சித்தி 2 ப்ரீத்தி சர்மா யார் தெரியுமா?
chithi 2 preethi sharma : சன் டிவி யில் பல தொடர்கள் ஒளிபரப்பப்பட்டு உள்ளது ஆனால் பலருக்கும் ஞாபகமுள்ள தொடர் என்றால் அது சித்தி தொடர் தான்.
இந்த தொடர் 90களில் பெரிய அளவு பேசப்பட்ட ஒரு தொடராகும் இந்த தொடருக்கு பல தரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
ஆம் இந்த தொடரை குழந்தைகளாக பார்த்த அனைவரும் தற்போது பெரியவர்களாகி விட்டனர். இருப்பினும் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு குறைய வில்லை.
தற்போது சித்தி இரண்டாம் பாகம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டு வருகிறது. ஒளிபரப்பப்பட்ட சில நாள்களில் ரசிகர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளது.
இந்த தொடரில் தற்போது ஹீரோஹினாக நடித்து வரும் வெண்பா என்கிற ப்ரீத்தி சர்மா பற்றின தகவல்களை இங்குக் காணலாம்.
தனிப்பட்ட தகவல்கள் :
இவருடைய உண்மையான பெயர் ப்ரீத்தி சர்மா. இவர் 1999ஆம் ஆண்டுத் ஜனவரி மாதம் 31தேதி உத்திர பிரதேசத்தில் உள்ள லக்னோவில் பிறந்துள்ளார். பின்னர் இவருடைய குடும்பம் தமிழ்நாட்டில் கோயம்பத்தூருக்கு புலம் பெயர்ந்துள்ளது.

இவர் இவருடைய பள்ளி மற்றும் கல்லுரிப் படிப்பை கோயம்பத்தூரில் உள்ள PSGR Krishnammal College For Women, Coimbatore படித்தார். தற்போது கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
சினிமா ஆசைகள் :
ப்ரீத்தி ஷர்மாவிற்கு சிறு வயது முதலே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாம்.
பள்ளி படித்துக் கொண்டு இருக்கும் போதே பல ஆடிஷனலில் கலந்து கொண்டுள்ளார். மேலும் இவர் பல மாடல் ஷோக்களில் கலந்து கொண்டு உள்ளார்.
இவருடைய முதல் பயணம் ஜீ தமிழ் ஒளிபரப்பான அதிர்ஷ்டலக்ஷ்மி ஷோவில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் விக்கி என்பவருடன் கலந்து கொண்டு தன் திறமையை வெளிக்காட்டினார் ப்ரீத்தி.
கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை:
‘கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை’ என்ற ஷார்ட் பிலிமின் மூலம் மக்களுக்கு பிரபலம் ஆனார் ப்ரீத்தி.
இவர் பள்ளி படித்துக் கொண்டு இருக்கும் பொழுது இவருக்கு இந்த வாய்ப்பு வந்துள்ளது முதலில் இவர் வேண்டாம் என்று கூறியுள்ளார்.

