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பின்னர் இவருக்கு தான் இந்தக் கதை பொருத்தமாக இருந்துள்ளது அதனால் மாளவிகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழ் படங்களில் மாளவிகா மோஹனன்:
இவருடைய முதல் தமிழ் படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் எடுக்கப்பட்டது இவருடைய பியன்ட் தி கிளவுட்ஸ் படத்தை பார்த்து கார்த்திக் சுப்புராஜ் இவருக்கு பட படத்தில் நடிக்க அழைத்தாராம்.
பேட்ட :
பேட்ட படத்திற்காக இவருக்கு அழைப்பு வந்த பொது இவரால் நம்ப முடிய வில்லையாம்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சசிகுமார் அவர்களுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் மாளவிகா நடித்து இருந்தார்.மேலும் இந்தப் படத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா, சிம்ரன் போன்ற பெரிய நடிகர்கள் நடித்து இருந்தனர்.

பேட்ட படத்தில் இவருக்கு சிறிய வேடமாக இருந்தாலும் இவருக்கு மிகவும் பிடித்து இருந்ததாம் ஏனெனில் சிறு வேடமாக இருந்தாலும் படத்தில் இவரின் பங்கு மிக பெரியதாக இருந்ததாம்.
இவர் நடித்து முடித்தபிறகு ரஜினி அவர்கள் இவரைப் பாராட்டினாராம்.அது மேலும் இவருக்கு ஊக்கத்தினை தந்துள்ளது.
பேட்ட படப்பிடிப்பின் ஆரம்பத்தில் இவர் முதல் முறையாக ரஜினி அவர்களைச் சந்திக்க தன்னுடைய அம்மாவுடன் சென்றாராம். அப்போது ரஜினி அவர்கள் மிகவும் பணிவாக நடந்துள்ளார்.
இவ்வளவு பெரிய நடிகர் எந்த ஒரு பெருமையும் இல்லாமல் இவ்வாறு இருப்பது இவருக்கு மிகவும் ஆச்சிரியமாக இருந்துள்ளது. இதை ஒரு நேர்காணலில் மாளவிக்காவே தெரிவித்துள்ளார்.
பேட்ட படப்பிடிப்பின் இடைவேளை நேரத்தில் ரஜினி அவர்கள் தியானம் மற்றும் யோகாவை பற்றி அதிகமாக பேசுவாராம். இதிலிருந்து மாளவிகாவிற்கு தியானத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு உள்ளதாம்.
மாஸ்டர் :
மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் மாதமே வெளிவர இருந்தது ஆனால் கொரோன காரணமாக தற்போது வெளியாகிறது.
இந்த படத்தில் அந்தக் கண்ணா பார்த்தா என்ற பாடல் இடம்பெற்று உள்ளது அந்தப் பாடல் முதலில் இவருக்கென்று நினைத்தாராம் பின்னர் தான் அந்தப் பாடல் விஜய் அவர்களுக்கென்று தெரிந்ததாம்.
இவருக்கு முதல் நாளே பெரிய டயலாக் உள்ள சீன் நடிக்க சொன்னார்களாம் இவர் இயக்குனரிடம் முதல் நாளே இவ்வளவு பெரிய டயலாக் கொடுக்றீர்கள் என்றாராம்.
அதற்கு இயக்குனர் ஷூட்டிங் லொகேஷன் கிடைக்க மிகவும் சிரமம் அதனால் தான் என்று கூறியுள்ளார் பின்னர் மாளவிகாவும் நடித்துக் கொடுத்து உள்ளார்.
மாஸ்டர் படத்தில் விஜய் டிவி ரம்யா உடன் இவருக்கு நட்பு ஏற்பட்டதாம் இவர்கள் இருவரும் எப்போதும் பேசிக் கொண்டே இருப்பார்களாம். இருவருக்கும் இடையில் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் விஜய் அவர்களுடனும் இவருக்கு நல்ல நட்பு கிடைத்துள்ளதாம். இதனால் இவர் தன்னுடைய சமூக வலை தளங்களில் விஜய் அவர்களை 4AM FRIEND என குறிப்பிட்டு கூறியுள்ளார்.
தற்போது விஜய் சேதுபதி உடன் இணைந்து ஒரு வெப் சீரிஸ்யில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்போது இவர் நன்கு மொழி படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.மேலும் வரும் காலத்தில் பல படங்களை இயக்க வேண்டும் என்பது இவரின் ஆசையாம்.இவருக்கு தடகளம் என்றாலும் மிகவும் பிடிக்குமாம்.
cialis for sale online Brand Stanozolol Tadalafil Dapoxetine Tablets Composition 1 x 10 tablet Form Tablet Pack Size 1 x 10 tablet Packaging Type Box Manufacture By PCD Pharma Country of Origin Made in India
For best results, take it exactly 1-2 hours before sexual intercourse buying priligy online
Conditions that can contribute to ED include order cialis Gu Min picked up a wooden bench and went out, sat under the eaves, and said calmly, I can talk about anything else I don t know
A 2011 national survey of 1,000 men with ED conducted by Harris Interactive, sponsored by NABP and Pfizer, found that more than 4 in 5 men 82 percent believe it is difficult to determine if an online pharmacy is legitimate, yet more than 1 in 3 36 percent would consider purchasing ED medicines based on an online search generic cialis no prescription
Combining Clomid with IUI can be particularly helpful because it increases the number of eggs that are available for fertilization. buy clomiphene
natural alternatives to tamoxifen