பாரதி கண்ணம்மா சௌந்தர்யா லட்சுமி யார்?

bharathi kannamma soundarya lakshmi: தற்போது விஜய் டெலிவிஷனில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பு ஆகும் ஒரு தொடர் தான் பாரதி கண்ணம்மா.


இத்தொடர் தொடர் பல எபிசோடுகள் மற்றும் பல திருப்பங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இத்தொடரில் தற்போது புதிய வரவாக இணைத்து இருப்பவர் தான் பேபி  ரக்சா.


இந்த கட்டூரையில் நாம் ரக்சா பேபியினை பற்றின இனிப்பான தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்.

பிறந்தது வளர்ந்தது


நம்ம ரக்சா சென்னையில் பிறந்தவர் தற்போது சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்துக் கொண்டு இருக்கிறார்.


ரக்சா தற்போது படிப்பில் மட்டுமில்லாமல் திரைத்துறையிலும் கலக்கி கொண்டு இருக்கிறார்.

bharathi kannamma soundarya lakshmi real family


ரக்சாவின் அப்பா பெயர் ஷியாம் (நடிகர்) அம்மாவின் பெயர் சௌமியா பின்னர் இவருக்கு ஒரு அக்காவும் உண்டு அவர் பெயர் நிவாஷினி.

கலைக்குடும்பம் :


பாரதி கண்ணம்மா தொடரில் கலக்கி வரும் நம்ம ரக்சாவின் குடும்பம் ஒரு கலை குடும்பம் ஆகும்.
ரக்சாவின் அப்பா ஷியாம் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கலக்கி கொண்டு இருக்கிறார்.

ஷியாம் கோலங்கள் மற்றும் தென்றல் போன்ற பல வெற்றி சீரியல்களில் நடித்துள்ளார்.


இவர் மேலும் பல வெற்றி படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார்.


ரக்சாவின் தந்தை மட்டுமில்லாமல் இவருடைய அக்காவான நிவாஷினி சின்னத் திரை தொடர்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

bharathi kannamma soundarya lakshmi

நிவாஷினி 2014 இல் வெற்றிகரமாக சின்னத்திரையில் ஓடிக்கொண்டு இருந்த கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் பூஜா என்ற பெயரில் நடித்து இருந்தார். இத்தொடரில் இவரின் நடிப்பு மிகவும் பாராட்ட பட்டது.


தற்போது விஜய் டெலிவிஷனில் ஒளிபரப்பு ஆகும் செந்தூரப்பூவே தொடரில் ரஞ்சித் நடிக்கிறார். இவருக்கு முதல் மகளாக கனிமொழி  என்ற பெயரில்  நிவாஷினி  நடிக்கிறார்.


தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடிக்கு பாயும் என்ற பழமொழிக்கு ஏற்றவாரு நம்ம ரக்சா குட்டியின் திரை பயணம் உள்ளது.

ரெமோ வாய்ப்பு :


ரக்சா சின்னத் திரையில் தோன்றுவதற்கு முன்பே வெள்ளி திரையில் முகம் காட்டி உள்ளார். 2016 சிவாகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரெமோ படத்தில் நான்சி என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருப்பார்.


ரக்சாவின் அக்கா நிவாஷினி  டப்பிங் சென்று இருந்த போது இவரும்  உடன் சென்று இருந்தார் அப்போது விஜய் டிவி எடிட்டர் அருண் ரெமோ படத்தின் இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணாவை தொடர்பு கொண்டு ரக்சாவை பற்றிக் கூறினார்களாம்.

bharathi kannamma soundarya lakshmi in remo movie - sivakarthikeyan


ஆடிஷன்னுக்கு அழைத்துச் சென்றபொழுது இவரை இயக்குனர் நடிக்க சொன்னாராம் அப்போது இவர் தன் தந்தையிடம் “நீங்க சிவகார்த்திகேயன் அங்கிள் கூடத்தான நடிக்கணும் சொன்னீங்க இப்போ தனியா நடிக்க சொல்லுறீங்க என்றராம்”.

இதைக் கேட்டு இவரின் தந்தைக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லையாம் பின்பு சிவகார்த்திகேயன் வரவே அவருடன் இணைந்து நடித்தாராம்.


