Serial

ரோஜா சீரியல் வீ ஜே அக்ஷயா பற்றி பலரும் அறியாதவை! | Tamilfy news

சன் டிவியில் ஒளிபரப்பட்டு வரும் சீரியல் தான் ரோஜா. பெரும்பாலும் சன் டிவி சீரியல்ககளுக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்கனு சொல்லலாம். அதில் வரும் நடிகர் நடிகைகளும் மிகவும்
பிரபலமாகிட்டு வராங்க. அதிலும் ரோஜா சீரியல் சொல்லவே தேவை இல்லை அந்த அளவுக்கு இந்த சீரியலுக்கு ரசிகர்கள் ஒரு கூட்டமே இருக்கும். இப்போ இந்த சீரியல் மற்றும் இந்த சீரியலில் நடிக்கவிருக்கும் புது அனுவை பற்றியும் பாக்கலாம்.

வீ.ஜே அக்க்ஷயாவின் பிறப்பு:

வீ.ஜே அக்க்ஷயா, இந்தியாவில் தொலைக்காட்சி நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருக்காங்க. பெரும்பாலும் இவங்க தமிழ் தொலைக்காட்சில் தான் வேலை செய்து வராங்க. வீ.ஜே அக்க்ஷயா 18 பிப்ரவரி 1994 அன்று தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்புத்தூரில் பிறந்து அங்கேயே வளந்தாங்க. இவங்களுடைய தற்போதைய வயது 28 ஆகும்.

அக்க்ஷயா, தன்னோட பள்ளிப்படிப்பை கோயம்புத்தூரில் முடித்து, பின்னர் கோயம்புத்தூரில் உள்ள பிஎஸ்ஜி காலெஜில் தனது பி.ஏ இலக்கியத்தில் பட்டம் பெற்றாங்க, அதற்கு பின் இவங்க சென்னை மகளிர் கிறிஸ்துவ காலெஜியில் மாஸ் கம்யூனிகேஷனில் எம்.ஏவும் படித்து பட்டம் பெற்றாங்க.

சன் ம்யூசிக்கில் வீ.ஜே அக்க்ஷயா:

மியூசிக் சேனல் அப்படினாவே எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். பெரும்பாலும் மியூசிக் பிடிக்காதவங்களே இருக்க முடியாது. இந்த அளவிற்கு நமக்குள்ள இருக்க ம்யூஸிக்கு நிறைய சேனல்கள்போட்டி போட்டுட்டு இருக்காங்கனு சொல்லலாம். மியூசிக் சேனல்கள் நிறைய இருந்தாலும் சன் டிவி நிறுவனத்தின் மியூசிக் சேனலான சன் மியூசிக் ரொம்பவே பிரபலமானதுனு சொல்லலாம்.

இந்த சேனலில் தொகுப்பாளராக பணிபுரிந்த நிறைய பேர் இன்று பெரியளவு வெற்றியை சந்திச்சி இருக்காங்க. இவங்க மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து ஒரு ரசிகர் கூட்டத்தையே வச்சிட்டு இருக்காங்க. அந்த வரிசையில் அஞ்சனா, மணிமேகலை, தியா, சங்கீதா, ரியோ போன்றவங்க சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் பெரிய அளவு வெற்றியை அடைஞ்சிருக்காங்க.

இந்த வரிசையில் வீ.ஜே அக்க்ஷயாவும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்காங்கனு சொல்லலாம். வீ.ஜே அக்க்ஷயா சன் ம்யூசிக்கில் ஹிட் லிஸ்ட், செம மார்னிங், நோ ப்ராப்லெம் என சில ஷோக்களில் ஆங்கராக இருந்தாங்க. இவங்களுடைய ஷோவ்விற்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பாத்துட்டு இருப்பாங்க. அந்த அளவிற்கு பேமஸ் ஆனாங்க.

வீ.ஜே அக்க்ஷயாவின் திருமண வாழ்க்கை:

வீ.ஜே அக்க்ஷயா தொடர்ந்து பல வெற்றிகளை சந்தித்த நிலையில் இவங்க திருமணமும் செய்து கொண்டாங்க. வீ.ஜே அக்க்ஷயா நியன்தான் மணிசேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டாங்க என்று நமக்கு தெரியும். இவங்களுடைய திருமண வாழ்க்கை நல்லாவே போய்ட்டு இருக்கு.