பின்னர் இவருடைய அம்மா சரி ஒரு முறை முயற்சி செய்து பார் என்று சொன்னதால் இவரும் சரி என்று நடித்துள்ளார்.
இந்த கதையில் ஹீரோவாக அஜய் மற்றும் ஹீரோயினாக ப்ரீத்தியும் நடித்து இருந்தனர். மேலும் இதில் விஜய் டிவி பிரபலங்களான தீனா மற்றும் சரத் நடித்து இருந்தனர்.
இந்த ஷார்ட் பிலிமில் நடித்தபிறகு ப்ரீத்திக்கு திரை உலகில் அவ்வளவாக எந்த வாய்ப்பும் கிடைக்க வில்லை இதனால் மீண்டும் இவர் தன்னுடைய படிப்பின் மீது கவனம் செலுத்த தொடங்கி விட்டாராம்.
பின்னர் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் பொழுது மீண்டும் இவருக்கு சினிமா ஆசை வந்துள்ளது அதனால் பெற்றோர் சம்மதத்துடன் இவர் சென்னை வந்துள்ளார். அங்கு ஒரு ஹாஸ்டலில் தங்கி சினிமா வாய்ப்பு தேடி வந்துள்ளார்.
அந்த சமயம் இவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்க வில்லையாம் அதனால் மீண்டும் தன் சொந்த ஊருக்கு சென்று விட்டாராம். அப்போது இயக்குனர் ஜவகர் அவர்களின் உதவியாளரிடம் இருந்து இவருக்கு அழைப்பு வந்ததாம்.
ஒரு ஆல்பம் சாங்கில் நடிக்க முடியுமா எனக் கேட்டு உள்ளனர் இவரும் சரியென நடித்துள்ளார். அந்த ஆல்பம் சாங்கில் சித்து உடன் இணைத்து நடித்து இருந்தார்.
திருமணம் :
திருமணம் தொடர் வாய்ப்பு இவருக்கு வந்துள்ளது. கோபிகாந்த் அவர்களின் இயக்கத்தில் அனித்தா என்ற கதாபாத்திரத்தில் கலர்ஸ் தமிழ் சேனல்ளில் நடித்து இருந்தார்.
மேலும் இந்த தொடரில் கதாநாயகியின் தங்கையாக முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார்.
இந்த தொடரில் தீபக் குமார் என்பவர் நவீன் என்ற பெயரில் இவருக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
இருவரின் காதல் காட்சிகள் மக்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தது.

இவர்கள் இருவரையும் நிஜ ஜோடிகள் என மக்கள் நினைத்தனர். மேலும் இவர்கள் இருவரின் டிக் டாக் வீடியோ மிகவும் பிரபலம் அடைந்தது.
இந்த தொடரில் நடித்துக் கொண்டு இருக்கும்பொழுது ப்ரீத்திக்கு சித்தி 2வில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இருந்தாலும் இவருக்கு திருமணம் தொடரில் இருந்து விலக மனம் வர வில்லையாம்.
பின்னர் இவரால் டைம் மேனேஜ் செய்ய முடிய வில்லையாம் அதனால் இந்த தொடரில் இருந்து விலகிக் கொண்டு உள்ளார்.
சித்தி 2 :
தற்போது சித்தி 2 சீரியலின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார் எனலாம்.ஆம் சித்தி 2வில் வெண்பா என்ற கதா பாத்திரத்தில் நடிக்கிறார்.
ராதிகா சரத்குமாருக்கு மகளாகவும் வெண்பாவிற்கு ராதிகா சரத்குமார் சித்தியாகவும் நடித்துக் கொண்டு இருக்கின்றனர். ப்ரீத்திக்கு ஜோடியாக நந்தன் லோகநாதன் கவின் என்ற பெயரில் நடிக்கிறார்.
கதை சுருக்கம் :
வெண்பா ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் தன் சித்தியால் செல்லமாக வளர்க்க படுகிறாள். வெண்பா கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் வெண்பாவிற்கு ஒரு கம்பெனியில் வேலை கிடைக்கிறது.

