சித்திரம் பேசுதடி தங்கமயில் பற்றி நாம் அறியாதவை!
chithiram pesuthadi serial thangam:
ஜீ தமிழில் திங்கள் முதல் சனி வரை மதியம் ஒளிபரப்பாகும் சீரியல் தான் சித்திரம் பேசுதடி. அந்த சீரியலில் வரும் கதைகளும் இதில் நடித்துள்ள தங்கமயில் பற்றியும் நாம் காண்போம்.
சித்திரம் பேசுதடி சீரியல் தங்கமயில் கதாபாத்திரத்தில் நடிக்கும் பெண்ணின் உண்மையான பெயர் தீபிகா ரங்கராஜ் . அவங்கள எல்லாரும் எளிமையா தீபிகா என்று அழைப்பார்கள்.
பிறந்த தேதி மற்றும் பெற்றோர்:
தீபிகா செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி 1995 பண்ருட்டியில் பிறந்தாங்க. இப்போ சென்னையில் வாழ்ந்து வராங்க . தீபிகாவின் அப்பா பெயர் ரங்கராஜ் அதனால அவங்க தீபிகா ரங்கராஜ் என அழைக்கிறார்கள்.

கல்வித்தகுதிகள்:
தீபிகா ரங்கராஜு தன்னோட பள்ளி படிப்பை பண்ருட்டியில் உள்ள எஸ்.ஏ.எஸ்.ஏ பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்துள்ளார்.
பிறகு செங்கல்பட்டில் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் தனது வருடங்களை முடித்துள்ளார். அவங்க கல்லூரி படிக்கும்போது சரளமாக பேசும் திறமை கொண்டவர்கள் இருந்துருக்காங்க.
திறமையும் வளர்ச்சியும்:
அதனால் கல்லூரிப் படிப்பை முடித்ததும் கேப்டன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து கொண்டிருந்தார்.
அதற்கு பிறகு மருத்துவ நேரம் என ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுத்து வழங்கி தொகுப்பாளராகவும் பணிபுரிந்தார்.
பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஆண்டாள் அழகர் சீரியலில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேலும் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் லட்சுமி கல்யாணம் என்னும் தொடரில் லட்சுமி என்னும் கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடிக்க தீபிகாவிற்கு வாய்ப்பு கிடைத்தது.

அதை நழுவ விடாமல் தனக்கு கிடைத்த எல்லா கதாபாத்திரங்களையும் தனது வாழ்க்கை படிக்கல்லாக மாற்றிக்கொண்டு தொடர்ந்து பயணித்து இந்தத் தொடரில் வெற்றி பெற்றார்.
சின்னத்திரை சீரியலில் நட்சத்திரமாக இருந்த தீபிகா வெள்ளித்திரையில் நிலவாக மாறினார்.
அவங்க வெள்ளித்திரையில் முதன்முதலாக நடித்த படம் ஆறடி ஆகும். இந்த படத்தில் தீபிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அவர் வெண்மேகம் என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
உலகத்திற்கு காரணமாக இருந்த அன்னைக்கு உலகை பார்க்க தடையாம் பெண்ணாக பிறந்ததினால் நிலவின் ஒளி போல் என்றும்
அழகாக கசியும் வார்த்தைகள் பேச தடை விகித உரிமைகளை விதித்தாலும் எங்கள் பெண்களின் விகிதம் வீட்டின் வாசல்படி தண்டவில்லையே மங்கிப்போன உரிமைகள் அடுப்பூதி மேலும் மங்கிப் போனது அடிமை என்ற வார்த்தைக்கு முழு இலக்கணமாய் நான்கு சுவற்றுக்குள் முடிந்தது எங்கள் பெண்களின் வாழ்க்கை.
இவ்வாறு பெண்களின் வாழ்க்கை இருந்த காலத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு பெண்ணாக இப்போது திகழ்கிறார் தீபிகா ரங்கராஜ். மேலும் பல சாதனைகள் செய்து வாழ்க்கையில் முன்னேறுவர்.
சித்திரம் பேசுதடி சீரியலின் கதை சுருக்கம்:
சித்திரம் பேசுதடி சீரியல் முதன் முதலில் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வெளியானது . இந்த சீரியலின் கதை ஒரு பெண்ணின் கனவை கொண்டு நடக்கும் கதையாகும்.
இது ஒரு கிராமத்து கதை ஆகும் . அதில் நடிக்கும் கதாபாத்திரம் பாபூஸ் பாபுராஜ் தங்கமயில் அப்பாவாக குருமூர்த்தி என்னும் பெயரில் நடித்துள்ளார் .குருமூர்த்திக்கு கோமதிக்கும் பிறந்த மகள்கள் மூன்று மலர், கயல் மற்றும் தங்கமயில் ஆகும். ராஜசேகர் மற்றும் பவானிக்கு பிறந்த இரண்டாம் மகன் ஜீவா ஆவார்.

