குக் வித் கோமாளி அஸ்வின் பற்றி பலரும் அறியாதவை!
cook with comali ashwin: விஜய் டிவி நிகழ்ச்சிகள் புதுமைக்கு பெயர் போனவை அந்த வரிசையில் பல நிகழிச்சிகள் நடத்தி வெற்றி கண்டு உள்ளது.
நம்ம விஜய் டிவியில் இப்பொது அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ். தற்போது அந்த நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பெயர் போனது தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி.
அந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சில் 8வது போட்டியாளராக வந்தவர் தான் நம்ம அஸ்வின்.
தற்போது விஜய் டிவியின் கனவு நாயகனாக வலம் வரும் நம்ம அஸ்வின் விஜய் டிவியில் மட்டுமல்ல பல பெண்களின் மனதிலும் கனவு நாயகனாக வலம் வருகிறார் அவரை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

நம்ம அஸ்வினின் முழு பெயர் அஸ்வின்குமார். இவருடைய சொந்த ஊர் கோயம்பத்தூர் ஆகும்.இவர் 1991ஆம் ஆண்டு மே-மாதம் 7ஆம் தேதி பிறந்துள்ளார் ( cook with comali ashwin ).
பிறந்தது வளர்ந்தது:
இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாமே கோயம்பத்தூரில் தான். இவரின் தந்தை பெயர் லக்ஷ்மிநாராயன். மேலும் இவர் தனது பள்ளிப் படிப்பை கோவையில் உள்ள கார்மல் கார்டன் ஸ்கூலிலும் (CARMELGARDEN).
பின்னர் தனது கல்லூரிப்படிப்பை கோவையில் பிரபல கல்லூரியான குமரகுரு காலேஜ் ஆப் டெக்னாலஜில்(KUMARAGURU COLLEGE OF TECHNOLOGIES) முடித்தார்.இங்கு இவர் இன்ஜினீரிங் படிப்பில் மெக்கானிக்கல் துறையை படித்துள்ளார்.
பின்னர் மேல்படிப்பினையும் கோவையில் தான் முடித்தார். MBA படிப்பை கோவையில் மிகப் பிரபலமான கல்லூரியான PSG Institute of Management)யில் முடித்தார்.
சினிமாவின் மீது ஆர்வம் :
கோயம்பத்தூரில் கதை திரைக்கதை வசனம் என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது அப்பொழுது அஸ்வின் அங்குச் சென்று அந்தப் படத்தின் இயக்குனர் பார்த்திபனை சந்தித்துள்ளார். உடனே பார்த்திபன் அவர்களும் நாளை ஷூட்டிங்கிற்கு வர சொல்லி உள்ளார்.
இவர் அடுத்த நாள் படப்பிடிப்பிற்கு சென்று அந்தப் படத்தில் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து சின்ன வசனத்திற்கு நடித்துக் கொடுத்தாராம்.
அந்தப் படப்பிடிப்பு தலத்தில் இருந்தவர்கள் இவரை நீங்க சினிமாவில் ட்ரை பண்ணலாமே என்றனராம் இதுவே இவருக்கு மிகப் பெரிய உந்துதலாக இருந்ததாம்.

எந்த ஒரு ஆடிஷனும் இல்லாமல் தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மிகவும் சந்தோசம் அடைந்தாராம் நம்ம அஸ்வின். அந்த படப்பிடிப்பில் இருந்தே இவருக்கு நடிப்பின் மீது நம்பிக்கை வந்துவிட்டதாம்.
ஓ காதல் கண்மணி:
பிறகு இவர் படவாய்ப்பிற்காக சென்னை சென்று உள்ளார். அங்கு மணிரத்தினம் அவர்களின் படத்தில் நடிக்க ஆடிஷன் சென்றாராம்.
ஓ காதல் கண்மணி படத்தில் சிறிய வேடம் கிடைத்ததாம் இந்த வாய்ப்பு இவருக்கு மிகவும் சந்தோசத்தினை குடுத்ததாம்.
ஏனெனில் இவருக்கு மணிரத்தினம் அவர்களின் படங்கள் என்றால் மிகவும் பிடிக்குமாம். அதே போல அவரின் படத்தில் சின்ன வேடம் கிடைத்ததே மிக பெரிய வெற்றி என நினைத்தாராம்.
ரெட்டை வால் குருவி :
பின்னர் இவர் (விஜய் டிவி) ரெட்டை வால் குருவி என்ற தொடரின் மூலமே சின்னத் திரைக்கு அறிமுகம் ஆனார்.ஜெரால்டு இயக்கத்தில் இவர் நடித்த இரட்டை வால் குருவி தொடர் 2015இல் வெளிவந்தது.
பாலமுருகன் என்ற பெயரில் அஸ்வின் நடித்து இருந்தார் இவருக்கு ஜோடியாக நிலா என்ற பெயரில் பவானி ரெட்டி நடித்து இருந்தார்.
ஆனால் இந்தத் தொடர் எதிர் பார்த்த அளவுப் பிரபலம் அடையவில்லை 5மாதங்கள் மட்டுமே இத்தொடர் ஒளிபரப்பட்டது.
நினைக்க தெரிந்த மனமே (2017) என்ற தொடரிலும் நடித்து இருந்தார். இந்தத் தொடரும் சில மாதங்களிலே நிறுத்த பட்டது.
விளம்பர படங்கள் :
இவர் திரை உலகில் மட்டுமில்லாமல் விளம்பர படங்களிலும் நடித்து உள்ளார் இதில் இவர் பல பிரபலமான விளம்பரங்களில் நடித்து இருந்தார்.
குறும்பட நாயகன் :
ரிதம் என்ற குறும் படத்திலும் நடித்து உள்ளார் இந்தப் படத்தில் அஸ்வினின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது
3SCENES என்ற குறும்படத்தில் நடித்து உள்ளார்.
இந்தப் படத்தில் இவர் பேசும் வசனங்களும் இவர் முக பாவனைகளும் இவருக்குப் பல பெண் ரசிகர்களைக் கொடுத்தது.அதோடு இல்லாமல் இந்தப் படத்தின் வசனங்கள் டிக் டாக் போன்ற சமூக வலை தளங்களில் பலராலும் விரும்பப்பட்டது.
இந்த நிலை மாறும் என்ற குறும் படத்திலும் நடித்துள்ளார்.இது ஒரு சமூகம் சார்ந்த படமாகும்.
ஆதித்ய வர்மா :
இவரின் 3 SCENES குறும்படத்தினை பார்த்து ஆதித்திய வர்மா படத்திற்கு நடிக்கும் படி அழைப்பு வந்தது இந்தப் படத்திற்கும் இவருக்கு ஆடிஷன் வைக்க வில்லையாம்.
இந்த படத்தில் பணிசெய்து கொண்டு இருக்கும்போது விக்ரம் மற்றும் துருவ் இருவரின் அப்பா மகன் பாசத்தினை பார்த்து மிகவும் பொறாமையாக இருந்ததாம்பின்னர் இவரை இவரே சமாதான படுத்தி கொண்டாராம்.
இந்தப் படத்தில் இவர் துருவ் விக்ரமிற்கு அண்ணனாக நடித்து இருந்தார்.

பின்னர் இந்த படத்தின் தந்தையாக நடித்த ராஜா என்பவருக்கும் இவருக்கும் நிஜ அப்பா மகன் உறவுபோல தான் இருந்ததாம்.
இந்த படத்தினை பார்த்து பலர் உங்கள் நடிப்பு நன்றாக இருந்தது என்று பாராட்டினாராம்.
காதல் ஒன்று கண்டேன் :
பின்னர் இவர் புனித் இயக்கத்தில் காதல் ஒன்று கண்டேன் என்ற குறும்படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் தற்போது சமூக வலை தளங்களில் கலக்கி கொண்டு இருக்கிறது.
பல ரசிகர்களை பெற்றுள்ளது இந்த படத்தில் நட்சத்தர மற்றும் ரியோ, சார்லி போன்றோர் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கின்றனர்.
இந்த படத்தில் நம்ம அஸ்வின் மாத்தியூ என்ற பெயரில் இன்ஸ்பெக்ட்ராக வலம் வருகிறார். இவர் மற்றும் நட்சத்தர இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சி அணைத்து சிங்கிள்ஸ் (singles)களையும் கோவப் படவைக்கும் அந்த அளவு இருவரின் நடிப்பு இருந்துள்ளது எனலாம்.
காதல் மற்றும் சண்டை காட்சிகளில் அஸ்வின் தன்னுடைய முழு திறனையும் காட்டியுள்ளார் இந்த படத்தில் நடித்ததை பார்த்து இந்த படத்தின் இசை அமைப்பாளர் சித்து குமார் இவரை மிகவும் பாராட்டினாராம் இந்த படத்திற்கு (Best Short Film Award)என்ற விருது கிடைத்துள்ளது.
குக் வித் கோமாளி – cook with comali ashwin
தற்போது குக் வித் கோமாளி ஷோவில் நம்ம அஸ்வின் கலக்கி கொண்டு இருக்கிறார் இவரின் புன்னகை தான் இவருக்கு பிளஸ் எனலாம்.
இதில் சிவாங்கி மற்றும் சுனிதா இருவருக்கும் இடையில் அஸ்வினுகனா போட்டியே நடக்கிறது. இதில் சிவாங்கி மற்றும் அஸ்வினின் ஜோடி பலராலும் ரசிக்கப்படுகிறது.

குக் வித் கோமாளி ஷோவிருக்கு பிறகு அஸ்வினுக்கு ஏற்கனவே இருந்த பெண்ரசிகர்களை விட இன்னும் அதிகமாகி உள்ளனர்.இவர் விஜய் டிவியில் பல ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளார் ஆனால் தற்போது தான் பலராலும் கவனிக்க படுகிறார்.
சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல கிடைத்த அனைத்து வாய்ப்பினையும் உபயோகித்து கொண்டார்.
அஸ்வின் தற்போது அது அனைத்தும் சேர்த்து தான் இவருக்குப் பல ரசிகர்களை பெற்று கொடுத்து உள்ளது எனலாம்.
இவர் வெள்ளித்திரையில் ஹீரோவாக வலம் வர சிறிது நாள்களே உள்ளது. அதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.
The symptoms depend on the tumors size location how far it has spread and whether there is swelling. how to take stromectol Generika Fur Levitra
Hi i am kavin, its my first occasion to commenting anywhere,
when i read this article i thought i could also make comment
due to this brilliant article.