அந்தப் படத்தில் இவரின் மழலை கலந்த பேச்சும் மற்றும் மற்றவரிடம் கோவித்து கொள்வதும் அவ்வளவு அழகு. நான்சி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார்.


நம்ம ரக்சா இந்தப் படத்தில் உடல் நலம் சரி இல்லாமல் ஹாஸ்பிட்டலில்  இருக்கும் குழந்தையாக நடித்து இருப்பார்.

இவர் எல்ரோரிடமும் பழகாமல் தனியாக இருப்பார் இவரைப் பார்த்தவுடன் ரெமோ சிவகார்திகேயனுக்கு  பிடித்துப் போகிறது பின்பு இவரைச் சந்தோசப்  படுத்த ஒரு சில மேஜிக் மற்றும் காமெடிசெய்து இருப்பார்.


இவருக்கு ஹைலைட்டே இவரின் கொலு கொலு கன்னங்களும் மழலை மாறாத பேச்சும் தான்.ஆனால் இப்பொது சௌந்தர்யா லட்சுமியாக கலக்கி கொண்டு இருக்கிறார்.


இதில் சிவகார்த்தேக்கன் அவர்கள் நடிப்பது தன்னுடைய குழந்தையுடன் நடிப்பது போலவே இருக்கும். உண்மையை சொல்ல போனால் இருவரும் நடிப்பது போன்று இல்லாமல் நிஜ வாழ்வில் இருவரும் பேசிக்கொள்வது போலே இருக்கும்.

 
ஆச்சரிய பட வேண்டிய விஷயம் என்னவென்றால் முதல் படத்திலே பல படம் நடித்த அனுபவம் உள்ளவர் போன்று நடித்து இருந்தார்.


ஒரு பெயர் தெரியாத படத்திலும் நடித்துக் கொண்டு இருக்கிறார் என்று ரக்சாவின் தந்தையான ஷியாம் ஒரு நேர்கானலில் கூறியுள்ளார்.

சௌந்தராய லட்சுமி – bharathi kannamma soundarya lakshmi :

ரெமோ படத்தில் சிவா கார்திகேயனுடன் இணைந்து நான்சியாக கலக்கிய நம் ரக்சா தற்போது பாரதி கண்ணம்மா தொடரில் சௌந்தர்யா லட்சுமியாக நடித்துக் கொண்டு இருக்கிறார்.

Child artist nivashini sister


இத்தொடரில் கண்ணம்மாவிற்கு இரு குழந்தைகள் பிறந்தன அவர்களில் ஒரு குழந்தை தான் சௌந்தராய லட்சுமி இவள் தற்போது தான் தாயுடன் இருக்கிறார் மிகவும் கோவம் மற்றும் தெளிவான எண்ணத்துடனும் நல்ல குணத்துடனும் வலம் வருகிறார்.


அந்த நாடகத்தில் பாரதியின் அம்மாவான சௌந்தர்யாவை போலக் குணத் தோற்றமுள்ள குழந்தையாக காட்சி படுத்த பட்டு இருக்கிறார்.

இதில் அதிசயம் என்ன வென்றால் இவர் நடிப்பும் சௌந்தர்யாவை போன்று உள்ளது. அவ்வளவு அருமையாக நடிக்கிறார்.


பாரதி கண்ணம்மா தொடரின் ரசிகர்கள் நம்ம ரக்சாவின் ( bharathi kannamma soundarya lakshmi ) கராறான நடிப்பை பார்த்து உதட்டின் ஓரத்தில் சிறு புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.


நம்ம ரக்சாவிற்கு நடனம் ஆடுவது  மற்றும் பாடல் பாடுவது மிகவும் பிடிக்குமாம். இவருக்கும்.இவர் அக்காவிற்கும் நடிகர் சிவகார்த்திகேயனை மிகவும் பிடிக்குமாம்.


வெள்ளி திரை வாய்ப்புகள்: ரக்சா பாப்பாவிற்கு பல வெள்ளி திரை வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன கூடிய விரைவில் அவரை மீண்டும் வேறொரு கலக்கும் கதாபாத்திரத்தில் காண்போம்.

6 thoughts on “பாரதி கண்ணம்மா சௌந்தர்யா லட்சுமி யார்?

Leave a Reply

Your email address will not be published.

Follow Us

Subscribe us on Youtube