Cinema

Comedy Actor Senthil Son, Age, Family, Wife, Sister, Health, Height, Native Place, Dob, Salary, Wiki, Biography, Real Name, Photos, Images

Comedy Actor Senthil Son, Age, Family, Wife, Sister, Health, Height, Native Place, Dob, Salary, Wiki, Biography, Real Name, Photos, Images

தமிழ் சினிமாவில் தனது குழந்தை தனமான நடிப்பின் மூலம் பல லட்சம் ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளவர் தான் செந்தில்.

இவரை பற்றி நமக்கு தெரியாத பல இன்டெரெஸ்ட்டிங் ஆன தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

தமிழ் திரையுலகில் கவுண்டமணி அவர்களுக்கு எப்படி அழிக்க முடியாத இடம் இருக்கிறதோ அதேமாதிரி செந்தில் எனும் மாபெரும் கலைஞருக்கும் அதே மதிப்பு உண்டு என்பதை மறுக்க முடியாது.

இவர் ராமநாதபுரமில் மார்ச்  23 ல் 1953 ஆண்டு பிறந்தார். ராமநாதபுரத்தில் இளஞ்சம்பூர் ( Ilanjambore ) என்கிற கிராமம் தான் இவரின் ஊர்.

திரைப்பயணம்:

“ஒரு கோவில் இரு தீபங்கள்” என்ற படம் தான் செந்தில் நடித்த முதலாவது திரைப்படம் ஆகும்.

இப்படத்தில் கூட்டத்தில் ஒருவராக நடித்திருந்தார். பின், பசி” என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில்  செல்லமாவின் சகோதரனாக நடித்தார்.

மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு படங்களுமே1979-ல்  வெளியானது குறிப்பிடத்தக்கது.

மலையாள படம்:

இதிக்கர பக்கி ( ithikkara pakki ) என்ற மலையாள படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார்

பின் சிறுசிறு வேடங்களில் பல படவாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

1981 ல் மட்டும் கிட்டத்தட்ட ஐந்து முதல் ஆறு படங்கள் வரை நடித்தார்.

பயனில்லை:

இவர் ஆரம்பத்தில் நடித்த 10 படங்களும் இவருக்கு திரை உலகில் எந்த ஒரு அடையாளத்தையும் குடுக்கவே இல்லை.  அந்த காலகட்டத்தில் அப்படத்திகாக இவர் பெற்ற சம்பளமும் மிக குறைவுதான்.

senthil age is 70
comedy actor senthil

1984-ல் செந்தில்:

வைதேகி காத்திருந்தாள் படமானது 1984 ல் வெளிவந்து மிக பெரிய வெற்றி அடைந்தது. அதில் இவர் ( senthil ) நடித்ததால் மக்களால் ஓரளவு அறியப்பட்டார்.

பின், அதே வருடம் வெளியான ஜனவரி 1 மற்றும் ராஜாதி ராஜகிலி படத்தில் “பட்ட சொம்பு” ரோலில் நடித்தார்.

மேலும், உரிமை, கன்னி ராசி, மற்றும் கீதாஞ்சலி போன்ற  30 க்கும் மேற்பட்ட படங்களில் ஒரே ஆண்டில் ( 1985 ) நடித்தார் என்பது குறப்பிடத்தக்கதாகும்.

முக்கிய படங்கள்:

பின்பு நிறைய படவாய்ப்புகள் வந்தன. அதில் செந்தில் அவர்கள்  நடித்து காமெடியில் கலைக்கட்டிய படங்களின் தொகுப்பை கீழே பார்ப் போம்.

  • அம்மன் கோயில் திருவிழா
  • நல்ல காலம் பொறந்தாச்சு
  • சாத்தான் சொல்லை தட்டாதே
  • சேரன் பாண்டியன்
  • செந்தூர தேவி
  • நாட்டாமை
  • ஜென்டில் மேன்
  • இந்தியன்
  • கரகாட்டக்காரன்
  • நாட்டுப்புற பாட்டு
  • எஜமான்
  • அவள் வருவாளா
  • உள்ளதை அள்ளித்தா
  • வைதேகி காத்திருந்தாள்
  • பாபா
  • இதய கோவில்
  • ஜெய் ஹிந்த்
  • ரசிகன்
  • பரம்பரை
  • வேதம்
  • என் ராசாவின் மனசிலே
  • கோயம்புதூர் மாப்பிளை
  • கண்ணன் வருவான்
  • ஊரு விட்டு ஊரு வந்து

மேலே குறிப்பிட்ட படங்கள் ஒரு சிலது தான் இது இல்லாமல் நூற்றுக்கணக்கான படங்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பிடித்த நடிகை:

இவருக்கு பிடித்த பழைய நடிகைகள் என்றால் அதில் பத்மினி மற்றும் ராகினி போன்ற நடிகைகளை சொல்லலாம். ப்ளாக் அண்ட் வைட் ( black & white ) படத்திலேயே மிக அழகாக இருந்தார்கள் என்று சொல்கிறார்.