வீ.ஜே அக்க்ஷயாவின் சீரியல் பயணம்:

அக்க்ஷயா, நம்ம சன் டிவியில் வணக்கம் தமிழை என நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தாங்க. இந்த வகையில் அக்க்ஷயாவை வீ.ஜே மற்றும் தொகுப்பாளராக பார்த்த நாம் தற்போது இவங்களை ரோஜா சீரியலில் நடிகையாகவும் பார்க்க போகிறோம். அதாவது ரோஜா சீரியலில் இவங்க ஒரு புது அவதாரத்தை எடுத்துருக்காங்க.

ரோஜா சீரியலில் ஷாமிலி சுகுமார் நடித்திருந்த அனு என்ற கதாபாத்திரத்தில் தற்போது வீ.ஜே அக்க்ஷயா நடிக்க இருக்கிறார். அனு வேடத்தில் நடித்திருந்த அக்க்ஷயாவின் அத்தியாயங்கள்விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த கதாபாத்திரத்தை நான் சிறப்பாக நிரப்ப ரசிகர்களான உங்கள் அன்பு தேவை எனவும் பதிவிட்டு இருக்காங்க.

ரோஜா சீரியலில் ஆணு கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் அக்க்ஷயா பல ரசிகர்களை பெற்றிருக்காங்க. இந்த சீரியலிலும் அக்க்ஷயா நன்றாக நடித்து ரசிகர்களின் மனதை வெல்வாங்க என நம்ப படுகிறதுனு சொல்லலாம்.

ரோஜா சீரியல்:

ரோஜா ஒரு தமிழ் சீரியல் இது சன் டிவியில் ஒளிபரப்படுகிறது. இதில் பிரியங்கா நிகாரி, சிபு சூரியன், ஷாமிலி போன்றோர் நடித்து வராங்க. இந்த சீரியல் சன் டிவியில் 9 ஏப்ரல் 2018 அன்று தொடங்கப்பட்டது. இந்த சீரியலை வசுபராதி, செல்வம் சுப்பையா, குரு சம்பத் ஆகியோர் எழுதிருக்காங்க. இந்த தொடர் ஒரு அனாதை இல்லத்தில் வளர்ந்த ஒரு பெண்ணை தொடர்ந்து வருகின்றது.

கதாநாயகனாக அர்ஜுன், மிக பணிவானவர். இவர் ஒரு முன்னணி வழக்கறிஞ்சர். ரோஜா ஒரு வழக்கறிஞ்சரை தேடும் சூழ்நிலை உருவானது. பிறகு பல்வேறு காரணங்களால் அர்ஜுன்
மற்றும் ரோஜாவிற்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு அனுவால் ரோஜாவிற்கும் அவள் குடும்பத்திற்கும் நிறைய சர்ச்சைகள் மற்றும் பல்வேறு கஷ்டங்களை எதிர்த்திருப்பாங்க.

பிறகு அனு என்ற கதாபாத்திரத்தால் நிறைய பிரச்சனைகள் வரும், இந்த பிரச்சனையை ரோஜாவும், அர்ஜுனும் இணைந்து வெல்வதே இந்த கதை. இந்த நாடகத்திற்காக நிறைய விருதுகளையும் வாங்கி இருக்காங்க. சன் குடும்ப விருதுகளில் சிறந்த நாயகி, பிரபலமான ஹீரோ, பிரபலமான வில்லி, பிரபலமான ஜோடி , பிரபலமான சீரியல் என பல்வேறு விருதுகளை 2019 ஆம் ஆண்டு வாங்கிருக்காங்க.

இவங்களுடைய வெற்றியை, இவங்க வாங்கி இருக்கும் விருதுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த நாடகம் பார்ப்பவர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைகிறது. விறுவிறுப்பான கதைக்களத்தோடு நகரும் இந்த தொடரில் ஷாமிலி நடித்த அனு வேடத்தில் நடிக்கவிருக்கும் வீ.ஜே அகக்ஷயாவின் நடிப்பை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கிறாங்கனு சொல்லலாம்.

yogeshwarii

View Comments

  • Jaliman talks about the causes of mask acne and what you can do treat prevent them buy cialis online usa It affects their sexual life because they have to take the pills in order to hide their delicate problem

  • As a result, you can get and maintain a hard penile erection cheap cialis I used to buy cheap Generic Cialis too Best service, price, experience

  • clomid medication A possible increase in the risk of trisomy defects and Down s Syndrome has been suggested, but the reported observations are too few to confirm or not confirm this hypothesis that would justify the need for systemic amniocentesis a part from the other factors such as advanced age or family history.

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

2 months ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

5 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

5 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

5 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

6 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

6 months ago