Cinema

ஸ்டண்ட் மேன் விவேக் 28 வயதில் மரணம்!!!

தமிழ் சினிமா ல மட்டும் இல்ல ஒட்டுமொத்த திரையுலக வரலாற்றிலேயே படத்துக்கு அழகு சேர்ப்பது சண்டை காட்சிகள் தான்… நிறைய பேருக்கு சண்டைக்காட்சிகள் பிடிக்க வில்லை என்றாலும்
பல பேருக்கு சண்டை காட்சிகள் பார்ப்பது ஆர்வம் அதிகமா உள்ளது.. ஒரு படத்துல சண்டைக்காட்சிகள் ல நடிக்கறது ரொம்பவே கஷ்டமான விசியம் தான்.. ஆனால் இதை ஸ்டண்ட் மேன் ரொம்பவே நன்றாகவும்
பொறுமையாகவும் பண்ணுவாங்க… அதாவது ஒரு படத்தோட தூண்கள் அப்டினா அது ஸ்டண்ட் மேன் ஐ சொல்லலாம்… இவர்கள் தங்களோட உயிரை பணியவச்சி நிறைய சண்டை காட்சிகள் நடிச்சி இருக்காங்க..
இவிங்க இப்டி உயிரை பணையம் வச்சி நடிக்கறதுனால தான் படத்தின் ஹீரோ மக்கள் கிட்ட இருந்து பாராட்ட வாங்கிட்டு போயிடறாங்க..

தற்போது ஒரு தகவல் சமூக ஊடகங்களில் அதிகமாக பரவி வருகிறது… அது என்ன என்றால் கர்நாடகாவில் நடந்த ஒரு படத்தின் ஷூட்டிங் யில் ஸ்டண்ட் மேன் ஒருத்தர் இறந்து விட்டதாக தகவல்
வெளியாகி உள்ளது.. அதாவது கர்நாடகாவின் பெத்தாடியில் கன்னட திரைப்படமான ஐ லவ் யூ ரச்சு படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டு இருந்த போது திங்கட்கிழமை ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட் மேன்
ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வந்துள்ளது.. சண்டை காட்சியை படமாக்க அவர்கள் உலோக கயிறு மற்றும் கிரேன்களைப் பயன்படுத்தும்போது விவேக் உயர் அழுத்த கம்பியுடன் தொடர்பு கொண்டு அந்த இடத்திலேயே மின்சாரம் பாய்ந்தார் என்றும் கூறி உள்ளனர். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிட தக்கது…

அதுமட்டும் இல்லாமல் இவர் ஒரு இளைஞர் இவருக்கு 28 வயது தான் ஆகிறது.. இவர் பெயர் விவேக் என்று தகவல் வெளியாகி உள்ளது.. ஸ்டண்ட் படப்பிடிப்பின் போது மின்சாரம் தாக்கி விவேக் உயிரிழந்து உள்ளார் என்றும்
இறந்தார் என்றும் படக்குழு தெரிவித்து உள்ளது… அது மட்டும் இல்லாமல் இன்னொரு ஸ்டண்ட் பயிற்சியாளர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான் என்றும் கூறியுள்ளனர்..
இப்போது இறப்பிருக்கு என்ன சரியான காரணம் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.. இதில் தயாரிப்பு குழு அலட்சியமாக இருந்ததால் தான் இப்படி ஒரு விபத்து ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் என்றும் சிலர்
கூறுகின்றனர்..
சில மாதங்களுக்கு முன்பு கமல்ஹாசன் நடிப்பில் தமிழ் இயக்குநர் ஷங்கரின் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஒரு பெரிய கிரேன் விழுந்து மூன்று குழு உறுப்பினர்கள் உயிரிழந்தனர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, இந்த ஸ்டண்ட் ஒரு தனியார் ரிசார்ட்டுக்கு அருகில் படமாக்கப்பட்டது.

8000 பேரை ப்ளாக் செய்த நேஹா மேனன்!! நடந்தது என்ன??

தற்போது விஜய் டிவியில் நிறைய சீரியல் பிரபலம் ஆகிட்டு இருக்கு என்றே சொல்லலாம். அந்த வரிசையில் உள்ள சீரியலில் ஒன்று பாக்கிய லட்சுமி என்றே சொல்லலாம். இந்த சீரியல் தற்போது அனைவராலும்
விரும்பப்பட்ற சீரியல் என்றே சொல்லலாம். ஒரு குடும்ப பெண்ணிற்கு வர கஷ்டங்கள் பற்றி சொல்ல கூடிய கதையா இருக்கு என்றே சொல்லலாம்.

இந்த சீரியலில் வர இனியா பாக்கிய லட்சுமி உடைய மகளாக நடிச்சு இருக்காங்க.. இந்த கதையில் நடிக்கிர இனியா ரொம்பவே பிரபலம் ஆனவங்க என்றே சொல்லலாம். இவங்களுக்கு
சோசியல் மீடியாவில் நிறைய ரசிகர்கள் இருக்காங்க.