சரி  இன்றைய  காலகட்டத்தில் இவருக்கு பிடித்த நடிகை  யார் என்றால்,  அதுக்கு நயன்தாரா தானாம். “அறம்”  போன்ற நயந்தாரா நடித்த பல படங்களை செந்தில் விரும்பி  பாத்துள்ளார்.

கவுண்டமணி:

செந்தில் கவுண்டமணி காமெடி காட்சிகள் தமிழ் வரலாற்றில் மிக முக்கியமானவை 20 – 30 வருடங்களுக்கு முன்  இவர்கள் நடித்த காமெடி காட்சிகளை தற்போது பார்த்தாலும் சிரிப்பு நிச்சயம். ( senthil age is 70 years )

senthil with thala ajith

இப்படி இருக்கையில், கவுண்டமணி பற்றி  செந்தில்  சொல்வது என்னவென்றால்   “அவர் பெரிய நடிகர் timing sense ரொம்ப அதிகம்” அவங்க timing ஐ நம்ம follow  பண்றது கொஞ்சம் கடினம்.

ஆனால், legend அவங்க திறமைமிக்க நடிகர்கள் அதனால் தான் அவ்வளவு தூரம்  பயணிக்க முடிந்தது.

ரஜினிகாந்த்:

இதே திறமை சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்திடமும் உள்ளது. அதனால் தான் வெகு வருடங்கள்  பயணிக்க முடிகிறது என்கிறார்.

அரசியல்:

ரஜினி மற்றும் கமல் போன்ற பெரிய நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்கள் “விருப்பம் “ அதை நாம் ஒன்றும்  சொல்ல கூடாது என்கிறார்.

( சில மாதங்களுக்கு முன்பு தான் ரஜினிகாந்த் அவர்கள்  தான்  உடல் நிலையை சுட்டிக்காட்டி அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று அறிவித்தார் )

Comedy Actor Senthil Son, Age, Family, Wife, Sister, Health, Height, Native Place, Dob, Salary, Wiki, Biography, Real Name, Photos, Images

ஷங்கர்:

இயக்குனர் ஷங்கர் படத்தை மிக  அழகாக எடுக்கக்கூடியவர்  ஜென்டில் மேன் முதல் பாய்ஸ் வரை இவர் ஷங்கர் படத்தில் நடித்துள்ளார்.

காமெடி காட்சிகள் எல்லாம் மிக நன்றாக எடுக்க கூடியவர் சங்கர் என்கிறார்.

கரகாட்டக்காரன்:

1989 ல்  வந்து மிகப்பெரிய வெற்றி அடைந்த படம் தான் கரகாட்டக்காரன். இந்த படத்தில் நடித்தது பற்றி கூறுவது “கரகாட்டக்காரன் படத்தை  நினைத்தாலே முதலில் கங்கை அமரன் தான் நினைவுக்கு வருவார்“.

காரணம், அப்படத்துக்காக ரொம்ப கஷ்டப்பட்டார் அவர். அந்த டைமில் ஒரு வருடம் ஓடிய படங்களில் இதும் மிக முக்கியமான படம்.

அப்போது உச்சத்தில் இருந்த நடிகர்களும் கூட இப்படம் எப்படி இவ்ளோ பெரிய வெற்றி அடைந்தது என்று ஆச்சர்யமாக பார்த்தார்கள் என்று சொல்கிறார்.

senthil reaction

படத்திற்கு காமெடி  எப்படி பலமோ அதே அளவுக்கு  இளையராஜாவின்  பாட்டும் மிக பெரிய பக்க பலம் அதை  மறுக்க முடியாது என்கிறார்.

இளையராஜா:

செந்திலுக்கு இளைய ராஜாவின் பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும் “அப்பாவும் இப்பவும் எப்பவும்  இசையில் ராஜா இளையராஜா மட்டும் தான்” என்று அடித்து சொல்கிறார்.