தீபிகா ரங்கராஜு நடிக்கும் இத்தொடரில் தங்கமயில் அப்பாவிற்கு ஆண் குழந்தையின் மீது தான் பிரியம். பெண் பிள்ளைகள் பிடிக்காது.
ஆனால் விதியின் விளையாட்டு அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் இதனால் கோபம் கொண்ட குருமூர்த்தி தனது மனைவியான கோமதியுடன் கோபம் கொண்டு அவர்களை விட்டு பிரிந்து சென்றார்.
கணவனை இழந்த கோமதி தனது மகளை போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்று ஆசை கொண்டாள்.
அதே போல் தகப்பனை இழந்த பெண் குழந்தைகளின் இளையவனான தங்கமயிலுவிற்கு போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவு வந்தது.
எந்த பெண் பிள்ளை வேண்டாம் என விட்டு சென்றாரோ அந்த பெண் பிள்ளைக்கு அவர் மரியாதை செய்யும் அளவிற்கு பெரிய போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற கனவுடன் தங்கமயில் இருப்பாள்.
ஆனால் தங்கமயில் ஒரு போலீஸ் கான்ஸ்டாப்பில் ஆகத்தான் ஆவாள்.
அப்போது அவளுக்கு நிறைய பிரச்சனைகள் வரும் அதை அவள் எவ்வாறு கடந்து வருகிறாள் அவள் பெரிய அதிகாரியாக வருவாளா என்று அமைய பெறுவதுதான் இக்கதையாகும். வலிகளுக்குள்ளேயும் வழியைத் தேடி வாழ்பவள் தான் பெண்.
ஆணும் பெண்ணும் சமம்:
பெண்ணே எழு படித்தண்டு கூந்தல் நறுக்கு பூ வெறு பொட்டு அலி தாலி அறு மனமறிந்து மணம்புரி நீ விரும்பினால் பெறு தகாத மனமெனில் முறி தடை மரபை உடை அடிமை என்றால் அடி கேட்டால் சொல் நீயும் நானும் ஒன்றென்று.

அந்த காலத்திலிருந்து இப்போது இருக்கும் காலகட்டம் வரைக்கும் பெண்கள் போராடி வெல்வது ஆணும் பெண்ணும் சமம் என்னும் உரிமையைத் தான்.
அதை நிலைநாட்ட பல பெண்கள் நிறைய சாதனைகளை செய்து கொண்டு தான் உள்ளார்கள். மேலும் பல சாதனைகள் செய்து பெண்களின் பெருமையை நிலைநாட்டுவோம்
Enter your ZIP Code buy cialis 5mg online
priligy premature ejaculation pills This is not a complete list of side effects and other serious side effects or health problems may occur as a result of the use of this drug
So, you want to get ripped, and you want to pack on the muscles fast cialis 40 mg
Normal is 35 or less cialis tablets for sale Ndp s sharp buttons during the cheapest cialis many 36 goods
clomiphene citrate. clomid for males
00635 dyn cm 2, and a rotation speed of 100 rpm 1 brand name cialis online