இன்ஸ்டாகிராமில் இவர்களுடைய போஸ்ட்க்கு நிறைய பேர் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களை குவிச்சுட்டு இருகாங்க என்றே சொல்லலாம். இவர்களுடைய சில tiktok இன்ஸ்டாவில் பேமெஸாக இருக்கு என்றே சொல்லலாம்.
இவங்களை பற்றி தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கு. அது என்னானு பார்த்தா இவங்க இதுவரை 8000 அக்கவுண்ட்களை இன்ஸ்டாகிராமில் ப்ளாக் பண்ணி இருக்கறதா தகவல் வெளியாகி இருக்கு.
இந்த நியூஸை இவங்களே வெளியிட்டு இருக்காங்க..

நேஹா மேனன் நடிகை ராதிகா சரத்குமாரின் வாணி ராணி, சித்தி 2 மற்றும் பாக்கிய லட்சுமி சீரியலில் நடிச்சு இருக்காங்க. நேஹா ரசிகர்களுக்கு பரிச்சியம் ஆனவர் என்றே சொல்லலாம்.
இந்த நிலையில் இவங்க தற்போது வெயிட் அதிகமான காரணத்தினால் நிறைய கேலிகள் வந்து இருக்கு அதை எப்படி தாண்டி வந்தாங்க என்பதை சொல்லி இருக்காங்க. இவர்களுடைய உருவ கேலியை
பற்றி சொன்னவர்களை இவங்க எப்படி தாண்டி வந்தாங்க என்று சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்காங்க.

அதில் இவங்க நான் chubby மற்றும் குள்ளமாக இருப்பேன் என்று சொல்லி இருகாங்க. இவங்களுக்கு சில நேரத்தில் நடிக்கும் போது என்னடா இவ்ளோ குண்டா இருக்கோம் என்று தோன்றி இருக்கு என்று யோசிச்சு
இருக்காங்களாம். அதுக்கு வழி தேடிய இவங்க உடுத்தற ஆடைகள் மூலம் இவங்க வெயிட்டை மறைக்களானு நினைச்சு, ஒரு நல்ல டிசைனர் சந்திச்சு இரண்டு விஷயங்களை கத்துக்கிட்டு
அதை உங்கக்கூட ஷேர் பண்றேன் என்று சொல்லி வீடியோ வெளியிட்டு இருக்காங்க.

நேஹா இவங்களை மாதிரி இருக்கறவங்களுக்கு நீளமான கோடு போட்ட உடைகளை போட சொல்லி தெரிவிச்சு இருக்காங்க. இப்படி பண்ணா உடல் எடை குறைவாகவும் உயரமாகவும் தெரிவீங்க
என்று சொல்லி இருக்காங்க. அது மட்டும் இல்லாமல் ஃபுல் ஸ்லீவ் வைத்து மட்டும் உடைகள் உடுத்துவேன் என்று சொல்லி இருக்காங்க. இதைத்தான் இவங்க இப்பவும் follow பண்றதா சொல்லி இருக்காங்க.

நேஹா இன்ஸ்டாகிராம் யூஸ் பண்ணதுக்கு அப்பறம் தான் உருவ கேலி என்று ஒரு விஷயம் இருக்கறதா எனக்கு தெரியும் என்று சொல்லி இருக்காங்க. நிறைய வேதனை கொடுக்கும் கமெண்ட்ஸ்களை பார்த்து
இருப்பதாகவும், அந்த வேதனைகளை அம்மா கிட்ட மட்டும் சொல்வதாகவும் சொல்லி இருக்காங்க. அந்த நேரத்தில் இவங்க அம்மா தான் இவங்களுக்கு உறுதுணையாக இருந்து இருக்காங்க.
இவங்க எதாவது நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை பார்த்ததால் அந்த அக்கவுண்ட்டை ப்ளாக் பண்ணிடுவாங்க என்று தெரிவிச்சு இருக்காங்க.. அந்த மாதிரி இவங்க இது வரைக்கும் 8000 அக்கவுண்ட்களை
ப்ளாக் பண்ணி இருக்கறதா சொல்லி இருக்காங்க.

இந்த கஷ்டத்தில் இருந்து மீண்டு வர இவங்களுக்கு ஒரு வருடம் ஆனது என்று சொல்லி இருக்காங்க. அதுக்கு அப்பறம் இவங்க முதலில் நம் மேல் நாம் அன்பு காட்ட வேண்டும் என்பதை புரிஞ்சு
கிட்டதா சொல்லி இருக்காங்க.

yogeshwarii

View Comments

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

2 months ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

5 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

5 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

5 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

6 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

6 months ago