தானா சேர்ந்த கூட்டம் :

சூர்யாவின் நடிப்பில் வெளியான “தானா சேர்ந்த கூட்டம்” படத்தில் முக்கிய வேடத்தில் செந்தில்  நடித்திருந்தார்.  அப்போது சூர்யா தம்பி ( surya ) எதுவுமே சொல்லாமல் என் பிறந்தநாளுக்கு வாழைப்பழம் வடியவில் கேக் வாங்கி  சர்ப்ரைஸ் கொடுத்து விட்டார்.

அது தனக்கு சற்றும் எதிர்பாரா ஆச்சர்யமாக இருந்தது.

நடிப்பு ஆசை:

இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை வர காரணம் MGR , சிவாஜி , மற்றும் நாகேஷ் போன்ற நடிகர்களின் படங்களை பார்த்து உத்வேகம் அடைந்துஎன்ற ள்ளார்.

பின்னர்  தான் நாம்மளும் தமிழ் திரையுலகில் கால்பதிக்க வேண்டும் என  ஆசை வந்துள்ளது.

அம்மாவின் பாராட்டு:

பூவுக்குள் பூகம்பம் என்ற படத்தில்  இவர் மாலை கண் நோயால் பாதிக்கப்பட்டவராக நடித்திருப்பார். அதில் இவரின் நடிப்பை பார்த்து முன்னாள் முதல்வர் ஜெயலிதா அவர்கள் பாராட்டி உள்ளாராம்.

அவரும் காமெடி காட்சிகளை விரும்பி பார்ப்பாராம், முதல் மாநாட்டுக்கு  செந்திலை அம்மா அழைத்திருந்தார். அப்போது தான் பூவுக்குள் பூகம்பம் படத்தில் வந்த காமெடியக்காக இவரை பாராட்டி உள்ளார்.

ரசிகரின் அன்பு:

இவர் வெளி விழாவில் கலந்துகொள்ள போகும் போது சூழ்ந்த ரசிகர்கள் இவரின் தோற்பட்டையை அமுக்கி  இவரை நெருக்கி புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.

அதை தொல்லை என்று நாம் சொல்லக்கூடாது “அளவுகடந்த அன்பின் வெளிப்பாடுதான் அது” என்று சிரித்த முகத்துடன் சொல்கிறார்.

முதல்  dubsmash:

தற்போது tiktok  மற்றும் dubsmash போன்ற விசயங்களுக்கு  இளைஞர்கள்  அதிக நேரம் ஒதுக்குகின்றனர் ஆனால் 1993 ல் வெளிவந்த உத்தமராச படத்திலேயே செந்தில்  dubsmash செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பம்:

1984 ல் இவருக்கு கலைச்செல்வி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.  பின் இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது.

son marriage

இரண்டும் ஆண் குழந்தைகள் தான். இவருடைய மகன்களின் பெயர்கள் மணிகண்ட பிரபு மற்றும் ஹேமச்சந்திர பிரபு  ஆகும்.

மகன் திருமணம்:

இதில் செந்தில் மகன் மணிகண்ட பிரபு  அவரின் கல்யாணமானது மிக அருமையாக நடைபெற்றது.

கவுண்டமணி அவர்களின் தலைமையில் தான் இவரது கல்யாணம் நடந்தது தாலி எடுத்து கொடுத்தது ஆசீர்வாதம் செய்தார். அது  குறித்த புகைப்படங்களை இணையதளத்தில் பலரும் பார்த்திருப் போம்.

இவரது மகன், விஸ்வாசம் மற்றும் அண்ணாத்த போன்ற வெற்றி படங்களின் இயக்குனரான சிறுத்தை சிவாவிடம் அசிஸ்டன்ட் (  Assistant ) ஆக பணிபுரிந்து வருகிறார்.

இன்னும் சில வருடங்களில் தமிழ் சினிமாவில்  இயக்குனராக செந்தில் மகனை பார்க்க அதிக வாய்ப்பு உள்ளது.

பிடித்த படம்:

கடந்த  சில வருடத்தில் வெளியான படத்தில் இவருக்கு பிடித்த படத்தில் முக்கியமான ஒன்று  “பாகுபலி” படமாம் . அதில் இவரின் நீண்ட நாள் நண்பர் சத்யராஜ் நடித்திருந்தார்.

சத்யராஜ் இந்த வயதிலும்  சூப்பரா  நடித்திருந்தார் மிகவும் பிடித்தது  என்கிறார்.

தற்போதைய நடிப்பு:

நான் நடித்த அந்த கால படங்களில்  படப்பிடிப்பில் கேமெரா ஆன் ( On ) ஆனால் சவுண்ட் நல்லா வரும் அந்த சத்தத்தை வைத்து தான்  கேமரா ஆன் ( On ) செய்யப்பட்டதை உணர்ந்து நடிக்க ஆரம்பிப்போம்.

ஆனால் தற்போது கேமரா ( Camera ) ரொம்ப சைலண்ட் சத்தமே இல்லை அந்த கேமெராவை நோட் பண்ணி அதுக்கும் ஏற்றவாறு நடிக்க பழகிட்டோம்.

2k காமெடி நடிகர்கள்:

இப்போது உள்ள  காமெடி நடிகர்களின் Counter பற்றி இவர் கூறுவது “நாங்கள்  அந்த காலத்தில் செய்ததை தான் கொஞ்ம் உல்டா செய்து இப்பொது ஓட்டி கொண்டுள்ளார்கள்”

actor suriya with senthil

மேலும்  நாங்களும் அந்த காலப்படங்களில் மத்த காமெடி நடிகர்களை பார்த்து copy அடித்துஇருக்கிறோம்.

நாகேஷ், NSK மற்றும் தங்கவேல் போன்ற நடிகர்களின் ஒரு சில  சாயல்களை எனது காமெடி  காட்சிகளிலும் பார்த்திருப்பீங்க.

அதுனால அது தப்பில்லை மக்களை எவ்விதத்தில் சிரிக்க வைக்கிறோம் என்பது மட்டுமே முக்கியம்.

ஹீரோ:

தற்போது உள்ள காமெடி நடிகர்கள்  ஹீரோவாக வேண்டும் என்று அந்த பாதையில் போவது பற்றி இவரின் கருத்து “அவங்க விருப்பம் அது காமெடியானாக நடித்து வெற்றி பெற்ற பின் ஹீரோவாக நடிக்க விரும்பினால் நடிக்கட்டும் அது அவர்கள் விருப்பம் ” என்கிறார்.

இவருக்கும் நிறைய படங்கள்  ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்ததாம் ஆனால் இவருக்கு  காமெடியனாக நடிப்பதில் தான்  அதீத ஆர்வம்  என்பதால்  நடிக்க வில்லை  என கூறுகிறார். ( Do you know comedy actor senthil age? actor senthil age is 70 in 2022 )

பிரச்சனை: 

சில நாட்களுக்கு  முன் நாம் சமூக வலைத்தளத்தில் பார்திருப்போம்.  செந்தில் மற்றும் கவுண்டமணி இருவருக்கும் இடையே சண்டை இருவரும்  பேசிக்கொள்வதே இல்லை போன்ற செய்திகள் பரவி வந்தன.

ஆனால் பரவிவந்த அந்த செய்தி போலி என்று  செந்தில் அவர்களின்  மகனே ஒரு பேட்டியில் தெள்ள தெளிவாக சொல்லி இருந்தார்.

அண்ணன் தம்பி:

மேலும், படத்தில் senthil goundamani ( செந்தில் கவுண்டமணி ) அடித்து கொண்டாலும் நிஜத்தில் அண்ணன் தம்பி மாதிரியான உறவு தான்  இருவருக்கிடையேயும் உள்ளது – செந்தில் மகன்..

அப்போது இருந்து இப்போது வரை  இருவருக்கும் உள்ள உறவு மாறவே இல்லை.

இவர்கள் இருவரை போல சேர்ந்து காமெடியில் கலக்கியவர்கள் முன்பும்  இல்லை  இனியும்  வருவார்களா என்றால் கேள்வி குறி தான் என்று  சொல்கிறார் செந்தில் மகன் மணிகண்ட பிரபு.

400 படங்களுக்கு மேல் செந்திலும் கவுண்டமணியும் சேர்ந்து  நடித்து உள்ளார்கள்  என்பது குறிப்பிட  வேண்டியவை.

Siva

View Comments

  • Table 15 Mean Endpoint and Change from Baseline for the Primary Efficacy Variables in a Study in Patients who Developed ED Following Bilateral Nerve-Sparing Radical Prostatectomy Placebo CIALIS 20 mg N 102 N 201 p-value EF Domain Score Endpoint Change from baseline 13 buy cialis generic

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

2 months ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

5 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

5 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

5 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

6 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

6 months ago