அங்கு வேலை செய்து கொண்டு இருக்கும்பொழுது அந்த கம்பெனி முதலாளியான கவினுக்கும் வெண்பாவிற்கும் காதல் மலருகிறது.
பின்னர் வெண்பாவின் விருப்பம் இல்லாமல் கவின் வெண்பாவை திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் ராதிகாவின் உண்மையான மகளான யாழினி கவினை ஒரு தலையாக காதலிக்கிறார்.
இந்த திருமணத்தை யாழினியல் ஏற்க முடிய வில்லை அதனால் மிகவும் கோபப்படுகிறார் இதனால் வெண்பா யாழினியிடம் சரி நீங்கள் கவினின் மனதை ஆறு மாதத்திற்குக்குள் மாற்றி விட்டால்,
நான் கவினின் வாழ்க்கையில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்றும் மேலும் இதைப் பற்றி நான் யாரிடம் சொல்லமாட்டேன் யாருக்கும் தெரியாமல் இருக்கும் என்று சொல்கிறார்.
தற்போது யாழினி கவின் மனதை மாற்ற வழி செய்து கொண்டு இருக்கிறார். யாழினி கவின் மனதை மாற்றுவார இல்லை கவின் வெண்பாவை தவிர வேறு யாரையும் தன் வாழ்க்கையில் ஏற்பாரா என்று வரும் தொடர்களில் பார்க்கலாம்…
திருமணம் தொடரில் நடித்துக் கொண்டு இருக்கும்பொழுது இவருக்கு நிரோஷா அவர்களிடம் இருந்து அழைப்பு வந்துள்ளதாம். ஒரு ஆடிஷன் இருக்கு வந்து பாருங்க என்று சொன்னாராம். இவரும் ஆடிஷனில் கலந்து கொண்டு உள்ளார்.

பின்னர் இரண்டு நாள்கள் கழித்து நீங்கள் தேர்வாகி விட்டர்கள் என்று கூறினாராம். இவருக்கு ஆச்சிரியம் தாங்க முடியவில்லையாம்.
இந்த தொடரில் நடிப்பதற்கு முன்னர் இவருக்கு சித்தி தொடரை பற்றி எதுவும் தெரிய இருந்ததாம். பின்னர் சமூக வலை தளங்களில் தேடிய பொது தான் சித்தி முதல் பாகத்தின் வெற்றியினை தெரிந்து கொண்டாராம்.
இந்த தொடரில் முதல் நாள் நடிக்கும்பொழுது இவருக்கு மிகவும் பயமாக இருந்ததாம் ஆனால் ராதிகா அவர்கள் இவருக்கு மிகவும் துணையாக இருந்தராம். ராதிகா அவர்களின் நடிப்பை பார்த்து இவர் மிகவும் வியந்து விட்டாராம்.
தற்போது சித்தி தொடரில் இருந்து ராதிகா அவர்கள் விலகி உள்ளார். அது மக்களுக்கு சற்று ஏமாற்றத்தை தந்துள்ளது எனலாம்.
இந்த தொடரின் மூலம் வெண்பா மற்றும் கவின் கதாப்பாத்திரத்தில் நடித்த இருவரும் தமிழ் நாட்டு மக்களின் மனதில் பெரிதும் இடம் பெற்று விட்டனர். ஒரே தொடரில் புகழின் உச்சத்தில் உள்ளார் ப்ரீத்தி.
இவர் இந்த தொடருக்கு பின்னர் பல ரசிகர்களைப் பெற்றுள்ளார் ப்ரீத்தி. மேலும் இவர் இந்த தொடருக்கு வரும்பொழுது இவ்வளவு ரசிகர்கள் கிடைக்கும் என எதிர்பார்க்க வில்லையாம்.
டிக் டாக்:
இவர் பயங்கரமான டிக் டாக் ரசிகையாகும் ஆம் டிக் டாக்கில் பல வீடியோக்களை அப்லோடு செய்து மக்களிடத்தில் பிரபலம் அடைந்துள்ளார் சீரியல் ரசிகர் மட்டுமில்லாமல் டிக் டாக் ரசிகர்களும் இவருக்கு உள்ளனர்.
டிக் டாக் செய்து சமூக வலை தளங்களில் வெளியிடுவது இவருக்கு மிகவும் பிடித்தமான விஷயமாம். தற்போது டிக் டாக் செயலி முடங்கப்படவே இன்ஸ்டாகிராம் பக்கம் தாவியுள்ளார் ப்ரீத்தி.
இதில் இவர் போடும் போட்டோஸ் களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
தற்போது ப்ரீத்திக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே கனவாக உள்ளது.முயற்சி மட்டுமே நம் வாழ்க்கையை மாற்றும் என்பது எழுதப்படாத விதியாகும் அந்த விதி நம்ம ப்ரீத்தியின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது.